என் மலர்
புதுக்கோட்டை
திருமயத்தில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவமுகாம் நடை பெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், குழிபிறை ஊராட்சியில் வள்ளுவர் நடுநிலைப்பள்ளி யில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டசிறப்பு மருத்துவமுகாமை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்து பார்வையிட்டார்.
முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமை தாங்கினார். முகாமில் அமைச்சர் பேசியதாவது:-
முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக்காலத்தின்போது, வருமுன் காப்போம்திட்டமானது கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் கிராமப்புற பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நோயற்ற நல்வாழ்வு வாழ உறுதி செய்திடும் வகையில் தமிழக முதலமைச்சர் ஆணையின்படி, கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் மருத்துவ முகாம்கள் மீண்டும் புதுபொலிவுடன் நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், குழிபிறை ஊராட்சியில் வள்ளுவர் நடுநிலைப் பள்ளி யில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவமுகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் நோக்கம் கிராமங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கு மருத்துவ வல்லுநர் குழுவினர் நேரில் சென்று மருத்துவ முகாம்களை நடத்தி பல்வேறு நோய்களை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்து குணப்படுத்துவதாகும்.
பல்வேறு விதமான நோய் களுக்கும், வருமுன் காப் போம் அணுகுமுறையினை மக்களிடையே ஏற்படுத்தி ஏழை எளிய மக்களுக்கும், இயலாத மக்களுக்கும் இலவச பன்முனை மருத்துவ பரிசோதனை சிகிச்சைகள் மருத்துவ முகாம்கள் மூலம் வழங்கப்படுகிறது.
இம்முகாம்களில் சிறப்பு மருத்துவகுழுவினர்களால் பொதுமக்களுக்கு, குழந்தை நலம், பல்மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, இருதயநோய், நீரிழிவுநோய், புற்றுநோய், காசநோய், மகப்பேறு மருத்துவம், சித்த மருத்துவம்,மனநல ஆலோசனை போன்ற துறைகளில் மருத்துவ உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப் படுகின்றன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடத்தப்பட வேண்டிய 39 மருத்துவ முகாம்களில் புதுக்கோட்டை சுகாதார மாவட்டத்தில் 13 முகாம்கள் மற்றும் அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தில் 7 முகாம்கள் என மொத்தம் 20 மருத்துவ முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டுள்ளது.
மேலும் 11.03.2022வரை நடைபெற்ற இம்முகாம்கள் மூலமாக 542 நபர்களுக்கு ஸ்கேன் பரிசோதனையும், 446 இ.சி.ஜி. பரிசோதனையும், 4,224ஆய்வக பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டு, 1,162 நபர்களுக்கு இருதய நோய் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இம்முகாம்கள் மூலமாக 9,002 நபர்கள் பயன் பெற்றுள்ளனர். இம்மருத்துவ முகாம்களை பொதுமக்கள் நன்கு பயன் படுத்திக்கொண்டு, அனைத்து பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளை பெற்று தங்களது ஆரோக்கிய வாழ்வினை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஹிஜாப் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறம்பக்குடியில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
கர்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல அந்த மாநில அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஹிஜாப் தடை செல்லும் என அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு கண்டணம் தெரிவித்து முஸ்லிம்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, கறம்பக்குடி ஜமாத் கமிட்டி சார்பில் ஹிஜாப் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக கறம்பக்குடி பெரிய பள்ளிவாசலில் இருந்து கண்டன ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலம் பள்ளிவாசல் தெரு, தட்டாரதெரு, கடை வீதி வழியாக சென்று கறம்பக்குடி பஸ் நிலையம் அருகே நிறைவடைந்தது.
பின்னர் இங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட திரளான முஸ்லிம்கள் கலந்து காண்டு ஹிஜாப் அணிய ஆதரவு தெரிவித்தும், கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.
ஆலங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் வடிவேல் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கறம்பக்குடி காவல்துறை அனுமதி வழங்காததால் திடீரென்று நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற தாகக் கூறி போலீசார் 895 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

பைக்கிலிருந்து மீன் வியாபாரி தவறி விழுந்து பலியான சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை :
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் மகேந்திரன் (வயது 30) அதே ஊரைச் சேர்ந்த அவரது நண்பர் ராமச்சந்திரன் மகன் அரவிந்தன் (23). இருவரும் நேற்று முன்தினம் ஒரே மோட்டார் சைக்கிளில் மீன் ஏற்றிக் கொண்டு செங்கிப்பட்டியில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை சாலையில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது வடுகப்பட்டி கிராமம் விவசாய பண்ணை அருகே வந்த போது இருவரும் நிலை தடுமாறி மோட்டார் சைக்களிலில் இருந்து தவறி விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு கந்தர்வக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேந்திரன் இறந்தார். இந்த விபத்து குறித்து கந்தர்வக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்ணிடம் நூதன முறையில் ரூ.2.80 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகர் இவரது மனைவி சிவரஞ்சனி (வயது28).
இந்நிலையில் ஆன்லைன் மூலம் குறைந்த முதலீட்டில் கை நிறைய சம்பாதிக்கலாம் என சிவரஞ்சனி கைப்பேசிக்கு குறுந்தகவல் வந்துள்ளது.
இதனை பார்த்த அவர், அந்த மர்ம நபர்கள் அனுப்பிய தகவலின்படி முதலில் பரிசோதனைக்காக ரூ.500 செலுத்தியுள்ளார். கொஞ்ச நேரத்தில் அவரது வங்கி கணக்கிற்கு ரூ.700 வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதனை நம்பிய அவர் தொடர்ந்து வருகின்ற குறுந் தகவல்களுக்கு பதிலளித்து அவர்கள் கேட்கும் தொகையை செலுத்தி வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் 2 லட்சத்து 80 ஆயிரம் வரை பணம் செலுத்திய நிலையில் தனது வங்கி கணக்கிற்கு வருமானம் வராததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதனையடுத்து தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து உடனடியாக சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் சைபர்கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றார்.
ஆன்லைனில் பணத்தை இழந்தவர்கள் குறித்து காவல்த்துறையினர் அறிவுறுத்தல் உள்ளிட்ட பல வகையில் அறிவிப்புகள் வெளிவந்தாலும் இவ்வாறு ஏமாறுவது தொடர்கதையாகி வருகிறது.

வெங்கடேஸ்வரா பள்ளியில் வண்ணதினம் கொண்டாட்டத்தில் குழந்தைகள் ஊதா நிறமாக மாறி காட்சியளித்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை, திருக் கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மழலைக் குழந்தைகளுக்கு வண்ணங்களை அறிமுகம் செய்யும் விதமாக வண்ண தினங்கள் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் ஊதா வண்ணதினம் கொண்டாடப்பட்டது. கேஜி குழந்தைகள் ஊதா வண்ண உடையணிந்து, வளையல் ஜிமிக்கி, செருப்பு என எல்லாம் ஊதா மயமாக குழந்தைகள் மாறியிருந்தன.
ஊதா வண்ணத்திலான பொம்மைகள், பந்துகள் மற்றும் விளையாட்டுப் பொருட்களையும் மாணவர்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்து காட்சிப்படுத்தினர்.
கேஜி வகுப்பறைகள் ஊதா பாலூன்கள் சாக் லேட்டு தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டன. பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி, குழந்தைகளோடு குழந்தையாக ஊதா நிற உடையணிந்து இனிப்புகள் வழங்கி மகிழ்வித்தார்.
வண்ண நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியைகள் கௌரி, சந்திர கலா, பிரியதர்ஷினி மற்றும் இலக்கியா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
புதுப்பெண் அடித்துக் கொலை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி அவரது கணவரை கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை:
பொன்னமராவதி அருகே மேலத்தானிம் கள்ளர் தெருவை சேர்ந்தவர் இளையராஜா (வயது 36), இவரது மனைவி மாரியம்மாள் (25). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.
இந்நிலையில் இளையராஜாவுக்கும், வேறுவொறு பெண்ணுக்கும் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், இன்று வீட்டில் உள்ள அறையில் மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் மாரியம்மாள் இறந்து கிடந்தார். இதையறிந்த பெண்ணின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தங்களது பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ளவில்லை.
அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். காது, மூக்கு உள்ளிட்டவைகளில் ரத்தம் வந்துள்ளதால் அடித்துதான் கொலை செய்யப்பட்டதாக கூறி மேலத்தானியம் காரையூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் கொலை செய்ததாக கூறி இளையராஜா மற்றும் அவரது அண்ணன் முருகேசன் மனைவி கமலா, இளையராஜாவின் தங்கை தவமணி ஆகிய 3 பேரையும் கைது செய்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவதாக கூறினர்.
இதையடுத்து அங்கு வந்த இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இளையராஜாவை கைது செய்துவிட்டோம். மேலும் இருவரையும் கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையடுத்து போலீசார் மாரியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து காரையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுப்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அறந்தாங்கியில் இளம் பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கருங்குழிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பைரோஸ்கான், இவரது மனைவி நிஹானா வயது 23. இருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
கனவர் பைரோஸ்கான் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த 6 மாதகாலமாக அறந்தாங்கி தினசரி காய்கறி சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தனிக் குடுத்தனம் செல்வது தொடர்பாக குடும்பத்தில் தகராறு இருந்து வந்துள்ளது.
நேற்று குடும்பத்தினரோடு தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த நிஹானா தனது அறைக்கு சென்று அங்கிருந்த மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாகுடி காவல் துறையினர் விரைந்து சென்று நிஹானா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் திருமணம் நடைபெற்று 5 ஆண்டுகளில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டதால் கோட்டாட்சியர் விசாரணை செய்து வருகிறார்.
அதே போன்று அறந்தாங்கி அருகே சிட்டாங்காடு கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார் வயது 41 என்பவருக்கு கடந்த சில தினங்களாக உடல் நலக்கோளாறு இருந்து வந்துள்ளது.
இதனையடுத்து மன உளைச்சலுக்கு ஆளான அவர் வயலுக்கு பயன் படுத்தக்கூடிய மருந்தை குடித்துள்ளார். இதில் உயிருக்கு போராடிய முத்துக்குமாரை உறவினர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.
அதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையிலிருந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது குறித்து அறந்தாங்கி காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டையில் போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அடப்பன் வயல் இரண்டாம் வீதியை சேர்ந்தவர் அருண் குமார்(வயது36). இவரது மனைவி மகா லெட்சுமி(38). இவர்களுக்கு திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள். முதல் மகள் அரசு பள்ளியில் 6ம்வகுப்பு படித்து வருகிறாள்.
இந்நிலையில் கடந்த 16-ந் தேதி இரவு தூங்கும்போது கட்டிலில் படித்திருந்தவளுக்கு அவளது தந்தையே பாலியியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மகாலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன் ஸ்பெக்டர் பத்மபிரியா வழக்குபதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் அருண்குமாரை கைது செய்து இன்ஸ்பெக்டர் கலைவாணி விசாரனை நடத்தி வருகிறார்.
இதே போல் அன்னவாசல் அருகே தட்சம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ்(38). இவர் வீட்டின் அருகே அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி தனியாக வசித்து வருகிறார்.
அவர் வீட்டில் பாம்பு ஒன்று வந்துள்ளது. அதை பார்த்து பயந்த மாணவி அதை விரட்ட செல்வராஜை அழைத்துள்ளார். பாம்பு பிடிக்க வந்த செல்வராஜ் மாணவி தனியாக இருப்பதை அறிந்து அவரை கட்டிபிடித்து பாலியியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மாணவி கொடுத்த புகாரின் பேரில் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லதா செல்வராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரனை நடத்தி வருகிறார்.

கந்தர்வகோட்டையில் தலைமையாசிரிடம் நூதன முறையில் ரூ.1லட்சத்து 74 ஆயிரம் ரூபாயை மர்த நபர் கொள்ளையடித்து சென்றார்.
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை அடுத்த புனர்குளம் கிராமத்தை சேர்ந்தவர் துரையரசன் வயது 56 . இவர் கந்தர்வகோட்டை ஒன்றியம் மருங்கூர்ணி அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள வங்கியில் தனது கணக்கில் இருந்து ரூபாய் 1,74,000 பெற்றுக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளின் டேங்க் கவரில் வைத்தார்.
அப்போது அருகில் இருந்த மர்ம நபர் ஒருவர் ஆசிரியரிடம் ரூபாய் 100 கீழே கிடப்பதாக கூறினார். நூறு ரூபாயை எடுக்க ஆசிரியர் முயன்ற போது அருகில் இருந்த மர்ம நபர் பணப்பையை எடுத்துக் கொண்டு தப்பயோடி விட்டார்.
இது தொடர்பாக ஆசிரியர் துரையரசன் கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதே வங்கியில் ரூபாய் 1 லட்சத்தை விவசாயி ஒருவர் இதே முறையில் பறி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கியின் வெளிப்புறம் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாதது இதுபோன்ற திருடர்களுக்கு நல்வாய்ப்பாக உள்ளதாக வங்கி வாடிக்கையாளர்கள் கூறினர். இனிமேலாவது வங்கி நிர்வாகம் வெளிப்புறம் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கந்தர்வகோட்டையில் உலக தண்ணீர் தினவிழா நடை பெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு ஆலோசனையின்படி, கந்தர்வகோட்டை ஒன்றியம் ஆக்காசிப்பட்டி இல்லம் தேடி கல்வி மையத்தில் உலக தண்ணீர் தின நாள் நிகழ்ச்சி நடை பெற்றது.
நிகழ்ச்சிக்கு கந்தர்வகோட்டை ஒன்றிய ஒருங்கிணைப் பாளர்கள் தங்கராசு, ரஹ்மத்துல்லா ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார்.
இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசும் போது, உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22ந் தேதியை உலக தண்ணீர் தினமாக குறிப்பிடுகின்றது.
இந்த நாளில் நாம் தண்ணீரின் இன்றியமையாமையையும், நீர்நிலைகளை பாதுகாக்கவும், நீர்வளங்களை அளவோடு பயன் படுத்தவும், குடி நீரை வீணாக்காமல் இருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும், இது எதிர்கால சந்ததிக்கு செய்யக் கூடிய மிகப்பெரிய பங்களிப்பு என்பதையும் கூறினார்.
நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள் நித்தியா, ஹேமலதா, மகேஸ்வரி, சுவேதா, புவனேஸ்வரி, மாலினி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மணிமேகலை, ஆனந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் நலனில் அக்கறையின்றி செயல்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பிளஸ்- 2 வகுப்பில் கணினி வணிகவியல் பிரிவில் 45 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த வகுப்பை சேர்ந்த மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் சீருடையில் நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் வந்தனர். அப்போது நுழைவு வாயில் அருகே கலெக்டர் கவிதா ராமு காரில் வந்து கொண்டிருந்தார்.
சீருடையில் மாணவர்கள் செல்வதை கண்ட அவர், காரை நிறுத்தி மாணவர்களிடம் விசாரித்தார். அப்போது பள்ளியில் தங்கள் வகுப்புகளுக்கு பாடங்கள் நடத்த ஆசிரியர்கள் போதுமானதாக இல்லை, ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க மனு அளிக்க வந்ததாக மாணவர்கள் கூறினர். அவர்களை தனது அலுவலகத்திற்கு தேரில் வருமாறு கூறி சென்று மாணவர்களிடம் மனுவை பெற்றார்.
மனு அளிக்க வந்த மாணவர்கள் கூறுகையில், எங்களது பள்ளியில் பிளஸ்- 2 வணிகவியல் பிரிவில் தமிழ், ஆங்கிலம், கணினி பயன்பாடு, கணக்குப்பதிவியல், வணிகவியல், தணிக்கையியல் ஆகிய 6 பாடங்கள் உள்னது. இதில் கணக்குப்பதிவியல், வணிகவியல், தணிக்கை ஆகிய 3 பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை.
இதனால் பாடங்கள் எங்களுக்கு நடத்தப்படவில்லை. வணிகவியல் பாடத்திற்கு மட்டும் 10-ம் வகுப்பு ஆசிரியர் ஒருவர் அவ்வப்போது வந்து பாடம் நடத்துவதுண்டு, நாங்கள் இந்த பாடங்களை முழுமையாக படிக்கவில்லை. திருப்புதல் தேர்வை தொடர்ந்து விரைவில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. அதற்குள் நாங்கள் பாடங்களை படிக்க முடியும், எப்படி நாங்கள் பொதுத்தேர்வு எழுத முடியும்.
இதனால் பாடங்களை நடத்த போதுமான ஆசிரியர்களை நியமிக்கவேண்டும். நாங்கள் இந்த 3 பாடங்களையும் முழுமையாக படித்து பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவோமா? என்பது தெரியவில்லை. எனவே எங்களை தேர்ச்சி பெற வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். கலெக்டரிடமும் இதே கருத்தை மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பிளஸ்-2 வகுப்பில் ஆசிரியர்கள் இல்லாததால் பாடங்களை முழுமையாக படிக்கவில்லை என மாணவர்கள் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. கலெக்டரிடம் மாணவர்கள் மனு அளிப்பதற்கு முன்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடமும் இதே கோரிக்கையை கூறி முறையிட்டனர்.
பள்ளி தொடங்கி 5 மாதங்கள் ஆகியும் ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவிக்காத மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அரங்கசாமியை (வயது 58) பணியிடை நீக்கம் செய்ய கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டார்.
அதன்படி அவரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். பள்ளியில் மாணவர்கள் நலன் கருதி பொதுத்தேர்வுக்கு தயாராக, 2 ஆசிரியர்கள் மாற்றுப்பணியில் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட பள்ளியில் கணினி அறிவியல், வணிகவியல், கணக்குப்பதிவியல், தணிக்கையியல் ஆகிய பாடப்பிரிவுகள் புதிதாக தொடங்க அனுமதி வாங்கிய போது பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்வதாக கூறியும், அதற்கான நடவ டிக்கையை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டையில் காப்பகத்தில் தங்கி படித்து வரும் அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பக மாணவிகளுக்கான பொதுமருத்துவம், பல் மற்றும் கண் பரிசோதனை முகாமினை குழந்தைகள் காப்பக வளாகத்தில் புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் நடத்தியது.
முகாமிற்கு புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் பொறியாளர் பெர்லின் தாமஸ் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர்கள் ஜெய்பார்த்தீபன், ஓவியர் ரவி, கதிரேசன், மனோகரன், ஜான் பிரபு, சத்தியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரோட்டரி மாவட்டம் 3000&த்தின் துணை ஆளுநர் சிவாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இம்முகாமினை துவக்கி வைத்தார்.
இந்த மருத்துவ பரிசோதனை முகாமில் மகப்பேறு மருத்துவர் ஜான்சிராணி முனியன், பல் மருத்துவர் மேரி கிறிஸ்டினா பெர்லின், அரசு முதுநிலை கண் பரிசோதகர் அன்னை பார்த்திபன் ஆகியோர் பங்கேற்று காப்பகத்தில் உள்ள அனைத்து மாணவிகளுக்கும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
மேலும், மாணவிகள் அனைவருக்கும் தேவையான மருந்து, மாத்திரைகள், டூத்பிரஷ் மற்றும் எழுது பொருட்களும் சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது.
இம்முகாமிற்கான ஏற்பாடுகளை காப்பாளர் பரமேஸ்வரி உள்ளிட்ட ரோட்டரி நிர்வாகிகள் செய்திருந்தனர். நிறைவில் சங்கத்தின் செயலாளர் பொறியாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.