என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    அரசு வகுத்துள்ள நெறிமுறைகள்படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுக்கோட்டை:
     
    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை அரசு வகுத்துள்ள நெறிமுறைகள் அடிப்படையில் நடத்துவது தொடர்பாக, இந்திய கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழு உறுப்பினர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் எஸ்.கே.மிட்டல், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழு உறுப்பினர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் தெரிவித்ததாவது, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டியான ஜல்லிக் கட்டினை மீட்டெடுத்து, தொடர்ந்து நடைபெறும் வகையில் அரசு ஜல்லிக் கட்டிற்கான வழிகாட்டு நெறி முறைகளை வகுத்துள்ளது. அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவதை மாவட்ட நிர்வாகம் மற்றும் விழா குழுவினர் உறுதி செய்ய வேண்டும். 

    இதன்மூலம் கால் நடைகளுக்கும், மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் போட்டிகள் நடத்த தகுந்த ஏற்பாடுகளை விழா குழுவினர் ஏற்பாடு செய்ய வேண்டும்.  அதனடிப்படையில் போட்டிகளில் முழு உடல் தகுதி பெற்றுள்ள காளைகள் மட்டும் பங்கேற்க வேண்டும்.  மேலும்  வீரர்கள் அனைவரும் அரசு தெரிவித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றனர்.
    சொத்து தகராறில் தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள வெட்டன் விடுதி வடக்குத் தெரு சேர்ந்தவர் கணேசன். இவரது மகன்கள் இயலரசன் (வயது 52). கலைச்செல்வம் (45). இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு மூண்டது. இதில் ஆத்திரம் அடைந்த இயலரசன் தனது தம்பி  கலைச்செல்வத்தை அரிவாளால் வெட்டினார். 

    இதில் அவரின் இடது கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை உறவினர்கள் மீட்டு  அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
    இந்த சம்பவம் குறித்து கலைச்செல்வம் அளித்த புகாரின்பேரில் மழையூர் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் ராஜு வழக்குப்பதிவு செய்தார்.
     
    பின்னர்  இயலரசனை கைது செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நல்லகண்ணன் முன்பு ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை ஜெயிலில் அடைத்தனர். சொத்து தகராறில் தம்பியை அண்ணன் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும்பரப்பை ஏற்படுத்தியது.   
    மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    தமிழக அரசால் நடத்தப்படும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூரியில் பயிலக் கூடிய மாணவர்களுக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனை மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் கண்ணன் தொடங்கி வைத்தார். முகாமில் மாணவர்களுக்கு ரத்தப் பரிசோதனை, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    முகாமில் மருத்துவ அலுவலர் மருத்துவர் ஜெயஸ்ரீ, வட்டார சுகாதார மேற்பார் வையாளர் விஸ்வநாதன், மருத்துவ அலுவலர்கள் செவிலியர்கள் சுகாதாரத்துறை பணியாளர்கள், கல்லூரி நிதியாளர் மற்றும் துறை தலைவர்கள் பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செந்தில்குமார், இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப் பாளர் முனைவர் கணேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாரதி நகரை சேர்ந்த கணேசன் மகன் சிவா வயது 26 . இவர் தனியார் நிறுவன ஊழியர்.

    இவர் தனது  உறவினர்  மகளான புதுக்கோட்டை மாவட்டம் கீழாநிலைக்கோட்டையை சேர்ந்த வெற்றி வேல் மகள் பிரசன்னாதேவி வயது 20 என்பவரை கடந்த 2 வருடமாக காதலித்து வந்துள்ளார்.

    இவர்களின் காதலுக்கு பிரசன்னா தேவியின் வீட்டில் எதிர்ப்பு  தெரிவித்ததால் இருவரும் ஆலங்குடி அருகே உள்ள கீழாத்தூர்நாடியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில்  பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்துள்ளனர்.

    இது தொடர்பாக ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஹேமலதா தஞ்சமடைந்த காதலர்களிடம்  விசாரணை நடத்தினர்.  

    இதனை தொடர்ந்து இருவரது குடும்பத்திற்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். பின்னர்,போலீஸ் நிலையம் வந்த இருவரது குடும்பத்தினரும் சமரச பேச்சில் ஈடுபட்ட போது பிரசன்னா தேவி குடும்பத்தார் ஏற்றுக்கொள்ளவில்லை.  

    இதைத் தொடர்ந்து போலீசார் கணவர் சிவாவுடன்  பிரசன்னா தேவியைஅனுப்பி வைத்தனர்
    வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் அன்னதானத்திற்காக சமையல் செய்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மலையடிப்பட்டி முருகன் கோவிலில் ஆண்டுந்தோறும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறாத காரணத்தால் அன்னதானம் நடைபெற வில்லை.‌

     இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று குறைந்துள்ள நிலையில் ‌ தமிழகம் முழுவதும் கேவில்களில் திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று பங்குனி உத்திர திரு விழாவை முன்னிட்டு காஞ்சாத்து மலை முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கு வதற்காக கோவில் அருகில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் அன்ன தானம் வழங்குபவர்கள் சமையல் செய்துள்ளனர். இதனை பார்த்த வனத்துறையினர், வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி சமையல் செய்ததாகக் கூறி அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலையடிப் பட்டி கிராம பகுதியை சேர்ந்த பொது மக்கள் பொன்னமராவதி திருமயம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வன அலுவலர் மேரி லின்சி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சமையல் செய்வது தவறு என்றும் அதற்கு இந்த அபராதத்தை செலுத்திவிடுங்கள் என்றும் இனிமேல் இதுபோன்று வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் அனு மதியில்லாமல் செய்யக் கூடாது எனவும் அறிவுறுத் தினார்.

    இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
    அனுமதியின்றி மாட்டு வண்டி பந்தயம் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாசி மற்றும் பங்குனி திருவிழாக்களை முன்னிட்டு மாட்டு வண்டி , குதிரை பந்தயம் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இப்பந்தயங்களை நடத்த போலீசார் அனுமதி அளிக்கப்படுவதில்லை.

    இருப்பினும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பந்தயங்கள் நடத்தப்பட்டு வருகிறது.  இந்த பந்தயங்கள் நடைபெற்றபின்பு பந்தயம் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்வது தொடர்கதையாக உள்ளது.

    இந்நிலையில் கே.புதுப்பட்டி காவல் சரகத்திற்கு உட்பட்ட நெடுங்குடியில் சிவன் கோவில் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து போலீசாரிடம் அனுமதி பெறவில்லை என கூறி சுப்பையா மகன் அருணாச்சலம், கணேசன் மகன் ராஜேஸ், கருப்பையா மகன் முருகேசன், அசோக், அமுதன் காந்தி மகன் அருண்குமார் ஆகியோர் பந்தயத்திற்கு ஏற்பாடு செய்ததாக அவர்கள் மீது சப்இன்ஸ்பெக்டர் தமிழ்வாசகன் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    பந்தயங்கள் நடத்தும் முன்னரே தடுத்து நிறுத்தாமல் அவர்களை நடத்த விட்டுவிட்டு பின்னர் வழக்கு பதிவு செய்வது என்பது வாடிக்கையாகி விட்டது. நேற்று முன்தினம் திருமயம் அருகே மெய்யூரணி பகுதியில் மாட்டு வண்டி பந்தயம் நடத்தியதாக 5 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    மாற்றுத்திறனாளியை தாக்கிய சம்பவத்தில் பெண் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கவரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 29). பார்வையற்ற மாற்றுத்திறனாளி. இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகாமையில் பெட்டிக்கடை வைத்துள்ளார்.
    இந்த பகுதியில் கள்ளச்சந்தையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாகவும், அதனை தடுப்பதற்காக காவல் கட்டுப்பாட்டு  அறைக்கு சங்கர் தகவல் தெரிவித்தார்.


    உடனே விராலிமலை போலீசார் சங்கரை ஜீப்பில் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று  பல மணிநேரம் அடித்து-உதைத்தாக கூறப்படுகிறது.

    இதுபற்றி அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன் சங்கரை தாக்கிய போலீஸ் காரர்கள் செந்தில்குமார், அசோக், பிரபு ஆகிய 3 பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தவிட்டார்.

    இந்நிலையில் இன்று மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
    அரசு மருத்துவக் கல்லூரியில் விளையாட்டு மைதானத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவ மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டுத் திடலினை அமைச்சர்கள்எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடை பெற்றது. 

    நிகழ்ச்சியில்  அமைச்சர் ரகுபதி பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சரால் 2010-ம் ஆண்டு காலத்திலேயே புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுவதற்காக அனைத்து ஏற்பாடுகள் நிறைவுற்றிருந்தது. 

    மேலும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மருத்துவ மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டுத் திடல் துவக்கி வைக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் இந்த விளையாட்டுத் திடலில் நாள்தோறும் விளையாட்டு பயிற்சிகள் மேற்கொள்ளலாம் என பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்  மெய்யநாதன்  பேசியதாவது, இந்த விளையாட்டு மைதானத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து  தமிழ்நாடு முதலமைச்சர்  கவனத்திற்கு கொண்டு சென்று, கோரிக்கைகள் நிறைவேற்று வதற்கான உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும். நாள்தோறும் பயிலும் கல்வியை போன்று,  தினமும் இந்த விளையாட்டு மைதானத்தை மருத்துவ மாணவ, மாணவியர்கள் பயன்படுத்த வேண்டும். 

    தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியாவிலேயே முதல்முறையாக 2022 - உலக சதுரங்கப் போட்டிக்கான அனுமதியினை பெற்று தந்துள்ளார்கள் என்றார்.

    விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:


    புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சி நெடுங்குடி ஊராட்சியில் நூறு நாள் வேலைத் திட்டம் மற்றும் அரசு வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டாமல் கட்டியதாகவும். ஏழைகளுக்கு இலவச கழிப்பறைகள் கட்டாமல் பெரும் ஊழல் செய்த அரசு அதிகாரிகள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க கோரி 

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெடுங்குடி கிளை செயலாளர் சுசி.கணேசன் தலைமை வகித்தார். 

    வி.தொ.ச. மாநில பொருளாளர் எஸ்.சங்கர் கண்டனவுரை யாற்றினார். வி.தொ.ச மாவட்ட பொருளாளர் க.சண்முகம். மாநிலக்குழு உறுப்பினர் எம்.சண்முகம். சி.பி.ஐ.எம் அரிமளம் ஒன்றிய செயலாளர் ராமையா, மாவட்ட நிர்வாகிகள் ஜோஷி, செந்தமிழ் செல்வன், அடைக்கன்,  விவசாய சங்க ஒன்றிய செயலாளர்  அடைக்கப்பன் மற்றும்  நிர்வாகிகள் கலந்து கொண்டு விளக்க வுரையாற்றினார். முடிவில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
    ஊரணியில் கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த முதியவரால் பரபரப்பு
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பொன்-புதுப்பட்டி தேர்முட்டி வீதி வீரன்செட்டியில் உள்ள ஊரணியில் இரவு 10 மணியளவில் பிணம் போல் ஒருவர் அசைவற்ற கிடந்துள்ளார். இதை அந்த வழியாக சென்றவர்கள்  பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் பொன்னமராவதி போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரில் கிடந்த நபரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். 

    அப்போது தான் அவருக்கு உயிர் இருப்பதும், அவர் 70 வயதுடைய முதியவர் என்பதும் தெரியவந்தது. அவர் கைகள், கால்களும் கட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து அவரை பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

    பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதியவர் கை, கால்களை கட்டி கொலை செய்ய ஊரணியில் தூக்கி வீசி சென்றனரா? யார் அவர், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து பொன்னமராவதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடோனில் நின்ற லாரியிலிருந்து ரூ.1.74 லட்சம் மது பாட்டிகள் திருட்டு சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் சிப்காட் வாளகத்தில் டாஸ்மாக் மாவட்ட குடோன் செயல்பட்டு வருகிறது. இங்கு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கல்லாக்கோட்டையில் இயங்கி வரும் கல் டிஸ்டில்லரிஸ் சாராய தொழிற்சாலையிலிருந்து பிராந்தி பாட்டிகள் குடோனில் இறக்குவதற்காக ஒரு டார்ஸ் லாரியில் கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது.

    சம்பவத்தன்று அதிகாலையில் லாரியிலிருந்து ரூ.1.74 லட்சம் மதிப்புள்ள மது பாட்டிகள் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது.

    இதுகுறித்து தொழிற்சாலை மேலாளர் சீனிவாசன் கொடுத்த புகாரின்பேரில், வெள்ளனூர் சிறப்பு சப்இன்ஸ்¢பெக்டர் குடுமிநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.

    டாஸ்மாக் குடோனில் மதுபாட்டிகள் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் குடோன் மற்றும் அலுவலக வளாகத்தில் சிசிடிவி காமிரா செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

     
    ஆலங்குடி அருகே உள்ள குப்பக்குடி வெற்றி ஆண்டவர் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் நடை பெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை  மாவட்டம்  ஆலங்குடி அருகே உள்ள குப்பக்குடி ஸ்ரீ வெற்றி ஆண்டவர் கோவில் பங்குனி உத்திரத்திருவிழா ஆண்டு தோறும் நடை பெறுவது வழக்கம். 

    குப்பகுடி ஸ்ரீ வெற்றி ஆண்டவர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 8 தேதி கொடியேற்றி காப்பு கட்டுதலுடன்தொடங்கியது. நேற்று தேர்திருவிழா நடை பெற்றது.  பக்தர்கள் தேர்வடம்பிடித்து உற்சாகத்துடன் தேரை 4 வீதிகளிலும் இழுத்துவந்தனர். 

    கூடிநின்ற பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.  அரகரர் கோஷத்துடன் தேர் நிலைக்கு வந்தது பின்னர்  உற்சவ தேரில் இருந்து இறக்கப்பட்டு கோவில் மூல ஸ்தானத்திற்கு கொண்டு வரப்பட்டது


    சந்தனக்காப்பு அலங்கா ரத்தில் காட்சியளிக்கும் மூலவர் வெற்றி ஆண்ட வருக்கு அபிஷேகஆராதனை நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு சாமி பிரசாதம் வழங்கப் பட்டது. ஆலங்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    ×