என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் மழலை மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலை மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் குணவதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினர்.
அவர் பேசும்போது, மாணவர்களின் முன்னேற்றத்தில் பள்ளிக்கூடங்களுக்கு எவ்வளவு பொறுப்பு இருக்கிறதோ அதைவிடவும் கூடுதலான பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது. ஏனென்றால் இன்றைய நிலையில் நடைபெறும் குற்றங்களை கணக்கெடுத்தால் இளைஞர்கள்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள்.
அவர்கள் ஏன் இந்த நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்றால் பெற்றோர்களின் அன்பும் அரவணைப்பும் அவர்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என்பதால்தான். ஆகவே இந்த பட்டமளிப்பு விழா நாளில் பெற்றோர்கள் உறுதியெடுத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தைகளிடம் நல்ல கனவை விதையுங்கள். அவர்கள் அதிகாரிகளாக, மருத்துவர்களாக, பொறியாளர்களாக வருவதை விடவும் முதலில் நல்ல மனிதர்களாக வளர வேண்டும் என்று பேசினார்.
பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி விழாவுக்கு தலைமை தாங்கினார். பள்ளியின் சட்ட ஆலோசகர் அரசு சிறப்பு வழக்கறிஞர் செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் பள்ளி ஆலோசகர் கவிஞர் அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் பேராசிரியர் கருப்பையா, மகாத்மா ரவிச்சந்திரன், வேங்கடசுப்பிரமணியன், பள்ளி துணை முதல்வர் குமாரவேல் ஒருங்கிணைப்பாளர் கௌரி, பள்ளியின் மேலாளர் ராஜா, ஆசிரியைகள் சந்திரகலா, பவுலின் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை ஆசிரியை பவானி மற்றும் காசாவயல் கண்ணன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். நிறைவாக ஆசிரியை சிம்ரன் பிரைட் நன்றி கூறினார்.

புதுக்கோட்டை அருகே வாலிபரை தாக்கியவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, வானக்கன்காடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். பட்டியல் இனத்தை சேர்ந்த இவரை, கடந்த ஜனவரி மாதம் 27ந்தேதியன்று அதே ஊரை சேர்ந்த ஆதிக்க சாதியினர் அவரின் தந்தை செய்த அடிமை தொழில் செய்ய வற்புறுத்தியுள்ளனர்.
அதற்கு செந்தில்குமார் மறுத்துள்ளார். இதற்கு அவரை சாதியை சொல்லி இழிவாக பேசி, தகாத முறையில் அடித்தும் துன்புறுத்தி வன்கொடுமை செய்துள்ளனர். இந்நிகழ்வின் போது பதிவு செய்யப்பட்ட 1 மணி நேரத்திற்கும் மேலாக உள்ள முழு ஆடியோ ஆதாரம் உள்ளது.
இதன் அடிப்படையில் இந்த வன்கொடுமை நடந்த அன்றே வடகாடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் அதே ஊரை சேர்ந்த தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஒருவரின் அரசியல் அழுத்தம் காரணமாக காவல்துறை இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் வன்கொடுமைக்கு துணை போகும் தி.மு.க. ஒன்றிய செயலாளரை கண்டிக்கும் விதமாகவும், நடவடிக்கை எடுக்க தயங்கும் மாவட்ட காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய கோரி, அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் சார் பாக மாநில செயல் தலைவர் இளமுருகுமுத்து தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தின் நிறைவில் அம்பேத்கர் மக்கள் இயக்க மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் மேலும் இதர கட்சி நிர்வாகிகள் பலர் கண்டன உரையாற்றினார். முடிவில் செயல் தலைவர் இளமுருகுமுத்து தலைமை உரையாற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். இதில் 300க்கும் மேற்பட்ட பல தரப்பட்ட கட்சியை சேர்த்த வர்கள் கலந்து கொண்டனர்.

ஆலங்குடி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கோடை காலத்தையொட்டி இன்வெர்ட்டர் எந்திரம் வழங்கப்பட்டது.
புதுககோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அனுமார் கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கறம்பக்குடி வட்டாட்சியர் விஸ்வநாதன், வருவாய் ஆய்வாளர் ரவிக்குமார் கிராம நிர்வாக அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலையில் முனியசாமி, காளீஸ்வரி தம்பதியர் தடையில்லா மின்சாரம் வழங்க இன்வெர்ட்டர் வழங்கினர்.
இந்நிகழ்வில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜலிங்கம் ஆசிரியர் பயிற்றுநர் பயிற்றுநர் குமாரசாமி பள்ளி மேலாண்மைக்குழு தலைவி போதும்பொண்ணு பள்ளி தலைமை ஆசிரியர் விஸ்வாசம்,
சத்துணவு அமைப்பாளர் குமார் ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், வட்டார வள மையத்தினர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கறம்பக்குடி வட்டாட்சியர் விஸ்வநாதன் ரூ.1000 வழங்கி தம்மை பள்ளி புரவலராக இணைத்துக்கொண்டார்.

பொன்னமராவதி அருகே இன்று காலை நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் செவிலி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. பொதுவாக பொன்னமராவதி சுற்று வட்டார பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடை காலம் துவங்கும் முன் விவசாய கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெறும்.
ஜாதி, மதம் பாராமல் நடைபெறும் இந்த திருவிழா கொரோனா பெறுந்தொற்று ஊரடங்கு காரணமாகவும் போதிய நீரின்றியும் மீன்பிடி திருவிழா நடைபெறவில்லை
இந்தநிலையில் இன்று ஞாயிற்றுகிழமை செவலூர் ஊராட்சியில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஒரு கிலோ மீட்டர் நீளம் கொண்ட செவிலி பெரிய கண்மாயில் செவலூர், மலையடிப்பட்டி, குழிபிறை, பனையப்பட்டி, ஆத்தூர், வீரராணாம்பட்டி, செம்பூதி, ஆலவயல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியைச்சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கண்மாயில் குவிந்தனர்.
பாரம்பரிய முறையில் கண்மாயில் இறங்கி பொதுமக்கள் ஊத்தா, வலை, கூடை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டு லாபகரமாக மீன் பிடிக்கத்தொடங்கினர். அதில் ஒவ்வொருவர் கைக ளுக்கும் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன.
அதனை மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு கொண்டு சென்றனர். இதன் மூலம் இன்று ஊரே மீன் கமழும் வாசம் அனைவரையும் சுண்டி இழுத்தது.

நீட் தேர்வு விவகாரத்தில் சட்டப்போராட்டம் செய்து விலக்கு பெறுவதற்கு எல்லா முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பி.மாத்தூரில் நடைபெறும் தி.மு.க. நிர்வாகியின் இல்லத்திருமண விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு புதுக்கோட்டை தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இச்சடி என்ற இடத்தில் தி.மு.க.வினர் வரவேற்பு கொடுத்தனர்.
அப்போது நிருபர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு உட்பட ஒன்பதாம் வகுப்பு வரையில் இந்த ஆண்டு இறுதித் தேர்வு நிச்சயம் நடைபெறும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். தேர்வு குறித்து இன்று மாலை அறிவிப்புகள் வெளியாகும்.
இந்த ஆண்டு குறைந்த கால கட்டமே மாணவர்கள் பள்ளிக்கு வரும் சூழ்நிலை இருந்ததால் பாடத்திட்டம் ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தான் தேர்வு நடத்த உள்ளோம். முதலமைச்சரின் டெல்லி பயணம் வெற்றி அடைந்துள்ளது.
நீட் தேர்வு விவகாரத்தில் சட்டப்போராட்டம் செய்து விலக்கு பெறுவதற்கு எல்லா முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜூலை 17 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது முன்னிட்டு அதற்கான எல்லா ஹைடெக் பயிற்சிகளையும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலங்குடி அருகே தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவருக்கு ஆலங் குடி அடுத்து உள்ள அண்ணா நகரில் சொந்தமாக தேங்காய் நார் தொழிற்சாலை உள்ளது.
இந்நிலையில், நேற்று தேங்காய் நார்கள் மற்றும் மஞ்சுகள் திடீரென தீ பற்றி எரிந்தன. இதுகுறித்து அந்த வழியாக நடந்து சென்றவர்கள் ஆலங்குடிதீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவ லர் சரவணகுமார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும், சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தேங்காய் நார்கள் மற்றும் மஞ்சுகள் தீக்கிறையாகின.

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியினை தடை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகராட்சியில் யானைமால் தெருவில் உள்ள சேர்வராயன்குளத்தில் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை கலெக்டர் கவிதா ராமு, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் கோவில்பட்டியில் உள்ள சுப்பம்மாள் சமுத்திரம், சந்தைப்பேட்டை அருகில் உள்ள அக்கச்சியாகுளம், ராஜகோபாலபுரம் காக்காச்சிஊரணி, பழையபேருந்து நிலையம் குமுந்தான்குளம் ஆகிய இடங்களை பார்வையிட்ட கலெக்டர் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் கலெக்டர் கவிதாராமு தெரிவித்ததாவது: நீர்நிலை புறம்போக்குகளில் ஆக்கிரமணம் அகற்ற வேண்டும் என்ற மாண்பமை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் அறிவுரைப்படி,
புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர்நிலை புறம்போக்கு மற்றும் அரசுப் புறம்போக்கு நிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமணங்கள் அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர்நிலைப் புறம்போக்கு நிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமணங்கள் அனைத்தும் எவ்வித தயவு தாட்சயமின்றி அகற்றப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியினை தடை செய்யும் நபர்கள் மீது சட்டபடியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைப் புறம்போக்கு நிலங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான அரசு புறம்போக்கு நிலங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமணங்களை தாமாக முன்வந்து அகற்றி கொள்ள வேண்டும்.
ஆக்கிரமணங்களை அகற்றிட தவறும் பட்சத்தில் அரசே தாமாக முன்வந்து ஆக்கிரமணங்களை அகற்றி, அதற்குரிய செலவினங்களை சம்மந்தப்பட்ட ஆக்கிரமணதாரர்களிடமிருந்து வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கோடை வெப்பத்தை குறைக்கும் வகையில் ஆலங்குடியில் மரக்கன்றுகள் நடும் விழா நடை பெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்த மரங்கள் கஜா புயலின் போது வேரோடு சாய்ந்தன. இதனால் கடந்த சில ஆண்டுகளாக வழக்கத்தைவிட வெயில் சுட்டெரித்து வருகிறது.
இந்நிலையில் சுட்டெரிக்கும் வெப்பத்தை தணிக்கும் வகையில் பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம் தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா நடை பெற்றது.
விழாவில் செயல் அலுவலர் பூவேந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை, போலீசார் ஆலங்குடி நகர செயலாளர் பழனிகுமார், பேரூராட்சி கவுன்சிலர் சஷ்டி முருகன், கருணாநிதி உட்பட பலர் கலந்து கொண்டு, சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள நூலகம், போலீஸ் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் மரக்கன்று நட்டினர்.
மேலும் நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு கருதி கூண்டுகள் அமைக்கப்பட்டது.

ஆலங்குடியில் மணல் கடத்தல் வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகேயுள்ள வாராப்பூர் சமுதாயக்கூடம் பகுதியில் சிலர் கிராவல் மண்ணை லாரியில் கடத்துவதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது.
அதன்பேரில் சம்பட்டிவிடுதி சப்-இன்ஸ் பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் அப்பகுதி யில் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது, மணவிடுதியைச் சேர்ந்த பிரபாகரன் வயது 30, வாராப்பூரைச் சேர்ந்த மாரிமுத்து, கீழ புலவன்காட்டைச் சேர்ந்த நாகராஜ் ஆகியோர் அப்பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மணல் லாரியை பறிமுதல் செய்த போலீசார், 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து பிரபாகரன் மற்றும் நாகராஜை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய மாரி முத்துவை தேடி வருகின்றனர்.
விவசாயி கொலையில் திடீர் திருப்பமாக அவரது தம்பியை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள நம்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 36), விவசாயி. இவருடைய மனைவி கவுதமி (34). இவர்களுக்கு விஸ்வமூர்த்தி (7), ஈஸ்வர மூர்த்தி (3), விஷ்ணுபிரியா (5) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த 30&-ந் தேதி இரவு சுந்தரமூர்த்தி தனது வீட்டின் அருகே தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி இன்ஸ்பெக்டர் ஆழகம்மை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் சொத்து தகராறு காரணமாக சுந்தர மூர்த்தியை அவரது தம்பி ராமமூர்த்தி அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-
கொலை செய்யப்பட்ட சுந்தரமூர்த்திக்கு ராமமூர்த்தி (31), லட்சுமண மூர்த்தி (31) ஆகிய தம்பிகளும், சுந்தரஜோதி (34) என்ற தங்கையும் உள்ளனர். இந்தநிலையில் அண்ணன்-தம்பிகள் இடையே சொத்து பிரச்சினை இருந்து உள்ளது.
இதன்காரணமாக சுந்தரமூர்த்தி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அருகே தனது மாமியார் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த 30&-ந் தேதி இரவு சுந்தரமூர்த்திக்கும், ராமமூர்த்திக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த ராமமூர்த்தி தான் கையில் வைத்திருந்த அரிவாளால் சுந்தரமூர்த்தியின் தலையில் வெட்டியுள்ளார். இதில், படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து, ராமமூர்த்தி அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இரவு நேரம் என்பதால் கொலை செய்யப்பட்டது யாருக்கும் தெரியவில்லை. மேலும் இந்த கொலை வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து ராமமூர்த்தியை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கண்ணன் முன்பு போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பதிவை புதுப்பிக்காத இறால் பண்ணைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தில் 57 இறால் பண்ணைகள் பதிவு செய்யப்பட்டு, இறால் வளர்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனைத் தவிர 5 இறால் பண்ணைகள் பதிவு செய்திட மாவட்ட அளவுக் குழுவினரால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பதிவு செய்யப்பட்ட அனைத்து இறால் பண்ணைகளில் பதிவு காலம் முடிவுற்றுள்ளது.
எனவே, அனைத்து இறால் பண்ணைகளின் பதிவு உரிமத்தினை கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தில் புதுப்பித்திட வேண்டும். மேலும் எவ்வித பதிவு செய்யப்படாமலும் இறால் பண்ணைகள் இயக்கத்தில் உள்ளதாக அறிய வருகிறது. இவ்வாறு செயல்படும் இறால் பண்ணைகள் உடனடியாக இறால் வளர்ப்பு பணிகளை நிறுத்தம் செய்திட அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு பதிவு செய்யப்படாமல் உரிமம் புதுப்பிக்காமல் இயங்கும் இறால் பண்ணை உரிமையாளர்களுக்கு கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணைச் சட்டம் 2005 பிரிவு 14-ன் படி, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் பதிவு செய்யப்படாமல் இயங்கும் இறால் பண்ணைகளை உடனடியாக பதிவு செய்திடவும் மற்றும் உரிமம் புதுப்பிக்கப்படாமல் இயங்கும் இறால் பண்ணைகளின் பதிவு உரிமத்தினை புதுப்பித்திடவும் இறால் பண்ணை உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறனர்.
தவறினால் மேற்படி சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விவரம் இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை முதல்வர் நிறைவேற்றி வருகிறார் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது,
முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த விவசா யம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர் களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 2021-22 ஆம் ஆண்டில் 85 பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு 68 தரிசு நில தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தரிசு நில தொகுப்புக்களை சாகுபடிக்கு கொண்டு வருவதால் 1374 விவசாயிகள் பயன்பெறுகிறார்கள்.
நடப்பு ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 2000 எக்டர் இலக்கீடு வழங்கப்பட்டு, இதுவரை 3939 பயனாளிகளுக்கு 4235 எக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசனக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. இதுவரை 8.44 கோடி நிதி மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
எனவே தமிழக அரசின் இதுபோன்ற வேளாண் நலத்திட்டங்களை விவசாயிகள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்.