என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் தெற்கு வாண்டான் விடுதி தொடக்கப் பள்ளியில் உலக வன தினத்தை முன்னிட்டு, பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. கூட்டத்திற்கு மேலாண்மை குழு தலைவர் பேபி ஷாலினி தலைமை தாங்கினார்,
தலைமை ஆசிரியர் சின்னராஜா அனைவரையும் வரவேற்று பேசியபோது. கூட்டத்தில் மாணவர்கள் சேர்க்கையை உயர்த்துதல், பள்ளியை எவ்வாறு வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது, தமிழக அரசு திட்டங்கள் அரசு பள்ளி மாணவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு வகையான நலத் திட்டங்களை தமிழக அரசு வழங்கி வருவதாக தெரிவித்தார்.
கூட்டத்தில் ஊராட்சிமன்றத் தலைவர் அருணாச்சலம், வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிரகாஷ் , இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார் வலர்கள் பாண்டிச்செல்வி, நந்தினி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உலக வன தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
புதுக்கோட்டை மேல ராஜவிடுதியில் பிஎஸ்என்எல் அலுவலகம் உள்ளது. இதற்கான சொத்து வரியை கடந்த 2015-ம் ஆண்டு முதல் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து நிலுவையில் உள்ள ரூ.17.50 லட்சத்தை உடனே செலுத்துமாறு நகராட்சி நிர்வாகம் பல முறை நோட்டீஸ் அனுப்பியும் பிஎஸ்என்எல் நிர்வாகம் சொத்துவரியை செலுத்தவில்லை.
இதையடுத்து, நகராட்சி வருவாய் அலுவலர் விஜயாஸ்ரீ தலைமையிலான நகராட்சி பணியாளர்கள், பிஎஸ்என்எல் அலுவலகத்தின் ஒரு அறையை பூட்டி சீல் வைத்தனர். மேலும் அங்கிருந்த மேஜை, நாகாலி உள்ளிட்ட சில பொருட்களை ஜப்தி செய்தனர்.
இதனால் பிஎஸ்என்எல் அலுவலர்களுக்கும், நகராட்சி அலுவலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மத்திய அரசின் திட்டமான ஜல் ஜீவன் திட்டம் மூலம் 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் தினமும் தலா 55 லிட்டர் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் மற்றும் 497 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் ஊரக பகுதியில் பெரியாளூர், வேம்பங்குடி, கே.ராயவரம், திருவாக்குடி, பிசானத்தூர், துருகப்பட்டி, வழமங்களம், களமாவூர் ஆகிய 8 ஊராட்சிகளில் அனைத்து குடும்பங்களுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக இன்று சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து கலெக்டர் கவிதா ராமு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :
ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 8 ஊராட்சிகளிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை (மார்ச்22) சிறப்பிக்கும் வகையில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது என தெரிவித்தள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கச்சேரி வீதியை சேர்ந்த சில மாணவிகளுக்கு கடந்த சில நாட்களாக தீராத காய்ச்சல் இருந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி, அதே பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஆகியோருக்கு பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து திருச்சி தனியார் மருத்துவமனையில் டெங்கு ஒழிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து கறம்பக்குடி பகுதிகள் முழுவதும் பேரூராட்சி சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு மருந்துகள் தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவர் தனியார் நிறுவன குழுமங்களின் தலைவராக உள்ளார். இவர் மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் எண்ணை நிறுவனங்கள், வணிக நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் குமாரை சந்திப்பதற்காக மலேசியா நாட்டின் முதன்மை ஆணையர் டத்தோ ஹிதயாத் அப்துல் ஹமீது பூலாம்பாடி வந்தி ருந்திருந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா ஊரடங்கிற்கு முன்பு மலேசியாவில் 20 மில்லியன் இந்தியர்கள் வேலை செய்து வந்தனர். பின்னர் வந்த ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் அதில் 80 சதவீதம்பேர் நாடு திரும்பினர். அதன் விளைவாக மலேசியா தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அதேவேளையில் மலேசியாவில் இந்திய மருத்துவ மாணவர்கள் தங்களின் கல்வியை தொடர்கிறார்கள். ஒரு சில இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் அவர்களின் கல்வி எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை.
எங்கள் நாட்டில் வருகிற ஏப்ரல் மாதம் முதல் கொரோனா கட்டுப்பாடுகளில் முழு அளவிலான தளர்வுகள் அமல்படுத்தப்பட உள்ளன. இதனால் இந்திய தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் தடையின்றி அனுமதிக்கப்பட உள்ளனர். உக்ரைன் போரில் கூட மாணவர்களின் கல்விக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றார்.
பின்னர் தனியார் நிறுவன குழும தலைவர் குமார் கூறும்போது, வணிக நிறுவனங்கள் மட்டுமல்லாமல் எனக்கு மலேசியாவில் ஆயில், கியாஸ், கட்டுமான தொழில்கள் உள்ளன. கொரோனா ஊரடங்கினால் தொழில்கள் முடங்கின. இருப்பினும் எனது மாவட்டம் மற்றும் சொந்த ஊர் மக்களுக்கு எதையாவது செய்ய விரும்புகிறேன். பூலாம்பாடியில் அடிப்படை வசதிகள் மட்டுமல்லாமல் ரூ.10 கோடி செவில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த இருக்கிறேன் என்றார்.
இதையும் படியுங்கள்... தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு
ஆலங்குடி வடகாடு முக்கம் அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் பள்ளி வளாகத்தில் நடை பெற்றது.
கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் கருப்பையா தலைமை வகித்தார். ஆலங்குடி டி.எஸ்.பி. வடிவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும்,
குழந்தைகளின் பாதுகாப்பு எண்கள் குறித்தும், போக்சோ சட்டத்தில் குழந்தைகள் மீதான சட்டப் பாதுகாப்பு குறித்தும், குழந்தைகள் மீது பெற்றோர்களின் அக்கறை, மேற்பார்வையின் அவசியம் குறித்தும் பேசினர்.
அரசு பள்ளிகளின் மாணவர்களுக்கு அரசு செயல் படுத்தும் நலத்திட்டங்கள் குறித்தும், பெற்றோர்களின் கடமைகள் குறித்தும் ஆலங்குடி சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் ஆலங் குடி அனைத்து மகளிர் காவல் சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி ஆகியோர் பேசினர்.
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து அரசு ஆரம்பப்பள்ளி, தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்ட பள்ளி வளர்ச்சிக்கான மேலாண்மை குழு கூட்டம் நடை பெற்றது.
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடை பெற்ற கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் பத்மா மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
கந்தர்வகோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்திற்கு கிராம கல்வி குழு தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பெற்றோர் கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், கலந்து கொண்டனர். அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் சப்னம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பள்ளிகளின் வளர்ச்சி, மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற் கான வழிமுறைகள்மற்றும் மாணவர்களின் நடத்தை தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் பெறப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பெரும்பாலான பள்ளிகளில் போதிய அளவு கழிப்பறை வசதி மற்றும் விளையாட்டுத் திடல் குடிநீர் வசதி இல்லை என்று பெற்றோர்கள் கூறினர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியநகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாணக்கன்காடு கிராமத்தில்பட்டியல் இனஇளைஞரை தாக்கி வன்கொடுமை செய்தவர்களை கைது செய்யக்கோரி கறம்பக்குடி சீனிகடை முக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வரெத்தினம் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சாதிய அடக்குமுறைக்கு எதிராகவும், குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் விசிக முதன்மை செயலாளர் உஞ்சை அரசன் கண்டன உரை நிகழ்த்தினார்.
இதில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு மாவட்ட செயலாளர் ஆசைதம்பி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், த.மு.மு.க.வினர், ம.ஜ.க.வினர், எஸ்.டி.பி.ஐ. மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை நகரம் நீதிமன்ற பொது வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வேட்டைப் பெருமாள் கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 18&ந் தேதி விநாயகர் பூஜையுடன் தொடங்கிய பூஜைகள் தொடர்ந்து ஐந்து கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து இன்று காலை 7மணிக்கு மேல் தீபாராதனையுடன் கடம் புறப்பட்டு 9.30 மணிக்கு கும்பாபிஷேகம் மற்றும் மூலவர் கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
அதை தொடர்ந்து மஹா அபிஷேகம், மஹாதீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அன்னதானமும் நடைப்பெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குன்னூரில் காமண்டி திருவிழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற கைப்புறா எல்கை பந்தையத்தில் குண்டகவயல், தொன்டைமானேந்தல், வீரராகவபுரம், பள்ளத்திவயல், மேல்மங்கலம் கிடங்கிவயல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட மாடுகள் போட்டியில் பங்கேற்றன.
குன்னூர், வெண்ணாமொழியேந்தல் கிராம கோயில் எல்லையிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரம் பந்தையம் எல்லை வகுக்கப்பட்டிருந்தது. இதில் பெரியமாடு, நடுமாடு, கரிச்சான் மாடு பூஞ்சிட்டு என 4 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது.
பந்தயத்தில் சீறிப்பாய்ந்த மாட்டை கையில் பிடித்துக்கொண்டு வீரர்கள் பந்தய இலக்கினை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பணம் மற்றும் நினைவுக் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள், ரசிகர்கள் சாலையின் இருபுறமும் நின்று கண்டுரசித்தனர்.






