என் மலர்
புதுக்கோட்டை
சட்டவிரோதமாக மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்ப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் கல்லாலங்குடியை சேர்ந்த திருப்பதி (வயது51). இவர்ஆண்டிக்குளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைஅருகில் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்து கெண்டிருந்தார். இதனை பார்த்த போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் காவல் நிலையம் அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்

குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து இயக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம், ஆலங்காடு, பள்ளத்துவிடுதி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து நாள்தோறும் சுமார் 200க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆலங்குடி புதுக் கோட்டையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் கொத்த மங்கலத்தில் உள்ள பள்ளிக்கும் வந்து செல்கின்றனர்.
மாணவர்கள் பள்ளி கல்லூரி செல்வதற்கு காலை 9மணிக்கு இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 3 நம்பர் அரசு நகர பேருந்து மட்டுமே மாணவர்களுக்கான ஒரே போக்குவரத்து வசதியாக உள்ளது.
ஆனால் அடிக்கடி இந்த பேருந்து குறிப்பிட் நேரத்தில் இந்த வழித்த டத்தில் இயக்கப் படாததால் மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் ஆலங்காடு கிராமத்தில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளத்திவிடுதி கிராமத்திற்கு மாணவர்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
மேலும் கொத்தமங்கலம் ஆலங்காடு புதுக்கோட்டைக்கு உள்ளிட்ட பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் இந்தப் பேருந்து வராவிட்டால் அன்றைய தினம் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்ல முடியாத சூழல் உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பல முறைபுகார் தெரிவித்தும் போக்குவரத்து துறை அதிகாரிகள் அலட்சியமாக செயல்படு வதாகவும் இனியாவது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதுக்கோட்டை கொத்தமங்கலம் இடையே இயக்கப்படும் அரசு நகரப்பேருந்து முறையாக சரியான நேரத்தில் இயக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பகுடி அருகே காளியாடிபட்டியை சேர்ந்தவர் பிலவேந்திரன் விவசாயி. மனைவி நிர்மலாதேவி. இவர்களுக்கு 3 மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவர்களில் 2 மகள்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். ஒரு மகள் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று பிலவேந்திரன் தனது மனைவி மற்றும் ஒரு மகனுடன் வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பிய போது வீட்டின் கதவு திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 40 பவுன் தங்கநகை மற்றும் ரொக்கம் ரூ.46 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்கள் விட்டுச் சென்ற தடயங்களை சேகரித்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பணத்திற்காக தாயை கொலை செய்த மகனை போலீசார் வலை வசீதேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை,:
புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே ராசாபட்டியைச் சேர்ந்தவர் சன்னாசி. இவரது மனைவி வீரம்மாள் (வயது 46). இவர்களுக்கு குழந்தை இல்லாததால் செல்வராஜ் (29) என்பவரை வளர்த்து வந்துள்ளனர்.
3 ஆண்டுகளுக்கு முன்பு சன்னாசி இறந்துவிட்டார். இந்நிலையில், செல்வராஜ் சென்னையில் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.
அவ்வப்போது ராசாப்பட்டிக்கு வந்து வீரம்மாளிடம் செலவுக்கு பணம் வாங்கிச் சென்றதாகத் தெரிகிறது. இந்நிலையில், நேற்று செல்வராஜ் மீண்டும் பணம் கேட்டுள்ளார். அதற்கு, வீரம்மாள் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த செல்வராஜ், வீட்டில் குளித்துக்கொண்டிருந்த வீரம்மாளை உலக்கையால் அடித்ததில் அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான செல்வராஜைத் தேடி வருகின்றனர்.
அரசு தொழில் மையத்தில் குறுகிய கால பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வெல்டிங் ஆப்பரேட்டார் மற்றும் இரு சக்கர வாகன பழுதுபார்த்தல் தொழிற் நுட்பவல்லுநர் ஆகிய தொழிற்பிரிவுகளில் குறுகிய கால பயிற்சி வழங்கப்பட உள்ளது.
கல்வித் தகுதியாக 8&ம் வகுப்பு தேர்ச்சியடைந்தவராகவும் குறைந்த பட்சமாக 14 முதல் 45 வயது உள்ளவராக இருக்க வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி கல்லூரி முடித்த அல்லது இடைநின்ற பயிற்சியாளர்கள் இந்த பயிற்சியில் சேரலாம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாயப்பு கிடைக்கும் என்பதால் வேலை இல்லாத மேற்காணும் தகுதி உள்ளவர்கள் இதில் சேர்ந்து பயன்பெறலாம்.
இதில் சேர விரும்புவோர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், திருக்கோகர்ணம், திருச்சி மெயின் ரோடு, புதுக்கோட்டை நிலைய முதல்வர் அல்லது 04322&221584 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என புதுக்கோட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் தெரிவித்துள்ளார்.
கோவில் சாமி அணிகலன்கள் திருட்டு போன சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
பொன்னமராவதி சோழீஸ்வரர் கோவிலில் சம்பவத்தன்று கோவில் காவலர் காலை 6 மணிக்கு கோவில் கதவைத் திறந்துவிட்டுச் சென்றதாகவும் , மீண்டும் 9 மணிக்கு திரும்பி வந்து பார்த்தபோது சிவபெருமான் நெற்றியில் இருந்த வெள்ளி விபூதிப் பட்டை திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, கோவில் மேற்பார்வையாளர் தட்சிணாமூர்த்தி பொன்னமராவதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல் உதவி ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
கறம்பக்குடியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடை பெற்றது.
புதுக்கோட்டை:
கறம்பக்குடி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவமதிப்பீட்டு முகாம் நடை பெற்றது.
முகாமினை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதந்திரன் தொடங்கி வைத்தார்.
முகாமில் உடல் இயக்க மருத்துவர் உமா மகேஷ்வரன், குழந்தைகள் நல மருத்துவர் நவீன்,காது, மூக்கு, தொண்டை மருத்து வர் கனகராஜ், மனநல மருத்துவர் முத்தமிழ்செல்வி, கண் பரிசோதகர் கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டு
மாற்றுத்திறனாளி குழந்தை களை பரிசோதனை செய்து அவர்களுக்கு உதவி உப கரணங்கள் அட்டை,பாது காப்பு பயணப்படி வழங்கவும், அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளவும் பரிந்துரை செய்தனர்.
முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு அலிம்கோ நிறுவனம் மூலம் அளவீட்டு முகாம் நடைபெற்று பின்னர் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது.
முகாமில் கறம்பக்குடி வட்டாரக் கல்வி அலுவலர் கள் துரையரசன், துரைராஜ், பள்ளி தலைமையாசிரியர்கள் செல்வராஜ், பஞ்சர்வணம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்தபள்ளிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரெகுநாத்துரை, கறம்பக்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜலிங்கம் வட்டார வளமைய பயிற்றுநர்கள், உடல் இயக்க நிபுணர்கள் செய்திருந்தனர்.
முகாமில் கறம்பக்குடி வட்டார வளமையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள 150 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

ஆலங்குடி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு பாப்பன்மனையை சேர்ந்தவர் இளமுருகன் வயது 36. இவருக்கும் வடகாடு பகுதியை சேர்ந்த ராதா என்ற பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடை பெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்தநிலையில் கணவன் , மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ராதா தனது தந்தையின் வீட்டுக்கு சென்று விட்டார். இதைத் தொடர்ந்து இளமுருகன் ராதாவை குடும்பம் நடத்த வீட்டிற்கு வரும்மாறு அழைத்தார்.
ஆனால் ராதா வரமறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த இளமுருகன் சம்பவதன்று தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் வடகாடு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வடகாடு போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று இளமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வடகாடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பொன்னமராவதி கண்டியாநத்தத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடை பெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் செல்வ விநாயகர் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு கண்டாயாநத்தம் ஊரார்களால் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி நடை பெற்றது.
போட்டியை தமிழக சுற்றுச்சூழல் துறை மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இதில் மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 650 ஜல்லிக்கட்டு காளைகள் கலந்து கொண்டன. காளைகளை அடக்க 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
வாடிவாசலில் சீறி பாய்ந்த காளைகளை, காளையர்கள் அடக்க முயன்றனர். ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும் காளைகளின் உரிமையாளர்களுக்கும்
விழா கமிட்டியார்கள் சார்பாக கட்டில், பீரோ, கிரைண்டர், குக்கர்,அண்டா, செல்போன்,சைக்கிள் ,தங்க வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
பாதுகாப்பு பணியின் காவல் துறையினரும், மருந்துவ உதவிக்குழுக்களும் தயார் நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடை பெற்றது.

அரசு பள்ளி மாணவியின் தாய்க்கு ஆசிரியர்கள் 5 ஆடுகளை வழங்கினர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் ஒன்றியம் லெக்கணாப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருபவர் சசிகலா. இவரது தந்தையின் பெயர் ஆறுமுகம். தாயின் பெயர் மாரியாயி. இவரது தந்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
தனது தந்தை இறந்த பிறகு சசிகலா தாய், தம்பியுடன் மிகவும் கஷ்டமான சூழலில் பள்ளிப் படிப்பை தொடர்ந்துள்ளார். சசிகலாவின் குடும்பச்சூழல் அறிந்த தலைமை ஆசிரியர் ஆண்டனி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் சசிகலா குடும்பத்திற்கு உதவி செய்ய எண்ணினர்.
அதன்படி சசிகலாவின் அம்மாவிடம் கொடுக்க 5 ஆட்டுக்குட்டிகள் வாங்கினர். இந்த 5 ஆட்டுக்குட்டிகளை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி, சசிகலாவின் தாயார் மாரியாயிடம் கொடுத்து நன்றாக வளர்த்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். மாணவி சசிகலாவிடம் நன்றாக படித்து உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
பின்னர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்திய மூர்த்தி பேசும் போது கூறியதாவது:
இப்பள்ளியில் இயங்கும் இளம் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் வறுமையில் வாடும் மாணவ, மாணவியர்களுக்கு உதவி செய்யும் செயல் பாராட்டுக்குரியதாகும். இதனால் இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை இளம் வயதிலேயே வளர்த்துக் கொள்வார்கள் என்றார்.

மேகதாது அணைக்கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசைக் கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
கர்நாடக அரசின் 2022-&23ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், மேகதாதுவில் அணைக்கட்டுவதற்கு ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளதாக அம்மாநில முதலமைச்சரும், நிதியமைச் சருமான பசவராஜ் பொம்மை அறிவித்திருந்தார்.
இதனை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடியில் விவசாயிகள் சங்கத்தினர் கர்நாடக அரசைக் கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுப் பட்டனர்.
ஆர்பாட்டத்தில் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் நோக்கில் செயல்படும் கர்நாடக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. அப்போது தெரிவித்த விவசாயிகள், கர்நாடக அரசு, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தீர்ப்புகளை மதிப்பதில்லை,
மத்திய அரசின் பேச்சையும் கேட்பதில்லை, மாறாக தங்கள் மாநில இந்தியாவில் தனி மாநிலம் போல் செயல்பட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசும் துணை நிற்கிறது என குற்றம் சாட்டினர். தற்போது முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
கர்நாடக அரசு மேலும் இதை தொடர்ந்தால் மேகதாதுவிற்கே சென்று போராட்டம் நடத்தி தடுத்து நிறுத்துவோம் என்றும் தெரிவித்தனர்.
ஆர்பாட்டத்தில் கல்லணைக் கால்வாய் கடைமடை பகுதி பாசனதாரர் சங்கத் தலைவர் கொக்குமடை ரமேஷ், தேசிய குழு உறுப்பினர் மாதவன், மாவட்ட செயலாளர் சோமையா, மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், கல்லணைக் கால்வாய் கடைமடை பகுதி பாசனதாரர் சங்க முன்னாள் தலைவர் ராமசாமி, விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர் தண்டாயுதபாணி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் நலன் காக்க சிறப்பான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
பொன்னமராவதி அருகே உள்ள நகரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட அறிவியல் ஆய்வகம் மற்றும் இரண்டு கூடுதல் வகுப்பறைகள் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜி.குப்பசாமி தலைமைவகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சா.சாமி சத்தியமூர்த்தி வரவேற்றார். விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பங்கேற்று அறிவியல் ஆய்வகம் மற்றும் இரண்டு கூடுதல் வதுப்பறைகளை திறந்து வைத்து பேசியதாவது.
மாணவர்களின் நலன் காக்க ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையில் சிறப்பான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மாணவர்களின் கல்வியில் பெற்றோர்கள் தங்களது விருப்பங்களை திணிக்க கூடாது. தங்களது குழந்தைகள் எந்தத்துறையில் செல்ல விரும்புகிறார்களோ அந்த துறையில் செல்ல அனுமதிக்கவேண்டும். அப்போதுதான் அத்துறையில் மாணவர்கள் பிரகாசிக்க முடியும்.
இப்பள்ளியில் மேலும் கூடுதல் வகுப்பறைகள் அமைக்கவும், சுற்றுச்சுவர் அமைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.மணிமொழி, ஊராட்சிமன்ற தலைவர் செல்வராஜ், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலர் அ.முத்து, நகரச்செயலர் அ.அழகப்பன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அடைக்கலமணி, ஆதிலெட்சுமி சோமையா, பள்ளியின் தலைமையாசிரியர் கோவிந்தன் கலந்து கொண்டனர்.