என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    ஆலங்குடியில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்

    ஆலங்குடியில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் தடை செய்யப்பட்டபொருட்கள் விற்பதாக மாவட்டஎஸ்.பி. நிஷா பார்த்திபன் ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படையினர் ஆலங்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    பின்னர் அப்பகுதியில் உள்ள மளிகை கடை, விடுதிகள்,  பிளாஸ்டிக்கடைகள் போன்றவற்றில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 315 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும், இத்தகைய பொருட்களை பதுக்கி வைத்திருந்த தங்க பாண்டியன்( 27)  அசர்கனி (25), ராஜா  (42),  அப்துல் ரஹ்மான் (27) ஆகியவர்களை போலீசார் கைது செய்தனர்.

    ஆலங்குடி சுற்றுவட்டார பகுதியில் நடத்திய  சோத னையில் சுமார்  ரூ.12 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×