என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    புதுகையில் புதை சாக்கடை திட்ட குழாய்கள் சீரமைப்பு பணி தீவிரம்

    புதுகையில் புதை சாக்கடை திட்ட குழாய்கள் சீரமைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் புதை சாக்கடைத் திட்டத்தில் சேதம் அடைந்த இடங்களில் ரூ.36 லட்சத்தில் குழாய்கள் சீரமைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    புதுக்கோட்டையில் செயல்படுத்தப்பட்டு வரும் புதை சாக்கடைத் திட்டத்தில் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டதாலும், பல்வேறு இடங்களில் குழாய்கள் சேதம் அடைந்ததாலும் கழிவு நீரானது சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்லாமல், சாலையில் பெருக்கெடுத்து ஓடி, பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அச்சம் ஏற்பட்டது. 

    நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். 
    இந்நிலையில்  புதை சாக்கடைத் திட்டத்தில் சேதம் அடைந்த இடங்களில் குழாயை மாற்றி அமைப்பது மற்றும் அடைப்புகளை சரி செய்யும் பணி ரூ.36 லட்சத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 

    இந்த பணிகளை எம்.எல்.ஏ. முத்துராஜா, நகராட்சித்தலைவர் திலகவதி செந்தில்குமார், ஆணையர் நாகராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
    Next Story
    ×