என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    கந்தர்வகோட்டையில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.
    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.

    போஷன்   பக்வாடாநீர் மேலாண்மை  மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணிக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி ரேவதி தலைமை தாங்கினார்.

    கந்தர்வகோட்டை வட்டாட்சியர்  பொறுப்பு   அலுவலர் தயாவதி கிறிஸ்டினா பேரணியை  கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பேரணி கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் தொடங்கி  நகரின்  முக்கியவீதிகள் வழியாக சென்று காந்தி சிலையில்  முடிவடைந்தது. பேரணியில் மழைநீர்  சேகரிப்பு பற்றிய பதாகைகளை  ஏந்தி   அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
    திருவரங்குளம் பகுதியில் ஆழ்துளை கிணற்றுக்கு மின்மோட்டார் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழகரும்பிரான்கோட்டை ஊராட்சியைச் சேர்ந்த ஆதிதிராவிடர் காலனி மக்களுக்கு குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் அதில் மின் மோட்டாரை பொருத்தி பொது மக்களின் பயன் பாட்டிற்கு கொண்டு வரவில்லை.

    தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அப்பகுதியில் தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். பொதுமக்கள் திருவரங்குளம் ஒன்றிய ஆணையரிடம் ஆழ்துளை குழாய்க்கு மின்மோட்டார் அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பலமுறை மனு அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரிடம் ஆழ்துளை கிணறுக்கு மோட்டார் பம்ப்செட் அமைத்து அருகிலுள்ள நீர்த்தேக்கத் தொட்டியில் குடிநீர் ஏற்றி பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.
    ஆலங்குடியில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த பேனர்கள் அகற்றப்பட்டது.
    புதுக்கோட்டை:

    ஆலங்குடி பேரூராட்சிக் குட்பட்ட பகுதிகளில் சட்ட விதிமுறைகளை மீறி சாலையோரங்களில் ஆங்காங்கே அதிக அளவில்  பேனர்கள் வைக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால் சாலைகளில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்படுவதாகவும் மற்றும் விபத்துகள் ஏற்படுவதாகவும்  ஆலங்குடி டி.எஸ்.பி. வடிவேலுக்கு தகவல் வந்தது.

    இதைத்தொடர்ந்து   ஆலங்குடி டி.எஸ்.பி.   வடிவேல் மற்றும் பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம் ஆகியோர் உத்தரவின் பேரில்,

    ஆலங்குடி காவல் சப்இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் எஸ்.பி. சி.ஐ.டி. தனிப்பிரிவு ராஜா மற்றும் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3 பேர் மீண்டும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது சக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று காலை 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்துறை அலுவலக அனுமதியுடன் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    அவர்களில் பெரும்பாலானோர் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் வந்தது.

    உடனே அச்சமடைந்த மீனவர்கள் கடற்படையினருக்கு பயந்து வலைகளை சுருட்டிக் கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். அதில் ஒரு விசைப்படகை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் அதிலிருந்த மீன வர்களான ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 38), கலைமாறன் (29), விஸ்வலிங்கம் (50) ஆகிய மூன்று மீனவர்களையும் எல்லைதாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனர்.

    மேலும் விசுவலிங்கம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர் படகுடன் மீனவர்களை இலங்கையில் உள்ள மயிலட்டி துறைமுகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் புதுக்கோட்டை மீன வர்கள் விடுதலை செய்யப்படுவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்பது பிற்பகலில் தெரியவரும்.

    ஏற்கனவே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரம் மீனவர்கள் 16 பேரை விடுவிக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு கடந்த 28-ந்தேதிதான் மீண்டும் கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் தற்போது புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3 பேர் மீண்டும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது சக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    நேற்று முன்தினம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை சென்று மீன்பிடி கொள்கை உள்ளிட்டவை குறித்து அந்நாட்டு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்வதை இலங்கை அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது.

    எனவே மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    இந்திய எல்லை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மக்களை அச்சுறுத்தும் எந்தவொரு அபாயகரமான திட்டங்களையும் தமிழக அரசு நிறைவேற்றாது என்றுஅமைச்சர் தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுரமின் விளக் கினை  சுற்றுச்சூழல்,  கால நிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன்,  விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன்  இன்று  காலை  திறந்து வைத்தார்.

    பின்னர்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,  தமிழகத்தில்  உள்ள அனைத்து  மாவட்ட  விளையாட்டரங்குகளிலும் சிந்தடிக் டிராக் (வழித்தடம்) அமைக் கப்படும்.  புதுக்கோட்டை மாவட்ட    விளையாட்டரங்கம் மேம்படுத்தப்படும். மக்களை  அச்சுறுத்தும்  எந்த வொரு அபாயகரமான திட்டங்களுக்கும் தமிழக அரசு அனுமதி தராது.

    தமிழகம், இந்தியா மட்டு மல்லாது உலக அளவில் தமிழக முதல்வர் சுற்றுசூழல் ஆர்வலராக , பாதுகாவலராக இருக்கிறார். நடைபயிற்சி செல்ல விருப்பப்படுவர்கள் நம்பர்களை சேகரித்து அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்பட்டு நடை பயிற்சி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் கட்டப்பட்டு வரும் உள்விளையாட்டரங்கம் டெண்டர் விடப்பட்டதில் ரூ.4.62 கோடிக்கு பதிலாக ரூ.1 கோடியே 15 லட்சத்துக்கு விடப்பட்டதால் குளறுபடி நடந்துள்ளது.

    எனவே பணிகள் பாதியில் நிற்கிறது. தமிழக முதல்வரி டம் இதுகுறித்து அறிவித்து உரிய நடவடிக்கை எடுத்து முழு நிதி பெற்று விரைவில் முழுமையாக கட்டி முடிக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
    புதுவையில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனிப்பிரிவு உருவாக்க வேண்டும் அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம் வலியுறுத்தல்
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம் பேசியதாவது:-

     அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் பல வகுப்புகளுக்கு ஒரே ஆசிரியர் பாடம் எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. இதை கருத்தில் கொண்டு ஆசிரியர் பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும். 

    மேட்டுப்பாளையத்தில் உள்ள ஆயிகுளத்தை சுற்றுலா தலமாக மாற்றலாம். அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். 

    என் தொகுதியில் தேரோட்டத்தின் போது மின் வயர்கள் இடையூறாக இருப்பதால் மின்தடை ஏற்படுத்துகின்றன.
     
    கோடை காலத்தில் மின்தடையால் மக்கள் அவதிப்படுவர். எனவே இதற்கு அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும். 

    கஞ்சா விற்பனையை ஒழிக்க பல உறுப்பினர்கள் பேசினர். கஞ்சா விற்பனையை தடுக்கவும், ஒழிக்கவும் காவல்துறையில் தனிப்பிரிவு உருவாக்க வேண்டும். 

    ஒரு போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 2 இன்ஸ்பெக்டர், 5 சப்-இன்பெக்டர், 10 போலீசார் கொண்ட தனிப்பிரிவு உருவாக்க வேண்டும். டெல்லியை ஆள்வது என்பது வேறு, புதுவையை ஆள்வது என்பது வேறு. 

    முதல்-அமைச்சருக்கு அனுபவமும், முதிர்ச்சியும், திறமையும் உள்ளது. எனவே நல்லாட்சியையும், நல்ல திட்டங்களையும் தருவார். 

    இவ்வாறு அவர் பேசினார்.
    மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வல்லவாரி கிராமத்தை சேர்ந்தவர் தவச்செல்வன் வயது 50. இவர் சம்பவத்தன்று சொந்த வேலையாக தனது மோட்டார் சைக்கிளில் குளமங்கலம் தெற்கு கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக  அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு அனுமதிக்கப்பட்ட தவச்செல்வன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கண்டியாநத்தம் கிராமத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொது மருத்துவ முகாம் மற்றும் கண்காட்சி நடந்தது.

    முகாமினை ஊராட்சித் தலைவர் செல்விமுருகேசன் தொடங்கி வைத்தார். பொன்னமராவதி துர்கா மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர்,   பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சர்க்கரை, ரத்த அழுத்தம், போன்றவைகள் செய்து மருந்து மாத்திரை வழங்கினார்கள்.

    பள்ளி மாணவர்களுக்கு ரத்தவகை கண்டறியப்பட்டது. இதில் தலைமையாசியர் சுபத்ரா, வார்டு உறுப்பினர் அழகப்பன், ஊராட்சி செயலர் அழகப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை தாமாகவே முன்வந்து அகற்ற வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கீரமங்கலம் சரகம், சேந்தன்குடி பகுதியில் 53.02.5 ஹெக்டேர் பெரியாத்தாள் ஊரணி என வகைபாடு செய்யப்பட்டுள்ள  நிலத்தில்   கடலை, மலர், தென்னை உள்ளிட்ட பயிர் சாகுபடி மூலமாக பல்வேறு நபர்கள் 24 ஹெக்டேர் பரப்பு நீர்நிலை புறம்போக்குகளில் ஆக்கிரமித்து செய்து வந்தனர்.

    நீர்நிலை புறம்போக்குக ளில் ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும் என்ற உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் அறிவுரைப்படி, மேற்கண்ட ஆக்கிரமிப்புகள் கடந்த 24.03.2022 மற்றும் 26.03.2022 ஆகிய இரு நாள்களில் 5 ஜேசிபி எந்திரங்களின் உதவியுடன் புதுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் பணிகள் நடைபெற்றன.

    ஆலங்குடி நீர்வளத்துறை பாசனப்பிரிவு உதவி பொறியாளர், ஆலங்குடி வட்டாட்சியர்  மற்றும் கீரமங்கலம் காவல் ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில் 24 ஹெக்டேர் பரப்பளவிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டன.

    மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் எவ்வித தயவு தாட்சயமின்றி அகற்றப்படும் எனவும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியினை தடை செய்யும் நபர்கள் மீது சட்டபடியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

    எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நீர் நிலைப்புறம்போக்கு நிலங்கள்  உள்ளிட்ட அனைத்து வகையான அரசு புறம்போக்கு நிலங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை தாமாக முன்வந்து அகற்றி கொள்ளவேண்டும்.

    இதில் தவறும் பட்சத்தில் ஆக்கிரமிப்புகளை அரசு சார்பில் அகற்றி, அதற்குரிய செலவினங்கள் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும்.

    இவ்வாறு கலெக்டர் அதில் தெரிவித்துள்ளார்.
    சாலையோர வாழ்த்து பதாகையை பார்த்து திருமண வீட்டிற்கு சென்று அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து கூறினார்.
    புதுக்கோட்டை:


    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் & கரம்பக்காடு முத்து மாரியம்மன்கோவிலில் கடந்த சில வருடங்களாக திருப்பணிகள்  நடந்து  வருகிறது. 

    இந்த நிலையில் நேற்று காலை கோவிலுக்கு சென்ற அமைச்சர் மெய்யநாதன் திருப்பணிக்குழுவினர் மற்றும் கிராம மக்களிடம் ரூ.30 லட்சம் நிதியை திருப்பணிக்காக வழங்கினார். 

    பின்னர் அங்கிருந்து கீரமங்கலம் வடக்கு அறிவொளி நகர் நரிக்குறவர் காலனி வழியாக சென்ற போது, ஒரு திருமணத்திற்காக பந்தல் போடப்பட்டு பதாகையும் வைக்கப்பட்டிருப்பதை பார்த்தார். 

    உடனே அந்த வழியாகச் சென்ற அமைச்சர் திடீரென காரை நிறுத்தச் சொல்லி அந்த காலனிக்குள் சென்று மண மக்களை  அழைத்து வாழ்த்தியதுடன்  பரிசும் வழங்கினார்.  தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் குறை களை கேட்டுஉடனே குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், அமைச்சருக்கு நாங்கள் அழைப்பிதழ் கொடுக்கவில்லை.   ஆனால் அவர் படம் வைத்து பதாகை வைத்திருந்தோம்.    அந்த பதாகையை பார்த்து வந்து மணமக்களை அமைச்சர் வாழ்த்தி, எங்கள் காலனி மக்களின் குறைகளை கேட்டது  ரொம்ப மகிழ்ச்சி யாக இருந்தது என்றனர்.
    ஆலங்குடியில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ஜாகீர் உசேன் தெருவை சேர்ந்த முகமது உசேன் மகன் அபுபக்கர் சித்திக் வயது 14. இவர் ஆலங்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால்  சகநண்பர்களுடன் சேர்ந்து ஆலங்குடி அருகே நெம்மக்கோட்டை உடையார்தெரு புதுகுளத்தில் குளிப்பதற்கு சென்றுள்ளார்.

    பின்னர் சகநண்பர்களுடன் சேர்ந்து குளத்தில் குளித்து உள்ளனர். அப்போது அபுபக்கர்சித்திக்  குளத்தில் மூழ்கினார்.  உடனே மற்ற நண்பர்கள் சத்தம் போட்டனர்.

    இதைத் தொடர்ந்துஅக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று குளத்தில் மூழ்கிய அபுபக்கர் சித்திக்கை மீட்டு சிகிச்சைக்காக அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அபுபக்கர் சித்திக் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    அறந்தாங்கியில் மகளிருக்கான கபாடி போட்டி நடை பெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை  மாவட்டம் அறந்தாங்கி  அருகே ரெத்தினக்கோட்டையில் மகளிர் கபாடி போட்டி நடைபெற்றது.

    இதில் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளில்  வந்திருந்த 18 அணியினர் கலந்து கொண்டனர்.  

    லீக் அடிப்படையில் மொத்தம் 34 சுற்றுகளாக   நடை பெற்ற  கபாடி  போட்டியில் பெண்கள் தங்களது அபார திறமைகளை வெளிப்படுத்தினர்.

    சனி, ஞாயிறு என இரண்டு தினங்களாக நடைபெற்று வந்த கபாடி போட்டியை பல்வேறு  பகுதியிலிருந்து வந்திருந்த ஏராளமான கபாடி ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கபாடி போட்டியில் கலந்து கொண்ட பெண் வீராங்கனைகளை உற்சாகப்படுத்தி கண்டு ரசித்தனர்.

    பெண்கள் கபாடி போட்டியில் 1-வது பரிசு வெற்றி பெற்ற சென்னை சிட்டி போலீஸ் அணியினருக்கு  ரூ.25 ஆயிரமும், 2வது பரிசு வென்ற சென்னை தமிழ்நாடுபோலீஸ் அணியினருக்கு ரூ.15 ஆயிரமும், 3வது பரிசு வென்ற திருநெல்வேலி,  4வது பரிசு வென்ற ஒட்டன்சத்திரம் அணியினருக்கு தலா 8 ஆயிரமும் வழங்கப்பட்டது.

    வெற்றி பெற்ற அனைத்து அணியினருக்கும் 10 ஆயிரம் மதிப்புள்ள நினைவு கோப்பைகள் சமூக ஆர்வலர் சதாம் உசேன் சார்பாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஏகே அய்யா, மாரிமுத்து, கிருஷ்ணன், செய்யது முகமது, முத்துவீரன் உள்ளிட்ட ரெத்தினகோட்டை கிராமத் தார்கள் செய்திருந்தனர்.

    ×