என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    பணத்திற்காக தாயை கொலை செய்த மகன்

    பணத்திற்காக தாயை கொலை செய்த மகனை போலீசார் வலை வசீதேடி வருகின்றனர்.
    புதுக்கோட்டை,:

    புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே ராசாபட்டியைச் சேர்ந்தவர் சன்னாசி. இவரது மனைவி வீரம்மாள் (வயது 46). இவர்களுக்கு குழந்தை இல்லாததால் செல்வராஜ் (29) என்பவரை வளர்த்து வந்துள்ளனர். 

    3 ஆண்டுகளுக்கு முன்பு சன்னாசி இறந்துவிட்டார். இந்நிலையில், செல்வராஜ் சென்னையில் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.

    அவ்வப்போது ராசாப்பட்டிக்கு வந்து வீரம்மாளிடம் செலவுக்கு பணம் வாங்கிச் சென்றதாகத் தெரிகிறது. இந்நிலையில், நேற்று செல்வராஜ் மீண்டும் பணம் கேட்டுள்ளார். அதற்கு, வீரம்மாள் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த செல்வராஜ், வீட்டில் குளித்துக்கொண்டிருந்த வீரம்மாளை உலக்கையால் அடித்ததில் அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான செல்வராஜைத் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×