என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்பிரிவு- அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம் வலியுறுத்தல்
புதுவையில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனிப்பிரிவு உருவாக்க வேண்டும் அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம் வலியுறுத்தல்
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம் பேசியதாவது:-
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் பல வகுப்புகளுக்கு ஒரே ஆசிரியர் பாடம் எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. இதை கருத்தில் கொண்டு ஆசிரியர் பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும்.
மேட்டுப்பாளையத்தில் உள்ள ஆயிகுளத்தை சுற்றுலா தலமாக மாற்றலாம். அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.
என் தொகுதியில் தேரோட்டத்தின் போது மின் வயர்கள் இடையூறாக இருப்பதால் மின்தடை ஏற்படுத்துகின்றன.
கோடை காலத்தில் மின்தடையால் மக்கள் அவதிப்படுவர். எனவே இதற்கு அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
கஞ்சா விற்பனையை ஒழிக்க பல உறுப்பினர்கள் பேசினர். கஞ்சா விற்பனையை தடுக்கவும், ஒழிக்கவும் காவல்துறையில் தனிப்பிரிவு உருவாக்க வேண்டும்.
ஒரு போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 2 இன்ஸ்பெக்டர், 5 சப்-இன்பெக்டர், 10 போலீசார் கொண்ட தனிப்பிரிவு உருவாக்க வேண்டும். டெல்லியை ஆள்வது என்பது வேறு, புதுவையை ஆள்வது என்பது வேறு.
முதல்-அமைச்சருக்கு அனுபவமும், முதிர்ச்சியும், திறமையும் உள்ளது. எனவே நல்லாட்சியையும், நல்ல திட்டங்களையும் தருவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story






