என் மலர்
புதுக்கோட்டை
கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் கஞ்சா விற்பனை நடை பெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் அறந்தாங்கி காவல்த்துறையினர்,
கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கூடுகின்ற பேருந்து நிலையம் போன்ற இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திருநாளூரில் காரில் வைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவது தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருநாளூரை சேர்ந்த விஜய் (வயது23), கோயம்பதூரை சேர்ந்த பிரகாஷ் (24), தினேஷ்பாபு (28) ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து 21 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் சான்ட்ரோ கார் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளையூர் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் பிரசித்து பெற்ற கோவில்களில் ஒன்றாகும். தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் இயங்கிவரும் இக்கோவிலில் பங்குனி பெருந்திருவிழா ஆண்டு தோறும் வெகுவிமெர்சையாக நடைபெறும்.
அதேபோல் இந்த ஆண்டு கடந்த மாதம் 20ந் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து கடந்த 27ம் தேதி காப்புக்கட்டப்பட்டு தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்பாள் திருவீதி உலா மற்றும் வழிபாடு நடைபெற்று வருகிறது.
மண்டகப்படி நாள்களில் தினமும் இரவில் அம்பாள் திருவீதி உலாவின்போது ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அம்பாள் முன்பாக வரிசையாக இருபுறமும் நின்று தீப்பந்தம் பிடிப்பார்கள். இந்த தீப்பந்தம் பிடிக்கும் வேண்டுதல் மூலம் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் ஆகின்றது,
உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல்நலம் சீராகிறது,தீப்பந்த ஒளியில் பக்தர்கள் வாழ்வில் ஒளி பிறக்கிறது என்று ஐதீகமாக கடைபிடிக்கப்பட்டு பொதுக்கள் வழிபாடு செய்து வருகிறார்கள்.
பொன்னமராவதி ஊரார்கள் சார்பில் நடைபெற்ற மண்டகப்படி நிகழ்வில் திரளான பக்தர்கள் தீப்பந்தம் பிடித்து வழிபாடு செய்தனர். அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.
இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். உலகத்தில் இது போன்ற வேண்டுதல் தீவெட்டி பிடித்தல் வழிபாடு எங்குமே கிடையாது. இது இக்கோயிலின் சிறப்பாகும்.

கறம்பக்குடி மீனம்பட்டியில் முனியாண்டவர் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடை பெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம், வாரைவளர் வாராப்பூர் நாட்டைச் சேர்ந்த வளங் கொண்டான்விடுதி ஊராட்சி மீனம்பட்டி கிராமத்தில் முனியாண்டவர் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வழக்கறிஞர் கீரனூர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் தாங்கினார்.
புதுக்கோட்டை தொகுதி சட்டமன்றஉறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க. கழக அமைப்பு செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர்,
புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன், கறம்பக்குடி வட்டாட்சியர் விஸ்வநாதன், கறம்பக்குடி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தவ. பாஞ்சாலன், மாவட்ட மருத்துவரணி பொறுப்பாளர் மு.க.முத்துகருப்பன் கலந்து கொண்டனர்.
விழாவில் திருச்சி, திண்டுக்கல், மணப்பாறை, புதுக்கோட்டை, காரைக்குடி மற்றும் பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரத்திற்கும் மேற் பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் கலந்து கொண்டன. ஜல்லிக்கட்டு காளையை அடக்கிய வீரர்கள் 200 பேர் மருத்துவ சோதனைக்குப்பின் களமிறக்கப்பட்டனர்.
காளையை அடக்கிய வீரர் களுக்கும் மற்றும் காளைக ளுக்கும் ரூ.10 லட்சம் மதிப் புள்ள தங்க நாணயம், வெள்ளி நாணயம், சைக்கிள், மிக்சி, கிரைண்டர், போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு விழாவை முன்னிட்டு மருத்துவகுழு அவசரகால ஊர்தி ஏற் பாடு செய்யப்பட்டது. இந்த விழாவில் ஜல்லிக்கட்டு காளையை அடக்கிய 40 வீரர்களுக்கு காயம் ஏற்பட் டது. 7 பேர் மேல்சிகிச்சைக் காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைக் கப்பட்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆலங்குடி டி.எஸ்.பி. வடி வேல், கறம்பக்குடி காவல் துறை இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன், மழையூர் சப்& இன்ஸ்பெக்டர் ராஜூ செய்திருந்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை மீனம்பட்டி கிராம பொது மக்கள், இளைஞர்கள் மற்றும் சுற்று வட்டார பொது மக்கள் செய்திருந்தனர்.

வழக்கறிஞர்கள் திடீர் என சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாசில்தார் பிரவீனாமேரி, அரிமளம் போலீசில் புகார் கொடுத்தார். அதில், திருமயம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருப்பவர் வீரமுத்து. இவர் தன்னை பற்றி அவதூறாக, மணலை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக செய்தி பரப்பியதாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
புகாரின்பேரில் அரிமளம் போலீசார் வீரமுத்து மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அறிந்த வழக்கறிஞர்கள், வீரமுத்துவிற்கு ஆதரவாக,
இன்று நீதிமன்ற வளாகம் முன்பாக திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக போலீசார் வந்து வழக்கறிஞர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில் சமரசம் ஏற்படாத வழக்கறிஞர்கள், போராட்டத்தை கைவிட்டு நீதிமன்ற வளாகம் முன்பாக தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். அப்போது அவர்கள் வழக்கறிஞர் மீது தவறான புகார் கொடுத்த தாசில்தாரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை நகராட்சி நியமனக் குழு உறுப்பினராக தி.மு.க. கவுன்சிலர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகராட்சி குழு உறுப்பினர்கள் தி.மு.க. சேர்ந்தவர்கள் 6 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மொத்தமுள்ள 42 கவுன்சிலர்களில் 30 கவுன்சிலர்கள் கலந்துக் கொண்டனர்.
அ.தி.மு.க.வினர் வரவில்லை. நியமனக்குழு உறுப்பினராக 36வது வார்டில் தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற வளர்மதி சாத்தையா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒப்பந்தக்குழுவிற்கு தி.மு.க.வை சார்ந்த எட்வர்ட் சந்தோசநாதனும், வரி விதிப்பு மேல்முறையீடு குழுவிற்கு தி.மு.க.வை சேர்ந்த ராஜேஸ்வரி, ரமேஷ்பாபு, லதாராமலிங்கம், அடைக்கலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை சக கவுன்சிலர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன், நகராட்சி தலைவர் திலகவதி செந்தில், துணை தலைவர் லியாகத்அலி, உட்பட கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர். நகராட்சி ஆணையர் நாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகளும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
பெண் தற்கொலை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கறம்பக்காடு இனாம் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மனைவி ஷாலினி (வயது 25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் ஷாலினி வீட்டில் தூக்கில் தொங்கியதை பார்த்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு அறந்தாங்கி அர சு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஷாலினி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாகனம் மோதியதில் மாணவர்கள் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி- காரைக்குடி சாலையில் தனியார் பள்ளி உள்ளது. இதில் முகமது ஆதீன் (வயது 13), முகமது பரீத் (13) ஆகிய மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை வழக்கம்போல் பள்ளி முடிந்து இரண்டு மாணவர்களும் தங்களது மிதிவண்டியில் சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக குடிதண்ணீர் வினியோகம் செய்யும் வாகனம் மாணவர்கள் மீது மோதியது.
இதில் மாணவர் முகமது ஆதினுக்கு காலில் பலத்த அடி ஏற்பட்டு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் இரண்டு மாணவர்களையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாஙகி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.
சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாயி கொலைக்கு முன்விரோதம் காரணமா? அல்லது வேறு பிரச்சினை இருந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நம்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் மகன் சுந்தரமூர்த்தி (வயது 40). விவசாயியான இவர் மசால் பொடி அரைக்கும் மில் ஒன்றும் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார்.
சுந்தரமூர்த்தியின் சகோதரர்கள், சகோதரி ஆகிய அனைவரும் ஓரே கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். தினமும் வயலுக்கு செல்லும் சுந்தரமூர்த்தி, அங்கு பணிகளை முடித்து விட்டு பின்னர் தனக்கு சொந்தமான மில்லுக்கு வருவார். இரவு 10 மணி வரை அங்கு இருந்துவிட்டு வீடு திரும்புவார்.
இந்தநிலையில் நேற்று இரவு நீண்ட நேரமாகியும் சுந்தரமூர்த்தி திரும்பவில்லை. அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அதுவும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில் இருந்தது.
இதற்கிடையே இன்று காலை ஆலங்குடி-செம்பட்டி விடுதி சாலையில் உள்ள அவருடைய மில்லுக்கு சற்று தொலைவில் சுந்தரமூர்த்தி படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடல் முழுவதும் வெட்டு காயங்கள் இருந்தன. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. மேலும் சுந்தரமூர்த்தி கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சுந்தரமூர்த்தியின் கொலைக்கு முன்விரோதம் காரணமா? அல்லது வேறு பிரச்சினை இருந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கல்லூரி ஆண்டுவிழா நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டுவிழா மற்றும் புதுப்பிக்கப்பெற்ற இயற்பியல் ஆய்வுக்கூடம் மற்றும் வகுப்பறைக திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு சன் மார்க்க சபை தலைவர்பழனியப்பன் தலைமைவகித்தார். கல்லூரி முதல்வர் செல்வராசு ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரிக்குழு தலைவர் நாகப்பன் சிறப்பு அழைப்பாளர்கள் குறித்த அறிமுக உரையாற்றினார்.
புதுப்பிக்கப்பட்ட இயற்பியல் ஆய்வுக்கூடத்தை திருச்சி கிளாஸிக் குழும தலைவர் எஸ்.ஆதப்பன், வகுப்பறைகளை காசி நாட்டுக்கோட்டை நகர சத்திர மேலாண்மைக்கழக தலைவர் பழ.ராமசாமி ஆகியோர் திறந்துவைத்தனர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று இலக்கிய சொற்பொழிவாளர் சொற்சிலம்பர் பேராசிரியர் மா.சிதம்பரம் பேசினார்.
நிகழ்ச்சியில் விளையாட்டு மற்றும் இலக்கிய போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு கல்லூரிக்குழு தலைவர் கண்ணன், செயலர் சுந்தரம் ஆகியோர் பரிசு வழங்கினர். பேராசிரியர்கள் பழனியப்பன், முடியரசன், முருகேசன், தமிழ்ச்செல்வி, பிருந்தா ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக உதவிப்பேராசிரியர் அழகம்மை வரவேற்றார். உதவிப்பேராசிரியர் முகமது இப்ராஹிம் மூசா நன்றி கூறினார்.

ரூ. 3 லட்சம் வரை வருமானம் ஈட்டிய பட்டு விவசாயிகளுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், பட்டு வளர்ச்சித் துறையின் மூலம் சிறந்த பட்டு விவசாயிகளுக்கு பரிசுத் தொகைகளை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்.
பட்டு விவசாயி களை ஊக்குவிக்கும் வகையில் வருடந்தோறும் அதிக அளவில் பட்டு உற்பத்தி செய்யும் சிறந்த பட்டு விவசாயிகளுக்கு பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வருடத்திற்கு 8 முறை பட்டுப் புழு வளர்த்து ரூ.3 லட்சம் வரை வருமானம் ஈட்டிய விவசாயிகளுக்கு பரிசுத் தொகைகள் வழங்கப்படுகிறது.
அதன்படி முதல் பரிசாக அரையப்பட்டியை சேர்ந்த தமிழழகன் என்பவருக்கு ரூ.25,000, இரண்டாம் பரிசாக காயக்காடு கிராமத்தை சேர்ந்த ராகவன் என்பவருக்கு ரூ.20,000 மற்றும் மூன்றாம் பரிசாக அரியாணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்து என்பவருக்கு ரூ.15,000 பரிசுத் தொகைகளை விவசாயிகளிடம் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
பட்டு வளர்ப்புத் தொழிலில் மென்மேலும் சாதனைகள் புரிய விவசாயிகளிடம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பட்டு வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் ரெங்கபாப்பா, ஆய்வாளர் சத்யா, இளநிலை ஆய்வாளர்கள் கீதா, அகிலா, ராஜநாராயணன் மற்றும் அலுவலகள் கலந்து கொண்டனர்.

அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றி அமுத பெருவிழாவினை சிறப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், வருகின்ற ஏப்ரல் 2வது வாரத்தில் 7 நாட்கள் 75வது சுதந்திர தினவிழா சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்படவுள்ளது.
அதனை முன்னிட்டு அனைத்துத் துறைகளின் சார்பில், செயல்படுத்தப் பட்டுவரும் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த, பல்துறை பணிவிளக்கக் கண்காட்சி புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.
அதன்படி நடை பெறவுள்ள பல்துறை பணிவிளக்கக் கண்காட்சியை சிறப்பாக நடத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு அலுவலர் களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் வருகின்ற ஏப்ரல் 2வது வாரத்தில் 7 நாட்கள் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் இந்திய விடுதலைக்காக பாடுபட்ட தேசத் தலைவர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத் திலிருந்து விடுதலைப்போரில் பங்கேற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை போற்றும் வகையில் அவர்களது புகைப்படங்கள் மற்றும் அவர்கள் பற்றிய சிறு குறிப்புகள் இடம் பெறும் புகைப்படக் கண்காட்சியினை செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் காட்சிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
மேலும், இக்கண்காட்சி அரங்கினை அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் கிராமங்கள்தோறும் விழா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவினை சிறப்பாக கொண்டாடிட அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்.

குடிநீர் பிரச்சினைக்கு உறுதியான நடவடிக்கை தேவை என்று உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகர்மன்ற முதல் கூட்டம், அதன் தலைவர் செ.திலகவதி தலைமையிலும், துணைத்த¬லைவர் லியாகத்அலி, ஆணையர் நாகராஜன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய பெரும்பாலான கவுன்சிலர்கள், தங்களது வார்டுகளில் நிலவும் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும்.
பொதுக்கழிப்பறைகளுக்கு தடையில்லா தண்ணீர் வசதியை உத்தரவாதப்படுத்தி, முறையாக பராமரிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என தலைவர் திலகவதி தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் கருணாநதிதிக்கு சிலை வைத்தல் உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உறுப்பினர்களுக்கான மைக்குகள் சரியாக செயல்படவில்லை. மேலும் உறுப்பினர்கள் பேசியதை தலைவர், அலுவலர்கள் கூட கேட்க முடியாமல் தடுமாறினர்.
இதனால் தலைவர் பேசுவதற்கு சிறப்பு ஒலிபெருக்கி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் உறுப்பினர்களுக்கு அவ்வாறு செய்யப்படவில்லை. அடுத்த கூட்டத்தில் ஒலிபெருக்கியை சரி செய்ய வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.