என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் விஸ்வதாஸ் நகரை சேர்ந்தவர் பரனீதரன். இவரது மனைவி சசிகலா (வயது28). இவர்களது வீட்டின் அருகில் தனலெட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவரது சகோதரன் செந்தில்குமார். இவர் திருச்சியில் உள்ள ஹோட்டலில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி திருவிழாவிற்காக செந்தில் குமார், சசிகலா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சசிகலாவின் நான்கு வயது மகளிடம் தகாத முறையில் நடந்துள்ளார்.
இது குறித்து சசிகலா கொடுத்த புகாரின்பேரில், புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி செந்தில்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்.
இதே போல் குளத்தூர் தாலுகா, வெள்ளனூர் காவல் சரகத்திற்குட்பட்ட மேல முத்துடையான் பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி (42). இவரது 9&ம் வகுப்பு படித்து வரும் மகளை, அதே பகுதியை சேர்ந்த முத்து(67) என்பவர் பாலியியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
இதுகுறித்து பெரியசாமி கொடுத்த புகாரின் பேரில், புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலைவாணி முத்துவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வேம்பன்பட்டி சுப்பிரமணியசாமி கோவில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு வருகிற 18-ந் தேதி வெள்ளிக்கிழமை இரவு தேரோட்டம் நடைபெறுகிறது.
இந்த நிலையில் சாலை செப்பனிடுவதற்காக ஜல்லி கற்கள் பரப்பப்பட்டு சாலை பணிகள் முழுமை பெறாமலும் கோவிலின் எதிர்புறம் ஜல்லி கற்கள் குவியலாகக் கொட்டப்பட்டு இருந்தது.
இதனால் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் மிகவும் சிரமமாக இருக்கும் என்றும் பணிகளை விரைந்து முடிக்கவும் கிராம பொதுமக்கள் அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்களின் இந்த கோரிக்கையை ஏற்று கந்தர்வகோட்டை ஒன்றியக் குழுத் தலைவர் கார்த்திக் மழவராயர் நேரில் ஆய்வு மேற்கொண்டதோடு, சாலை பணிகளை தொடங்கிவைத்து பணிகளை விரைந்து முடிக்கவும், கொட்டப் பட்டிருந்த ஜல்லி கற்கள் அகற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையால் சாலைகள் பராமரிக்கப்பட்டு வந்தன.
மேலும் சாலையின் நடுப்பகுதியில் இருபுறமும் ஒளிரக் கூடிய சாலை விளக்குகள் பொருத்தப்பட்டு இரவு நேரங்களில் ஒளிரும் வண்ணம் தானியங்கி கருவிகள் மூலம் செயல் படுத்தப்பட்டு வந்தது.
இந்தநிலையில் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள சாலை விளக்குகள் கடந்த இரண்டு மாதங்களாக செயல் படவில்லை.
அதிகாரிகளிடம் பல முறை சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இரவு நேரங்களில் தினசரி விபத்துக்கள் ஏற்படும் வண்ணம் உள்ளது.
கந்தர்வகோட்டை நகரில் முஸ்லிம் தெரு உடையார் தெரு அம்பலகாரர் தெரு செட்டி சத்திரம் தெரு உள்ளிட்ட முக்கிய தெருக்களின் பொதுமக்கள் இந்த சாலையை அதிகம் பயன் படுத்துகின்றனர்.
எனவே பொதுமக்களின் நலன் கருதியும், விபத்துக்கள் தடுக்கும் வகையிலும் சாலையில் உள்ள மின் விளக்குகள் செயல்பட நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் அருணாச்சல நகர் 8-வது தெரு பகுதியை சேர்ந்தவர் முகமது பஷீர் (வயது 45). இவர் வழக்கம் போல் மதியம் சாப்பிட்டு விட்டு மனைவியுடன் வீட்டில் இருந்தார். அப்போது திருமணமாகி வெளியூரில் கணவருடன் வசித்து வரும் அவரது மூத்த மகள் வீடியோ காலில் அவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சமீரா பானு என்ற பெண் அவரது வீட்டுக்கு வந்தார். உடனே முகமது பஷீரின் மனைவி அவருக்கு உணவு பரிமாறினார். இதற்கிடையே அடையாளம் தெரியாத 3 மர்ம ஆசாமிகள் திடீரென்று அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்தனர்.
இதனை சற்றும் எதிர்பாராத முகமது பஷீர் அவர்களிடம் யார் நீங்கள், உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருந்தார். அப்போது அந்த நபர்கள் முகமது பஷீர் அவரது மனைவி மற்றும் சமீராபானு ஆகியோரை கத்தி முனையில் மிரட்டினர்.
இதனால் அவர்கள் அதிர்ச்சியல் உறைந்தனர். பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் வீட்டின் பீரோவில் இருந்த நான்கு பவுன் தங்க சங்கிலி, வெள்ளி கொலுசு, உயர்தர கைக்கடிகாரம் ஆகியவற்றை திருடிக்கொண்டு அங்கு தயார் நிலையில் நின்று கொண்டிருந்த 2 இருசக்கர வாகனங்களில ஏறி தப்பிச் சென்றனர்.
பட்டப்பகலில் சில மணித் துளிகளில் நடந்தேறிய இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி பாதிக்கப்பட்ட முகமது பஷீர் எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பேபி உமா வழக்குப்பதிவு செய்து உறையூர் எழில்நகர் கல்நாயக்கன் தெரு பகுதியைச் சேர்ந்த நவீன் (27)திருவெரும்பூர் சுருளி கோவில் தெரு பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்கிற பார்த்திபன் (30 )ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இந்த இருவர் மீதும் உறையூர், அரியமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த வழக்கில் மேலும் 2 பேருக்கு தொடர்பு உள்ளது. தப்பிச்சென்ற அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் தாலுகா வடக்கூரில் அமைந்து அருள்பாளித்துவரும் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ ஆதிகைலாசநாதர் திருக்கோவிலில், திருப்பணிகள் நிறைவு பெற்று ஆவுடையார்கோயில் சுற்றுவட்டார கிராமத்தார்களால் கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. இதற்காக யாகசாலை அமைத்து கடந்த 11-ந் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.
அதனைத்தொடர்ந்து நான்கு நாட்களாக ஐந்து கால யாகபூஜை சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான இன்று ஆறாம் கால யாக பூஜை முடிவுற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது.
கடம்புறப்பாடானது கோவிலை வலம் வந்து பின்பு கோபுர கலசத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து வைத்தியநாதத் தம்பிரான் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஆவுடையார்கோயில், புண்னியவயல், கருப்பூர், பாண்டிபத்ரம்,பரமந்தூர் பகுதியைச் சுற்றியுள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்து சிவகாமசுந்தரி சமேத ஆதிகைலாசநாதர் சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தஞ்சை மாவட்டம் பூவனம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, கணக்கன் காட்டில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது தாய் வீட்டிற்கு, 10-ம் வகுப்பு படித்து வந்த மகளை அனுப்பியுள்ளார்.
அப்போது அந்த வீட்டில் இருந்த சிறுமியின் உறவினரும், தொழிலாளியுமான முருகேசன் என்பவர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அந்த சிறுமி தனது தாயிடம் தெரிவித்தார். அவர் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி முருகேசனை கைது செய்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், நீதிபதி சத்யா இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். சிறுமியை தொடர் பாலியல் வன் கொடுமை செய்தமைக்காக முருகேசனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் , அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் இழப்பீட்டு தொகையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். தீர்ப்பு அளிக்கப்பட்டபின் முருகேசன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வம்பன் ஸ்ரீ வீரகாளிய ம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழாவை முன்னிட்டு, மாஞ்சன்விடுதி மற்றும் கொத்தக்கோட்டை ஊராட்சி இணைந்து நடத்தும் மாபெரும் மாட்டு வண்டி மற்றும் குதிரை பந்தயம் நடைபெற்றது.
மாட்டு வண்டி, மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயத்தை மழவராயன்ப ட்டி கிராமத்தைச்சேர்ந்த ஜோதி மழவராயார் மற்றும் ஆலங்குடி கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தனர். விழாவில் நகரச்செயலாளர் பழனிவேல், ஒன்றியசெயலாளர் பெரியசாமி முன்னாள் கூட்டுறவு சங்கம் தலைவர் நேசராசு, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வம்பன் கோவில் வாசலிலிருந்து இருந்து தொடங்கிய பந்தயம் திருவரங்குளம் கேப்பரை சென்று மீண்டும் வம்பனை வந்தடைய சுமார் 10 கிலோ மீட்டர் வரை எல்கை பந்தையம் வைக்கப்பட்டிருந்தது.
வெற்றி பெறுபவர்களுக்கு ரூ. 50,000, முதல் 1 லட்சம் வரை பரிசு தொகை வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி சிவகங்கை, மதுரை , காரைக்குடி, விருது நகர், மற்றும் பல்வே று பகுதிகளில் இருந்து 50 க்கும் அதிகமான மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகள் களத்தில் கலந்துகொண்டனர்.
மேலும் ஒன்றிய மாணவரணி அழகர், கருப்பையா, முன்னாள் கவுன்சிலர் அயுப்கான், முருகானந்தம் பழனிவேல் அரங்கன் கவுன்சிலர் சுபசெந்தில் பாஸ்கர் கண்ணன், கைலாசம், பொற்பனையான், தர்மலிங்கம், இரு ஊராட்சியை சேர்ந்த கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






