என் மலர்
புதுக்கோட்டை
ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை, மார்ச்.28-
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கங்களின் புதுக்கோட்டை நகரக்குழு சார்பில் மாவிரன் பகத்சிங்கின் நினைவுதினத்தை ரத்ததானம் வழங்கும் நிகழ்வாக நடத்தப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு வாலிபர் சங்க நரகத் தலைவர் ஏ.டேவிட், மாணவர் சங்க நரகத் தலைவர் எஸ்.மகாலெட்சுமி ஆகியோர் தலைமை வகித்தனர்.
ரத்ததான முகாமை எம்.எல்.ஏ. சின்னதுரை தொடங்கி வைத்தார். முகாமில் கலந்துகொண்டு ரத்தம் வழங்கியவர்களுக்கு, சான்றிதழை வழங்கி அமைச்சர் எஸ்.ரகுபதி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. முத்துராஜா, கோட்டாட்சியர் கருணாகரன், நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்ற உறுப்பினர் மூர்த்தி, மருத்துவர்கள் ராமு, கார்த்திக்தெய்வநாயகம் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் மற்றும் நிர்வாகிகள் அருண், வினோத், ஜீவா, மாணிக்கம், சந்தோÔ¢, ஓவியா, கார்த்திகா, மகாதீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் 91 பேர் ரத்த தானம் செய்தனர்.

விவசாயிகளுக்கு ரூ.31.87 லட்சத்தில் வேளாண் இடுபொருட்களை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில், விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கும் விழா, கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.
விழாவில் அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு ரூ.31.87 லட்சம் மதிப்புடைய வேளாண் கருவிகள் மற்றும் இடுபொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பேசும் போது, தமிழக வரலாற்றில் முதல் முறையாக விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கும், அவர்களுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் உறுதுணையாக இருக்கும்.
அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாரத்திற்குட்பட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், அட்மா, கூட்டுப் பண்ணையத் திட்டம்,
பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின்கீழ் பவர் டில்லர், தெளிப்பு நீர்பாசனக் கருவிகள், மழைத்தூவான், கைத்தெளிப்பான், தென்னைமரம் ஏறும் கருவிகள், தார்பாலின் போன்ற பல்வேறு விவசாய இடுபொருட்கள் மானிய உதவியுடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

ஆதிபராசக்தி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி குட்டைகுளம் மேல்கரையில் அமைந்து அருள் பாலித்துவரும் ஸ்ரீ ஆதிபராசக்தி அன்னை திருக்கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடத்துவதென சக்தி பீட ஆன்மிக இயக்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இதற்காக யாகசாலை அமைத்து கடந்த 26ந் தேதி முதல் வேள்வி பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரண்டு நாட்களாக இரண்டாம் கால வேள்வி பூஜை மற்றும் மூன்றாம் கால வேள்விபூஜை சிறப்பாக நடைபெற்ற நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான இன்று மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ரகுபதி, சிவ வீ.மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அறந்தாங்கி சுற்றுவட்டார பொதுமக்கள், ஆதிபராசக்தி மன்றத்தினர்கள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு ஆதிபராசக்தி அன்னையை வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 100ற்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கண்டியாநத்த கிராமத்தில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் ஆண்டுதோறும் மீன்பிடித் திருவிழா பங்குனி மாதம் சிறப்பாக நடைபெறும்.
நடப்பாண்டு வில்லியநத்தான் கண்மாய் மற்றும் ஓவியன் கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. விவசாயம் செழிக்கவும், மழை பெய்ய வேண்டியும் நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவை ஊர் முக்கியஸ்தர்கள் தொடங்கிவைத்தனர்.
இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று தூரி, கச்சா, ஊத்தா உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களைக் கொண்டு ஜிலேபி, கெண்டை, விரால் உள்ளிட்ட மீன்வகைகளை பிடித்து மகிந்தனர்.

குவைத் ஓட்டல் அதிபரிடம் ரூ.1 கோடி மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கே.ராயவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபாலன். இவர் குவைத் மங்காப் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இதில் இவரது நண்பர் அயூப்கான். இவர் மூலம் திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்த பீர்முகமது அறிமுகமானார்.
இந்நிலையில் பீர் முகமது விற்கு அவசரமாக பணம் தேவைப்பட்டதால் அயூப்கானிடம் கடன் பெற்று தருமாறு கேட்டார். இதனையடுத்து 2018ல் குவைத்தில் இருந்த ஜெயபாலனிடம் அயூப்கான் கூறினார். இதனை கேட்ட ஜெயபாலன், பணம் தருவதாக கூறினார். இதைதொடர்ந்து பீர்முகமது, மைத்துனர் ஹம்மாது, இர்சாத் அமது, இஸ்சியாத் அகமது (வயது 25) ஆகியோருடன் குவைத் சென்று பேசினார்.
கடன் தருவதாக கூறிய ஜெயபாலன் பல்வேறு முறைகளில் வங்கியில் ரூ.1 கோடி செலுத்தினார். வாங்கிய பணத்திற்கு வட்டி மற்றும் அசல் தொகை கூறியபடி கொடுக்கவில்லை. இதில் தன்னை மோசடி செய்ததாக திருச்சி மாநகர கமிஷனரிடம் ஜெயபாலன் புகார் அளித்தார்.
இதன் பேரில் அப்போதைய இன்ஸ்பெக்டர் நாஞ்சில்குமார் வழக்கு பதிந்தார். இதற்கிடையில் மாநகர கமிஷனராக பொறுப்பேற்ற கார்த்திகேயன் நிலுவையில் உள்ள குற்றப்பிரிவு வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தர விட்டார்.
இதன் பேரில் மீண்டும் விசாரணை நடத்திய மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோசலைராமன் தீவிர விசாரணை நடத்தி மோசடியில் ஈடுபட்ட இஸ்சியாத் அகமது என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பொன்னமராவதியில் நகைப்பறிப்பில் ஈடுப்பட்ட 3 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் கருப்பையா மனைவி தருமு அம்மாள் வயது60. இவர் கிளிக்குடி பிரிவு ரோடு பாலம் அருகே மாடு மேய்த்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது ஆட்டோவில் வந்த 3 பேர் பொன்னமராவதிக்கு எப்படி போக வேண்டும் என்று வழி கேட்பது போல் நடித்து தருமு அம்மாள் கழுத்தில் கிடந்த 4பவுன் செயினை பறித்து கொண்டு ஆட்டோவில் 2 பேரும், மோட்டார் சைக்கிளில் ஒருவரும் தப்பி ஓடினர்.
தருமு அம்மாள் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொது மக்கள் திருடனை விரட்டி பிடித்து 2 பேரை போலீசில் ஒப்படைத்தனர். மற்றொருவர் தப்பியோடி விட்டார். பின்னர் அவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் மதுரை கீழதுரை வேதபிள்ளை தெருவை சேர்ந்த சரவண பாண்டி வயது 29,மதுரை ஜெய்ந்தபுரம் விஷ்னுகுமார் , மதுரை மேல அணுப்பாண்டி அன்பழகன் 38 என்பது தெரிய வந்தது.
பின்னர் 3 பேரையும் காரையூர் போலீசார் கைது செய்து இலுப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தில் சாட்சிகளை விசாரணை செய்து குற்றவாளிகள் 3 பேருக்கும் 1 ஆண்டு கடுங்காவல் தண்டணை விதித்து இலுப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிச்சைராஜன் தீர்ப்பளித்தார்.
இதைத் தொடர்ந்து 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆலங்குடியில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் தடை செய்யப்பட்டபொருட்கள் விற்பதாக மாவட்டஎஸ்.பி. நிஷா பார்த்திபன் ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படையினர் ஆலங்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் அப்பகுதியில் உள்ள மளிகை கடை, விடுதிகள், பிளாஸ்டிக்கடைகள் போன்றவற்றில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 315 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், இத்தகைய பொருட்களை பதுக்கி வைத்திருந்த தங்க பாண்டியன்( 27) அசர்கனி (25), ராஜா (42), அப்துல் ரஹ்மான் (27) ஆகியவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குடி சுற்றுவட்டார பகுதியில் நடத்திய சோத னையில் சுமார் ரூ.12 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காசநோய் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு ரோட்டரி சங்கம் சார்பில் காசநோய் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது.
பள்ளி உதவி தலைமை ஆசிரியர் குமாரவேல் தலைமை வகித்தார். ரோட்டரி சங்கத்தின் தலைவர் தட்சிணாமூர்த்தி செயலர் வெங்கடேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி அறிவியல் ஆசிரி யர் மணிகண்டன் வரவேற்றார். நிகழ்ச்சியை ஓய்வு பெற்ற மருத்துவ அதிகாரி சுவாமி நாதன் கலந்து கொண்டு காசநோய் பற்றிய விழிப்புணர்வு உரையாற்றினார்.
மேலும், காசநோய் பற்றி மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பரிசுகள் வழங்கி பாராட்டினார். முடிவில் ஆசிரியர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.

கந்தர்வகோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடை பெற்றது.
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை அடுத்த புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கல்லூரி முதல்வர் அசோக்ராஜன் தலைமை தாங்கினார்.
கணினி இயல் துறை தலைவர் ஜெயபால் முன்னிலை வகித்தார். முகாமில் பேரிடர் விழிப்புணர்வு மற்றும் வாக்களிப்பதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் மின் பொருட்கள் தொழில் பயிற்சி அளிக்கப்பட்டது.
முகாமில் சிறப்பு விருந்தினராக உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குனர் சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளர் கலந்துகொண்டு தூய்மை பணியில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் வீரப்பன், பேராசிரியர் சையது ஆலம், பால விநாயகம், ரங்கராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வீடு இல்லாத ஏழைகள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் திருச்சி கோட்டம், புதுக்கோட்டை மாவட்டம், நரிமேடு திட்டப்பகுதியில் 1920 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த குடியிருப்புகளுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் ஒப்புதல் பெறப்பட்ட பயனாளிகளிடமிருந்து பயனாளிகள் முழு பங்களிப்புத் தொகையை செலுத்தியவர்களுக்கு குலுக்கல் மூலம் குடியிருப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஆனால் பயனாளிகள் முழு பங்களிப்புத் தொகையினை செலுத்தாமல் குடியிருப்புகள் வேண்டாம் என்று சம்மதக் கடிதம் அளித்துள்ள பயனாளிகளை நீக்கம் செய்து மாற்று பயனாளிகளை தேர்வு செய்ய நகர்ப்புறங்களில் வசிக்கும் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள சொந்த நிலம் மற்றும் வீடற்ற பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர்கள் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் உதவி பொறியாளர் மற்றும் உதவி நிர்வாகப்பொறியாளர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், புதுக்கோட்டை அலுவலகம் (கவிநாடு மேற்கு திட்டப்பகுதி மவுண்ட் சீயோன் பள்ளி செல்லும் வழி, இரயில்வே நிலையம் அருகில்) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
தகுதியான பயனாளிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஒப்புதல் பெறப்பட்டு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்ய பயனாளிகள் பங்களிப்புத் தொகையாக ரூ.95,500 செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் உதவிப்பொறியாளர் அலைபேசி எண் 9790382387, தொழில்நுட்ப உதவியாளர்கள் அலைபேசி எண் 9159500840, 8973026147 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் சர்வதேச பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடை பெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் சர்வதேசப்பள்ளியில் அறிவியல் மற்றும் அடல் ஆய்வக கண்காட்சி பள்ளியின் தலைவர் டாக்டர். ஜோனத்தன் ஜெயபரதன், துணைத் தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன், பள்ளியின் முதல்வர் டாக்டர் ஜலஜா குமாரி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் பள்ளியின் தலைவர் மாணவர்கள் இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்ற வேண்டும். அதற்கு அறிவியல் துறையில் சிறந்து விளங்கினால் தான் இயலும்.
அதற்கு மாணவர்கள் இது போன்ற அறிவியல் கண் காட்சியில் அவர்களுடைய அறிவியல் கண்டு பிடிப்பை காட்சி படுத்தமற்றும் ஊக்கப் படுத்த இது ஒருவாய்ப்பாகும்.
கல்வி என்பது மாணவர்களின் சிந்தனையைத் தூண்டக்கூடிய ஒருகளம், சிந்தனையை விரிவு படுத்த வேண்டும் குறுகிய வட்டத்தில் இல்லாமல் சிறந்த சிந்தனையாளராக நம்மை மாற்றுவது கல்வி எங்கு படிக்கின்றோம் என்பது முக்கியம் அல்ல எப்படி படிக்கின்றோம் என்பதே முக்கியம் என்று உரையாற்றினார்.
பள்ளியின் துணைத்தலைவர் மாணவர்கள் தங்களு டைய இளம் வயதிலேயே கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் அதற்கு தகுந்த கல்வி நிறுவனத்தை தேர்ந் தெடுப்பது பெற்றோரின் கடமை. மேலும் தங்களுடைய குழந்தைகள் எந்த படிப்பில் ஆர்வமாக உள்ளார்களோ அதில் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.
பள்ளி முதல்வர் பேசுகையில் மாணவர்களின் ஆர்வத்தை பாராட்டியும் அவர்களை பள்ளிக்கு அனுப்பி வைத்த தலைமையாசிரியருக்கு நன்றியையும் தெரிவித்து வரும் ஏப்ரல் 19-ம் தேதி அன்று பள்ளியில் நடைபெற இருக்கின்ற அடல் சம்மந்தமான மெகா கண்காட்சியில் அரசு பள்ளி மாணவர்களும் தங்களுடைய கண்டுபிடிப்புகளை காட்சி படுத்தலாம் என்றார்.
மேலும் மாணவர்கள் இந்தியா நாட்டை உலக அரங்கில் வலிமை உடைய தாகவும் மற்ற நாட்டிற்கு வழிகாட்டியாக விளங்க செய்யவேண்டும். அதற்கு மாணவர்கள் அனைத்து துறையிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று கூறினார்.
பள்ளி மாணவர்கள் தங்க ளுடைய அறிவியல் கண்டு பிடிப்புகளை கண்காட்சியில் வைத்திருந்தனர். அதை மவுண்ட் சீயோன் பள்ளி மாணவர்கள் அரசுபள்ளி மாணவர்களுக்கு அதன் செயல்பாடுகள் மற்றும் பயன்களை எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் லெம்பலக்குடி அரசுமேல்நிலைப்பள்ளி, நச்சாந்துபட்டி ராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி, புலிவலம்அரசுநடு நிலைப்பள்ளி, நமணசமுத் திரம் மு.சி.த.மு. உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி அடல் ஆய்வக பொருப்பாளர் பியர்சன் பிரிஸ்ட்லி ஜாப் மற்றும் பள்ளி ஒருங்கிணைப்பாளர் சரண்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

புதுக்கோட்டையில் மாணவர்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் குமாரசாமி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜீவானந்தம் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் கவிதா கலந்துக் கொண்டு சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு கையேடுகளை மாணவ ,மாணவிகளுக்கு வழங்கி பேசினார்.
அவர் பேசுகையில், செல்போனில் ஆன்லைன் விளையாட்டு விளையாடும் போது ஏற்படும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும், செல்போனில் ஆன்லைன் விளையாட்டை விளையாடும் போது வரும் தேவை இல்லாத லிங்கை, கிளிக் செய்ய வேண்டாம் என்றார்.
மொபைல் போனை ஆன்லைன் வகுப்புகளில் படிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்; மொபைல்போனில் தவறுதலாக மெசேஜ் வந்தால், பெற்றோரிடம் கூறி காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும், இணையதளம் மூலம் நிதி மோசடி,
சமூக வலைதளங்களை எப்படி கையாளுவது பற்றியும் பின் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து இணையதளத்தில் புகார் அளிக்கலாம் , மேலும் 1930 என்ற இலவச எண்ணிலும் புகார் அளிக்கலாம் என கூறினார்.
கல்லூரி தாளாளர் ஆர்.எம்.வீ.கதிரேசன் மற்றும் பி.கருப்பையா ஆகியோர் சிறப்புரையாற்றினர். நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமலையரசன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் அனைத்து மாணவ,மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.