என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து இயக்க மாணவர்கள் கோரிக்கை

    குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து இயக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள  கொத்தமங்கலம், ஆலங்காடு, பள்ளத்துவிடுதி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து நாள்தோறும் சுமார் 200க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆலங்குடி புதுக் கோட்டையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் கொத்த மங்கலத்தில் உள்ள பள்ளிக்கும் வந்து செல்கின்றனர்.

     மாணவர்கள் பள்ளி கல்லூரி செல்வதற்கு காலை 9மணிக்கு  இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 3 நம்பர் அரசு நகர பேருந்து மட்டுமே மாணவர்களுக்கான ஒரே போக்குவரத்து வசதியாக உள்ளது.

    ஆனால் அடிக்கடி இந்த பேருந்து குறிப்பிட் நேரத்தில் இந்த வழித்த டத்தில் இயக்கப் படாததால் மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் ஆலங்காடு  கிராமத்தில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளத்திவிடுதி கிராமத்திற்கு மாணவர்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. 

    மேலும் கொத்தமங்கலம் ஆலங்காடு புதுக்கோட்டைக்கு உள்ளிட்ட  பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் இந்தப் பேருந்து வராவிட்டால் அன்றைய தினம் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்ல முடியாத சூழல் உள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகளிடம் பல முறைபுகார் தெரிவித்தும் போக்குவரத்து துறை அதிகாரிகள் அலட்சியமாக செயல்படு வதாகவும் இனியாவது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதுக்கோட்டை கொத்தமங்கலம் இடையே இயக்கப்படும் அரசு நகரப்பேருந்து முறையாக சரியான நேரத்தில் இயக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×