என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்நத போது எடுத்த படம்.
ஆலங்குடியில் மரக்கன்றுகள் நடும் விழா
கோடை வெப்பத்தை குறைக்கும் வகையில் ஆலங்குடியில் மரக்கன்றுகள் நடும் விழா நடை பெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்த மரங்கள் கஜா புயலின் போது வேரோடு சாய்ந்தன. இதனால் கடந்த சில ஆண்டுகளாக வழக்கத்தைவிட வெயில் சுட்டெரித்து வருகிறது.
இந்நிலையில் சுட்டெரிக்கும் வெப்பத்தை தணிக்கும் வகையில் பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம் தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா நடை பெற்றது.
விழாவில் செயல் அலுவலர் பூவேந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை, போலீசார் ஆலங்குடி நகர செயலாளர் பழனிகுமார், பேரூராட்சி கவுன்சிலர் சஷ்டி முருகன், கருணாநிதி உட்பட பலர் கலந்து கொண்டு, சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள நூலகம், போலீஸ் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் மரக்கன்று நட்டினர்.
மேலும் நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு கருதி கூண்டுகள் அமைக்கப்பட்டது.

Next Story