என் மலர்
நீங்கள் தேடியது "திருநங்கைகள் தர்ணா"
- பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என புகார்
- கலெக்டர் சமாதானம்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது.
அப்போது, 20க்கும் மேற்பட்ட திருநங்கைகள் அங்குவந்து, வேலுார், திருப்பத்தூர் மாவட்டங்களில் திருநங்கைகளுக்கு வீட்டுமனை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பலமுறை மனு கொடுத்தும் வீட்டு மனை வழங்கவில்லை என கூறினர்.
பின்னர் தங்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும்கோஷங்களை எழுப்பினர். சிறிது நேரத்துக்கு பிறகு, எல்லாரும் திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். கலெக்டர் கார் அருகில் அமர்ந்து அவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த துணை கலெக்டர் தாரகேஸ்வரி அங்குவந்து திருநங்கைகளை சமா தானம் செய்யமுயன்றார்.
மேலும், அலுவலகத்து க்குள் வந்து கலெக்டரை சந்திக்கும்படி கூறினார். ஆனாலும், அதை ஏற்க மறுத்து, தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.அத ன்பேரில், இன்ஸ்பெக்டர் (திமிரி) மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் அங்கு வந்து திருநங்கைகளை ஓரமாக சென்று அமரும்படி கூறினார்.
மேலும், அவர்களில் 4 பேர் மட்டும் கலெக்டரை சந்தித்து முறையி டலாம் என அறிவுறுத்தி னார். அதை மீறி தொடர்ந்து போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என போலீசார் எச்சரித்தனர்.
இதைய டுத்து, திருநங்கைகள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் அவர்களில் 4பேர் மட்டும் கலெக்டரை சந்தித்தனர். அப்போது கலெக்டர் திருநங்கை களின் மனுக்கள் பரிசீலனையில் இருப்பதாகவும், தகுதியான வர்களுக்கு அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என தெரிவித்தார். இதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.






