என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை பணிகளை ஒன்றியக்குழு தலைவர் கார்த்திக் மழவராயர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்த போது எடுத்தப்படம்.
கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு சாலை செப்பனிடும் பணிகள் தீவிரம்
கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு சாலை செப்பனிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வேம்பன்பட்டி சுப்பிரமணியசாமி கோவில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு வருகிற 18-ந் தேதி வெள்ளிக்கிழமை இரவு தேரோட்டம் நடைபெறுகிறது.
இந்த நிலையில் சாலை செப்பனிடுவதற்காக ஜல்லி கற்கள் பரப்பப்பட்டு சாலை பணிகள் முழுமை பெறாமலும் கோவிலின் எதிர்புறம் ஜல்லி கற்கள் குவியலாகக் கொட்டப்பட்டு இருந்தது.
இதனால் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் மிகவும் சிரமமாக இருக்கும் என்றும் பணிகளை விரைந்து முடிக்கவும் கிராம பொதுமக்கள் அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்களின் இந்த கோரிக்கையை ஏற்று கந்தர்வகோட்டை ஒன்றியக் குழுத் தலைவர் கார்த்திக் மழவராயர் நேரில் ஆய்வு மேற்கொண்டதோடு, சாலை பணிகளை தொடங்கிவைத்து பணிகளை விரைந்து முடிக்கவும், கொட்டப் பட்டிருந்த ஜல்லி கற்கள் அகற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Next Story