என் மலர்
உள்ளூர் செய்திகள்

விஷ்ணுகுமார், அன்பழகன், சரவண பாண்டி
நகைப்பறிப்பில் ஈடுப்பட்ட 3 பேருக்கு சிறை தண்டனை
பொன்னமராவதியில் நகைப்பறிப்பில் ஈடுப்பட்ட 3 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் கருப்பையா மனைவி தருமு அம்மாள் வயது60. இவர் கிளிக்குடி பிரிவு ரோடு பாலம் அருகே மாடு மேய்த்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது ஆட்டோவில் வந்த 3 பேர் பொன்னமராவதிக்கு எப்படி போக வேண்டும் என்று வழி கேட்பது போல் நடித்து தருமு அம்மாள் கழுத்தில் கிடந்த 4பவுன் செயினை பறித்து கொண்டு ஆட்டோவில் 2 பேரும், மோட்டார் சைக்கிளில் ஒருவரும் தப்பி ஓடினர்.
தருமு அம்மாள் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொது மக்கள் திருடனை விரட்டி பிடித்து 2 பேரை போலீசில் ஒப்படைத்தனர். மற்றொருவர் தப்பியோடி விட்டார். பின்னர் அவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் மதுரை கீழதுரை வேதபிள்ளை தெருவை சேர்ந்த சரவண பாண்டி வயது 29,மதுரை ஜெய்ந்தபுரம் விஷ்னுகுமார் , மதுரை மேல அணுப்பாண்டி அன்பழகன் 38 என்பது தெரிய வந்தது.
பின்னர் 3 பேரையும் காரையூர் போலீசார் கைது செய்து இலுப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தில் சாட்சிகளை விசாரணை செய்து குற்றவாளிகள் 3 பேருக்கும் 1 ஆண்டு கடுங்காவல் தண்டணை விதித்து இலுப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிச்சைராஜன் தீர்ப்பளித்தார்.
இதைத் தொடர்ந்து 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story