என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    ஆலங்குடி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நீதிமன்றம் சார்பில் வட்ட சட்டப்பணிகள் குழு சட்ட விழிப்புணர்வு முகாம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

     முகாமிற்கு பள்ளி தலைமையாசிரியர் ரெத்தினகுமார் தலைமை வசித்தார். பள்ளி தமிழாசிரியர் எட்வர்டு அனைவரையும் வரவேற்றார்.

    முகாமில் மாவட்ட உரிமையியல் மற்றும்  நீதித்துறை நடுவர் நல்லகண்ணன் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு குற்றச்செயல், போக்சோ சட்டம், பாலியல் பிரச்சனை  மற்றும்  புகையிலைப் பழக்கம், குழந்தை திருமணம் சட்டம் பற்றி எடுத்துரைத்தார்.

    மூத்த வழக்கறிஞர் ராஜா  மாணவர்களுக்கு  சட்டம் சார்ந்த  விழிப்புணர்வு  ஏற்படுத்தினார். இதில்  சுமார் 500 மாணவர்கள்  கலந்து கொண்டு  பயன்  அடைந்த னர். முடிவில்  சட்டதன்னார்வலர் செந்தில் ராஜா நன்றி கூறினார்.
    வீரமாகாளியம்மன் கோவிலில் மது எடுப்பு விழா நடைபெற்றது.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் வீரமாகாளியம்மன் 64-ம் ஆண்டு கோவில் திருவிழா காப்பு கட்டுதல் முளைப்பாரிக்கு விதைபாவுதலுடன் தொடங்கியது. கிராம மக்களால் நடத்தப்பட்ட முளைப்பாரி திருவிழா தொடங்கி இன்று காலை மதுயெடுப்பு நடந்தது.

     மது எடுப்பு திருவிழாவை முன்னிட்டு கிராம மக்கள் பொது குடத்தில் நவதானியங்களை நிரப்பி அதில் தென்னை மது, போன்றவைகளை வைத்து, அலங்கரித்தனர். பின்னர் தாரை தப்பட்டைகள் முழங்க வாணவேடிக்கைகளுடன் ஊர்வலமாக வீரமா காளியம்மன் கோவிலுக்கு வந்தடைந்தனர்.

    பின் கோவிலை சுற்றி வந்து அருகில் பாளைகளை குளத்தில் கொண்டு வந்து நெல்லையும் கொட்டிவிட்டு தரிசனம் செய்தனர்.
    மகளின் திருமண அழைப்பிதழை கொடுக்க சென்ற தந்தை விபத்தில் பலியான சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் சிப்காட் நகரில் வசித்து வருபவர் சண்முகம்(வயது55). இவர் வெள்ளனூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன் ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் வரும் 6-ந் தேதி இவரது மகளுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. அதற்காக திருமண அழைப்பிதழை உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உடன் பணி புரிபவர்களுக்கு கொடுத்து வந்துள்ளார்.

    சத்தியமங்கலம் பகுதியில் உள்ளவர்களுக்கு அழைப்பிதழை  வைத்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் உட்கார்ந்து இருந்தார். அப்போது திருச்சியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த கார் இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக சண்முகம் பலியானார்.  

    இது குறித்து வெள்ளனூர் போலீசார் காரை ஓட்டி வந்த திருச்சியை சேர்ந்த ராஜாவை,  கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
    வாலிபர்களை மது பாட்டில்களால் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மாஞ்சன் விடுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் சத்யராஜ், இவரும் புதுக்கோட்டை காந்தி நகர் 7-ம் தெருவை சேர்ந்த ஹரிதாஸ் மகன் மேகனாதனும் ஒரு இரு சக்கர வாகனத்தில்  மாஞ்சன் விடுதிக்கு வந்து கொண்டிருந்தனர்.

    வாகனம் சந்தை பேட்டை அருகே வந்த போது, எதிரே பள்ளத்திவிடுதி வடக்கு பட்டியை சேர்ந்த காசி மகன் சுப்பிரமணியன் (வயது 19), சூரன்விடுதி தொண்டமான் குடியிருப்பு துரைசாமி மகன் வெங்கடேஷ் இவர்கள் வந்த இருசக்கர வாகனமும் மோதியது.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர்களுக்குள் வாக்குவாதம் நடைபெற்றது. இதனை பார்த்த அப்பகுதியினர் சமாதானப்படுதி அவர்களை அனுப்பிவைத்தனர்.

    இதில் ஆத்திரம் அடங்காத சுப்பிரமணியனும், வெங்கடேசும் விரட்டி சென்று, ஆயிப்பட்டி விலக்கு  பகுதி அருகே அவர்களை நிறுத்தி, மது பாட்டிலால் சரமரியாக தாக்கியுள்ளனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த சத்யராஜ் மற்றும் மேகனாதனை அப்பகுதியினர் மீட்டு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.

    இச்சம்பவத்தை அறிந்த ஆலங்குடி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதோடு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சத்யராஜ் மற்றும் மேகனாதனிடம் விசாரணை நடத்தினர். பின்னர் இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியன் மற்றும் வெங்கடேஷை கைது செய்தனர். வாலிபர்களுக்குள்  ஏற்பட்ட மோதலால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.
    கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக புதுக்கோட்டை திகழ்கிறது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக புதிய தொற்று இல்லாமல் இருந்து வந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்தவர்களும் முழுமையாக குணமடைந்து- அந்தப் பகுதியும் பூஜ்ஜிய நிலையை எட்டியுள்ளது. நேற்று முன்தினம்  நிலவரப்படி கொரோனா எண்ணிக்கை விவரம்:

    புதிய தொற்றாளர்கள்- 0, மொத்த தொற்றாளர்கள்- 34,463, குணமடைந்தோர்- 34,037, சிகிச்சை பெறுவோர்- 0, உயிரிழந்தோர்- 426. இந்த நிலை தொடரும் என மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
    வரத்து வாரியில் ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடி ஊராட்சியில் அப்பகுதியில் உள்ள வரத்துவாரியை 100 நாள் வேலைப்பணியாளர்கள் தூர்வாரியுள்ளனர்.

    அப்போது, நாணயங்கள், குண்டுமணிகள் என மொத்தம் 80 கிராம் எடையிலான ஆபரணங்கள் கிடைத்துள்ளன. இதைத்தொடர்ந்து, அப்பகுதி மக்கள் ஊராட்சித் தலைவர் மலர் தலைமையில் வட்டாட்சியர் செந்தில்நாயகியிடம் ஒப்படைத்தனர்.

    அவற்றைப் பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் செந்தில்நாயகி, கிடைத்த பொருள்களை புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் ஒப்படைத்து, அதன் காலம், உலோகம், தன்மை குறித்து ஆய்வு செய்து அரசுக்குத் தெரிவிப்பார்கள் என்றார்.
    முத்துக்கண்ணம்மாள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க முன்னாள் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
    புதுக்கோட்டை  :

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி,   விராலிமலை வடக்கு  தெருவை சேர்ந்த முத்து கண்ணம்மாள் என்ற கலைஞர் சதிர் நடனத்தை முழுமையாக தெரிந்தவராவார். 

    இவருக்கு 90 வயது நடை பெற்று வரும் நிலையில்,  மத்திய அரசு அறிவித்த பத்ம ஸ்ரீவிருதில் அவரது பெயரும் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில், அம்மையார் முத்து கண்ணம்மாளை முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும்   தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து  பட்டாடை அணிவித்து அன்பளிப்பு அளித்து வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார்.

    இவருக்கு ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு உல கப்  புகழ்பெற்ற  கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு விராலிமலையில்  நடைபெற்றது. அப்பொழுது முத்துக்கண்ணம்மாளுக்கு பொற்கிழி மற்றும் உதவி தொகையை முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வழங்கி கௌரவித்தார்.

    இந்நிலையில், இது குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
    நேற்று டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், பரத நாட்டியத்தின் ஆதிவடிவம் என அழைக்கப்படும் ‘சதிராட்டத்தின்’ அடையாள மாக  வாழ்ந்து  வரும்  நம் விராலிமலையைச் சார்ந்த முத்துக்கண்ணம்மாளுக்கு  நாட்டின்  மிக  உயரிய  விரு தான பத்மஸ்ரீ விருது வழங் கப்பட்டிருக்கிறது.

    நம்  விராலிமலையின் பெயரை, தமிழ்நாட்டின் அடையாளத்தை  இந்திய அரங்கில் ஒலிக்கச் செய்த முத்துக்கண்ணம்மாள்  நம் மண்ணின் பெருமைமிகு அடையாளம். சமீபத்தில் அவருடைய மகள்அளித்த நேர்காணலில், ‘குடும்பச் சூழலை   கருத்தில்   கொண்டு குடும்பத்தில்  யாராவது  ஒரு வருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென’ அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். 

    நிச்சயம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையினைவழங்கி  நம்  மண்ணின்   அடையாளமான முத்துக்கண்ணம்மாளுக்கு பெருமை  சேர்க்க  வேண்டு மென விராலிமலை சட்ட மன்ற  உறுப்பினர் என்ற முறையில் முதலமைச்சரை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
    உலக வன நாள் விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம்,  மச்சுவாடி அரசு  முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி  வளாகத் தில் உலக வன நாள் விழா  மாவட்ட கலெக்டர் கவிதா ராமு  தலைமையில் நடை பெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் பள்ளி வளாகத்தில் மரக் கன்றினை நட்டார்.

    பின்னர் அவர் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகளின் பொதுசபையில் மார்ச் 21 ஆம்  நாள்  உலக  நாளாக கொண்டாட தீர்மானம் நிறை வேற்றப்பட்டதன்  அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 ஆம் தேதி உலக வனநாளாக வனத்துறையின் மூலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    காடுகள் எண்ணற்ற உயிரினங்களுக்கு உறைவிடமாக விளங்குகிறது.   அவற்றை பாதுகாக்க நாம் காடுகளை பாதுகாக்க வேண்டும். காடு செழித்தால் நாடு செழிக்கும். அதன்படி   நடப்பாண்டில் ‘மரம் நடுவோம்&வெப்பம் தனிப்போம்” என்ற தலைப் பில் விழப்புணர்வு ஏற்படுத் தப்பட்டு வருகிறது.

    எனவே ஒவ்வொரு ஆண்டும்  மார்ச் 21 ஆம்  தேதி கொண்டாடப்பட்டு  வரும் உலக வனதினத்தில் வனங்க ளின் அவசியம் பற்றியும், அவைகள் எவ்வாறு உயிரி னங்களுக்கு வாழ்வாதார மாக விளங்கி நம்மை வாழ வைத்து கொண்டிருக்கிறது என்பது குறித்தும், மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன் மைகள் குறித்தும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மாணவ, மாணவியர் அக்கறையுடன் கல்வி பயின்று வாழ்வில் முன்னேற வேண்டும்.  உடற்பயிற்சி மற்றும் விளையாட்டில் ஆர்வமுடன் ஈடுபட வேண்டும். சத்தான உணவுப்  பழக்கத்தை  பின் பற்ற வேண்டும். நூலகங்களில்  அறிவை  வளர்க்கும் நூல்களை படிக்க வேண்டும் என்றார்.

    அதனைத் தொடர்ந்து 12 ஆம் வகுப்பு மாணவி கீர்த்திகா மரம் நடுதலின் அவசியம் குறித்து உரையாற்றியதற்கு கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார்.
    இறந்தவரின் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல பாதை மறுத்ததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை  மாவட்டம் ஆலங்குடி  அருகே  உள்ள மணவிடுதி கூழியான் விடுதி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் கருப்பையா மனைவி சரஸ்வதி (வயது 77). இவர் உடல் நலக்குறைவால் நேற்று இறந்து விட்டார் .

    இவரது உடலை சுடுகாட் டுக்கு கொண்டு செல்வதற்கு அதே  ஊரை சேர்ந்த  சுப்பையா மகன் ரத்தினகுமார் தனது   பட்டா   நிலத்தில் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல் வதற்கு   பாதை   அனுமதி இல்லை என்று கூறி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இறந்தவரின் உடலை   பட்டா  இடத்தில் கொண்டு  செல்ல   பாதை  மறுப்பததால் உடலை வீட் டில் வைத்து விட்டு இறந் தவரின்   உற்றார்,  உறவினர் கள்   தஞ்சாவூர்    புதுக் கோட்டை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    சாலை மறியல் தகவல றிந்து சம்பட்டிவிடுதி போலீ சார்  சம்பவ  இடத்திற்கு விரைந்து சென்று சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர்.

    பின்னர் தற்போது  இறந் தவரின்  உடலை  எடுத்துச் செல்ல   வேண்டும்   எனவும் இனி  வரும்  காலங்களில் பாதையை      சரிப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று போலீசார் கூறியதன் பேரில் சாலை  மறியல்  கைவிடப்பட் டது.   அதனை  தொடர்ந்து இறந்தவரின் உடலை எடுத்து சென்றனர்.    இச்சம்பவம் அப்பகுதியில்  பெரும்  பரப ரப்பை ஏற்படுத்தியது.



    மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை  மாவட்ட ஆட்சியரகத்தில்  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கவிதா ராமு தலை மையில் நடைபெற்றது.

    கூட்டத்தில்   முதியோர் உதவித்தொகை,  வேலை வாய்ப்பு, கல்வி உதவித் தொகை, பட்டா மாறுதல் போன்ற பல்வேறு கோரிக் கைகள் அடங்கிய  278 மனுக் களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர்.
    இம்மனுக்களை  பெற்றுக் கொண்ட  கலெக்டர்,  இம் மனுக்களின் மீது தகுந்த நட வடிக்கைகள் மேற்கொள்ளு மாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    மாவட்ட மாற்றுத்திறனா ளிகள் நல அலுவலகத்தின் சார்பில் ரூ.78,700 மதிப்பில் இணைப்பு சக்கரங்கள் பொறுத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரை ஒரு பயனாளிக்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்.


    வம்பன் ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் தேர்த்திரு விழாவை முன்னிட்டு மாடு, குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வம்பன் ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பங்குனி தேர்த்திரு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 

    இதனையொட்டிமாஞ்சான் விடுதி மற்றும் கொத்தக்கோட்டை ஊராட்சிகள் இணைந்து  நடத்தும்  மாபெரும் மாட்டு வண்டி மற்றும் குதிரை பந்தயம் வம்பன் வீர காளியம்மன் கோவில் வாசல் திடலில் இருந்து நடைபெற்றது. 

    மாட்டு வண்டிகள் மற்றும் குதிரை  வண்டிகள்எல்கை பந்தயத்தை விழாக்குழுதலை வரும், கொத்தக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவரு மான மயிலன் மற்றும் செயலாளர் இளையசூரியன், மாஞ்சான்விடுதி ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் கண்ணன் ஆலங்குடி  நகரச் செயலாளர் பழனிவேல் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் கொடிய சைத்து துவக்கி வைத்தனர்.

    வம்பன்  கோவில் வாசலிலிருந்து  இருந்து தொடங்கிய பந்தயம் திருவரங்குளம் கேப்பரை சென்று மீண்டும் வம்பனை வந்தடைய சுமார் 10  கிலோ  மீட்டர்  வரை எல்கை வைக்கப்பட்டிருந்தது. முதல் பரிசாக 30,000, ஆயிரம் முதல் , கடைசி பரிசு 1,000 வரை தொகை வழங்கப் படுகிறது.

    புதுக்கோட்டை தஞ்சை, திருச்சி சிவகங்கை, மதுரை, காரைக்குடி, விருது நகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து 200&க்கும் அதிகமான மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தய எல்கை களத்தில் கலந்து கொண்டன.
    சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் வீடுகள் இடிந்தன.
    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை பகுதியில்  கனத்த மழையுடன் சூறைக்காற்று திடீரென வீசியது. இதில் நகரி பகுதியில் மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தது. இதனால் நள்ளிரவு வரை மின்சாரம் தடை செய்யப்பட்டது.

    மரங்கள் முறிந்து விழுந்தது. மேலும் கடைவீதியில் உள்ள பெயர் பலகைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டது. அம்பலகாரர் தெருவைச் சேர்ந்தவர் மாரியம்மாளின்  குடிசை வீடு இடிந்து விழுந்தது.

    வீடு இடிந்து விழுந்ததில் வீட்டில் உள்ள பாத்திரங்கள் மற்றும் துணிமணிகள் உள்ளிட்ட 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் வீணானது. தகவல் அறிந்து கிராம நிர்வாக அலுவலர் அன்பரசன், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி, தி.மு.க. நகர செயலாளர் ராஜா ஆகியோர் சேதமடைந்த வீட்டை பார்வையிட்டு அரசுக்கு தகவல் அளித்தனர்.
    ×