என் மலர்
உள்ளூர் செய்திகள்

கண்டியாநத்தத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடை பெற்ற போது எடுத்த படம்.
ஜல்லிக்கட்டு போட்டி
பொன்னமராவதி கண்டியாநத்தத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடை பெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் செல்வ விநாயகர் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு கண்டாயாநத்தம் ஊரார்களால் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி நடை பெற்றது.
போட்டியை தமிழக சுற்றுச்சூழல் துறை மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இதில் மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 650 ஜல்லிக்கட்டு காளைகள் கலந்து கொண்டன. காளைகளை அடக்க 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
வாடிவாசலில் சீறி பாய்ந்த காளைகளை, காளையர்கள் அடக்க முயன்றனர். ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும் காளைகளின் உரிமையாளர்களுக்கும்
விழா கமிட்டியார்கள் சார்பாக கட்டில், பீரோ, கிரைண்டர், குக்கர்,அண்டா, செல்போன்,சைக்கிள் ,தங்க வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
பாதுகாப்பு பணியின் காவல் துறையினரும், மருந்துவ உதவிக்குழுக்களும் தயார் நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடை பெற்றது.

Next Story