என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    வனத்துறை இடத்தில் அன்னதானம் தயார் செய்தவர்களுக்கு அபராதம்

    வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் அன்னதானத்திற்காக சமையல் செய்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மலையடிப்பட்டி முருகன் கோவிலில் ஆண்டுந்தோறும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறாத காரணத்தால் அன்னதானம் நடைபெற வில்லை.‌

     இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று குறைந்துள்ள நிலையில் ‌ தமிழகம் முழுவதும் கேவில்களில் திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று பங்குனி உத்திர திரு விழாவை முன்னிட்டு காஞ்சாத்து மலை முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கு வதற்காக கோவில் அருகில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் அன்ன தானம் வழங்குபவர்கள் சமையல் செய்துள்ளனர். இதனை பார்த்த வனத்துறையினர், வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி சமையல் செய்ததாகக் கூறி அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலையடிப் பட்டி கிராம பகுதியை சேர்ந்த பொது மக்கள் பொன்னமராவதி திருமயம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வன அலுவலர் மேரி லின்சி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சமையல் செய்வது தவறு என்றும் அதற்கு இந்த அபராதத்தை செலுத்திவிடுங்கள் என்றும் இனிமேல் இதுபோன்று வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் அனு மதியில்லாமல் செய்யக் கூடாது எனவும் அறிவுறுத் தினார்.

    இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
    Next Story
    ×