என் மலர்
புதுக்கோட்டை
பொது மக்களின் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை ஓரே நாளில் மூடப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலத்தில் செயல் பட்டு வந்த 2 அரசு மதுபான கடைகள் 2017ம் ஆண்டு மக்கள் போராட்டத்தின் காரணமாக மூடப்பட்டது.
மேலும் இனிமேல் அக் கிராமத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது எனவும் அப்போதைய மாவட்ட கலெக்டர் அக்கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்த நிலையில் அதிகாரிகள் உள்பட இனிமேல் அங்கு டாஸ்மாக் கடை திறக்க மாட்டோம் எனவும் அதிகாரிகள் உத்தரவாதம் அளித்திருந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் அக்கிராமத்தில் டாஸ்மாக் கடைஒன்றைத் திறக்க முயல்வதாக வந்த தகவலின் அடிப்படையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தங்கள் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது.
இந்நிலையில் கிராமசபை தீர்மானத்தையும் மீறி நேற்று கொத்தமங்கலம் கிராமத்தில் மீண்டும் புதிய டாஸ்மாக் கடை ஒன்று திடீரெனதிறக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் ஊராட்சி தலைவர் சாந்தி வளர்மதி தலைமையிலும், ஊராட்சி துணைத்தலைவர் போது மணி மற்றும் தே.மு.தி.க. தெற்கு மாவட்ட செயலாளர் மன்மதன் முன்னிலையில் மற்றும் கட்சி சார்பில் கொத்தமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் கிராமசபை கூட்டத்தில் தீர்மானத்தையும் மீறி சட்டவிரோத மாக டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி கொடுத்துள்ளதாகவும், இது குறித்து அடுத்த கட்டமாக கிராமத்தில் உள்ள அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி முற்றுகை மற்றும் மறியல் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் உடனடியாக இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடி யாக மூடவேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் திருச் செல்வம் கவுன்சிலர் ராமநாதன் மற்றும் பா.ஜ.க. மணிமுத்து ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் திறக்கப்பட்ட டாஸ்மாக்கடையை மூட சுற்றுசுழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் தற்காலிக மாக அந்த கடையை மூட கலெக்டர் கவிதாராமு உத்தரவிட்டார். இதையடுத்து ஒரேநாளில் திறப்பு விழாவும், மூடு விழாவும் நடந்தேறியது.
இதனை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போராட்டகாரர்கள் கூறினர்.
கடந்த 2017&ம் ஆண்டு கொத்த மங்கலம் கிராத்தில் செயல் பட்ட 2 டாஸ்மாக் கடைகளை பொது மக்கள் அடித்து நெறுக்கினர். மீண்டும் அது போன்ற சம்பவம் நடை பெறாமல் இருக்க முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக கடையை மூடியதாக பரபரப்பாக பேசப்படுகிறது.
தனியார் நிதிநிறுவன மேலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அரிமழத்தில் தனியார் நிதிநிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் கிளை மேலாளராக குளத்தூர் நீர்பழனியை சேர்ந்த அஜித்குமாரும், உதவி மேலாளராக தூத்துக்குடி மாவட்டம் லில்லிசேரியை சேர்ந்த அன்னலட்சுமியும் பணிபுரிந்து வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் திருகாட்டுப்பள்ளியை சேர்ந்த பாரதி சர்க்கிள் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மாதம் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ரூ.2லட்சத்து 29ஆயிரத்து 658 ரூபாய் மதிப்புள்ள 48.400 கிராம் தங்கநகை மோசடி செய்துள்ளது தெரியவந்தது. உடனடியாக, இவர் அரிமளம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் மேலாளர் மற்றும் உதவி மேலாளர் மீது போலிசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் உட்பட அ.தி.மு.க.வினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை:
தமிழக அரசு சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று அ.தி.மு.க.சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன்படி புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதை தொடர்ந்த புதுக்கோட்டை நகர காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் சட்டவிரோதமாக கூடுவது, பொது வழியை மறித்து ஆக்கிரமிப்பு செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அ.தி.மு.க.வினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட நிறைவு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை கொத்த கம் அங்கன்வாடி மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் போஷன் பக்வாடா இரு வார நிகழ்ச்சி நிறைவு விழா நடைபெற்றது.
விழாவிற்கு கந்தர்வ கோட்டை வட்டாட்சியர் புவியரசன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரேவதி முன்னிலை வகித்தார்.
விழாவில் 6 வயது வரை உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை கண்டறிந்து செயலில் பதிவேற்றம் செய்தல், நீர் பாதுகாப்பில் பெண்களின் பங்கு மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பள்ளி குழந்தைகளுக்கு இடையே ரத்த சோகை தடுத்தல் மற்றும் சிகிச்சை அளித்தல் விழிப்புணர்வு குறித்து மருத்துவர் சசிவர்மன் எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள் சார்பில் ஊட்டச்சத்து குறித்த கண்காட்சிகள் வைக்கப் பட்டிருந்தது. மேலும் அங்கன்வாடி பணியாளர்கள் கலை நிகழ்ச்சிகள், முன்பருவ கல்வி குறித்த விழிப்புணர்வு பாடல்கள், வில்லுப்பாட்டு, மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பாடல்கள் நடத்தப்பட்டன.
நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், ஒருங்கிணைப் பாளர்கள், பணியாளர்கள், உதவியாளர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்ய பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தஞ்சாவூர் புதுக்கோட்டை நெடுஞ் சாலையிலிருந்து பெரியகடைவீதி செல்லும் சாலையில் கடைகளுக்கு மின் இணைப்புகள் வழங்குவதற்கு மின் கம்பத்தில் இருந்து செல்லும் மின் வயர்கள் தாழ்வாக செல்கிறது.
இதனால் லோடு டிராக்டர் மற்றும் லாரிகள் செல்லும் போது வயர்கள் அறுந்து விழுந்து விபத்து ஏற்படுகிறது. இதனால் மின்சாரம் தடைபடுவதோடு பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே இந்த மின் இணைப்புகளை சரி செய்ய பொதுமக்கள் மாவட்ட அதிகாரிகளுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

பெட்ரோல் டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
வரலாறு காணாத வகை யில் உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் சுங்கச் சாவடிகளின் கட்டண உயர் வுகளைக் கண்டித்து புதுக் கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய, நகரத் தலைநகரங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட் டங்கள் நடைபெற்றது.
பெட்ரோலியப் பொருட் களின் விலை உயர்வால் ஏற் படும் பாதிப்புகளை விளக் கும் வகையில் இருசக்கர வாகனங்களை கயிறு கட்டி இழுத்து, வாகனங்களை ஓட்டாமல் தள்ளிக்கொண்டு, சமையல் கியாஸ் சிலிண்டர் களுக்கு பாடை கட்டி, ராக் கெட் வேகத்தில் உயர்வதா கச்சித்தரித்தும் பல்வேறு நூதன வடிவங்களில் இந்த போராட்டங்கள் நடைபெற்றது.
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலாளர் சோலை யப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சங்கர், நாகராஜன், அன்புமணவாளன், ஜனார்த் தனன், மாவட்டக்குழு உறுப் பினர் சலோமி உள்ளிட் டோர் கண்டன உரையாற்றினர்.
கறம்பக்குடியில் ஒன்றியச் செயலாளர்கள் பி.வீரமுத்து, எஸ்.காமராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் அன்பழகன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பொன்னுச்சாமி மற்றும் பாலசுந்தர மூர்த்தி, துரை.அரிபாஸ்கர், உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார். கீரமங் கலத்தில் ஒன்றியச் செயலா ளர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் சுசீலா, பேரூராட்சி கவுன்சி லர் பாலமுருகன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
கந்தர்வகோட்டையில் ஒன்றியச் செயலாளர்கள் ரெத்தினவேல், பன்னீர்செல் வம் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயற் குழு உறுப்பினர் ராமையன் மன்றும் ஒன்றியக்குழு உறுப் பினர்கள் கண்டன உரையாற் றினர். விராலிமலையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஒன்றியக்குழு உறுப்பி னர் சண்முகம் தலைமையில் மாவட்ட செயற் குழு உறுப் பினர் சண்முகம் கண்டன உரையாற்றினார்.
கீரனூரில் எஸ்.கலைச் செல்வன் தலைமை வகித் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாவட் டக்குழு உறுப்பினர் தங்க வேல். ஓன்றியக்குழு உறுப்பி னர் பீமராஜ், பேரூராட்சி கவுன்சிலர் மகாலெட்சுமி உள்ளிட்டோர் பேசினர். அன்னவாசலில் ஒன்றியச் செயலாளர் சுப்பையா தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப் பினர் அன்புமணவாளன், மாவட் டக்குழு உறுப்பினர் சலோமி, ரெங்கசாமி, உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

மழைமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சேர்ந்த ராஜாராஜா பழைய வெண்ணாவல் நாட்டைச் சேர்ந்த சேந்தாக்குடி ஸ்ரீ மழைமாரியம்மன் தேர்திரு விழாவை தொடர்ந்து கடந்த மாதம் 20&ந்தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
விழாவில் 27&ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கிய ஸ்ரீமழைமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.திருவிழாவில் தொடர்ந்து முக்கியஸ் தர்களால் மண்டகப்படிகயும், நடைபெற்றன.
3&ந் தேதி ஸ்ரீ மழைமாரியம்மனுக்கு பொங்கல் விழாவும் 4&ந்தேதி தீமிதித் திருவிழாவும், பால்காவடி மற்றும் காவடிகளும் அப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை ஸ்ரீ மழைமாரியம்மனுக்கு செலுத்தினர்.
10 ஆம் நாள் நிறைவாக ஸ்ரீமழைமாரியம்மன் தேரோட்ட நிகழ்ச்சியில் தேரை அப்பகுதி மக்கள் வடம் பிடித்து ஸ்ரீ மழைமாரியம்மன் கோவிலின் நா ன்கு புறங்களிலும் சுற்றி வந்து நிலையை அடைந்தது . வல்லாத்திராக்கோட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருவிழாவில் நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சிகளும், மதியம் அன்னதானமும் நடந்தது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் இளைஞர்கள் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

புதுக்கோட்டை அருகே சமூக விரோத கும்பலுடன் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்த கோவையை சேர்ந்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அறந்தாங்கி தனிப்படை காவல்துறையினர், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற பேருந்து நிலையம் போன்ற இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
சோதனையின்போது திருநாளூரில் காரில் வைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருநாளூரை சேர்ந்த விஜய் (23), கோயம்பதூரை சேர்ந்த பிரகாஷ் (24), தினேஷ்பாபு (28) உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 21 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் சான்ட்ரோ கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சில திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
அதில் கோயம்புத்தூரிலிருந்து கஞ்சா வரவழைத்து அதை இப்பகுதியில் விற்பனை செய்து வருவதாகவும், இதற்கு முழு உதவியாக கோவை மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்த கணேஷ் குமார் என்பவர் செயல்பட்டுள்ளார். அவர் தருகின்ற தகவலின் அடிப்படையிலே செயல்பட்டு வருவதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் அறந்தாங்கி போலீசார், காவலர் கணேஷ்குமாரிடம் விசாரணை நடத்தியதில் கஞ்சா வழக்கில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
அதனை தொடர்ந்து கணேஷ்குமார் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு பின்பு சிறையிலடைத்தனர்.
கஞ்சா வழக்கில் காவலரே உடந்தையாக செயல்பட்டிருப்பது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கஞ்சா விற்ற வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேற்பனைக்காட்டில் கீரமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்ற வேம்பங்குடி கிழக்கு பகுதியை சேர்ந்த அகிலேஷ் வயது 28 என்பவரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர் அந்த பகுதியில் கஞ்சா விற்று வந்தது தெரிய வந்தது. மேலும் அவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்களை போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலங்குடி வடகாடு முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை தேர்திருவிழா குறித்து கூட்டம் நடை பெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு முத்துமாரியம்மன் கோவிலில் ஏப்ரல் 25-ம் தேதி தேரோட்டத் திருவிழா நடைபெற உள்ளது.
ஆலங்குடி அருகே உள்ள வடகாடு முத்துமாரியம்மன் கோவிலில் நிகழாண்டு சித்திரை திருவிழா நடத்துவது குறித்து ஊர்க்கூட்டம் நடைபெற்றது. அதில், திருவிழா நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், ஏப்ரல் 17-ம் தேதி காப்புக்கட்டு நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கும். அன்றிலிருந்து அம்மன் வீதியுலா, கலை நிகழ்ச்சியும் நடைபெறும்.
ஏப்.24-ம் தேதி பொங்கல் விழா நடைபெறும். மறுநாள் ஏப்.25 மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது.
முக்கனிகளால் அலங்கரிக்கப்படும் தேரில் அம்மன் எழுந்தருளல் செய்யப்பட்டு, பக்தர்களால் தேர் இழுத்து வரப்படும். நான்கு வீதிகளையும் தேர் சுற்றி வரும்போது வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும்.
ஏப்.26-ம் தேதி மாலை 4 மணிக்கு மஞ்சள் விளையாட்டு நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுளாக தேரோட்டம் நடை பெறாததையடுத்து தற்போது தேர் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.

கோடையில் பல்வேறு மருத்துவ குணங்களுடன் தாகம் தணிக்கும் தர்ப்பூசணி பழம் சாகுபடி ஓரளவு லாபத்தை தந்தாலும் அதை அறுவடை செய்வதற்குள் பொருளாதார ரீதியாக சிரமங்களை சந்திப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அறந்தாங்கி:
கோடைகாலம் வந்துவிட்டால் தெருவுக்கொரு தர்பூசணிக்கடை முளைத்து விடும். ஒரு கண்ணாடிப் பாத்திரத்துக்குள் தர்பூசணியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து விற்பார்கள். இதற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு உண்டு.
தர்பூசணி சாப்பிடுவதற்காகவே கோடைகாலம் எப்போது வரும் என ஏங்குபவர்களும் உண்டு. குறைவான விலையில் நிறைவான பலன் தரும் தர்பூசணியானது, இருதய நலனை காக்கிறது. இதில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தன்மை மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பினை தடுக்கிறது.
புற்றுநோயில் இருந்து காக்கும், கண்களை பாதுகாக்கும், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளும், உயர்ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும், எலும்பைப் பாதுகாக்கும், உடல் எடை மிகாமல் காக்கும், சிறுநீரக செயல்பாட்டை கட்டுக்குள் வைத்திருக்கும் என்பது போன்ற பல்வேறு மருத்துவ குணங்களை இந்த தர்பூசணி கொண்டுள்ளது.
கோடையில் ஏற்படும் எல்லா பிரச்னைகளிலிருந்தும் நம்மைக் காக்கிறது இந்த தர்பூசணி. உடல் சூட்டைத் தணித்து, வெப்பம் மிகுந்த இந்தக் காலத்தில் இது நமது உடலை சீராக்க உதவுகிறது.
இவ்வாறு பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ள தர்பூசணி சாகுபடிக்கு அதிக செலவு ஏற்படுவால் அரசே கடனுதவி வழங்கி பழங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள நாட்டுமங்கலம் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் சீசனுக்கு தகுந்தவாறு பழங்கள் சாகுபடியை தொடங்கி விடுகிறார்கள். அந்த வகையில், தற்போது தர்பூசணி பழம் சாகுபடி செய்து வருகின்றனர்.
கோடை காலம் வந்தாலே கிராமங்கள் முதல் நகரங்கள் வரை தர்பூசணி பழங்களுக்கு தனி மவுசுதான். யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பது போல கோடை தொடங்கும் முன்னரே நகர பகுதிகளில் ஆங்காங்கே தர்பூசணி பழ குவியல்களை பார்க்கலாம்.
குறைந்த விலையில் கிடைப்பதுடன் தாகத்தை தணிப்பதால் பெரும்பாலான மக்கள் தர்பூசணி பழங்களையே விரும்புகின்றனர். கடந்த 2 ஆண்டாக கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு, பொது போக்குவரத்து தடை போன்ற காரணங்களால் தர்பூசணி பழங்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் பேரிழப்புக்கு ஆளாகினர்.
தற்போது கொரோனா தாக்கம் குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் நாட்டுமங்கலம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவை அறுவடை செய்யப்பட்டு இப்போது விற்பனைக்காக உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.
தர்ப்பூசணி பழ சாகுபடி ஓரளவு லாபத்தை தந்தாலும் அதை அறுவடை செய்வதற்குள் பொருளாதார ரீதியாக சிரமங்களை சந்திப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவசாயி குமார் கூறுகையில், 2 ஆண்டாக விலை கிடைக்கவில்லை. நடப்பாண்டும் விளைச்சல் குறைவாக உள்ளது. ஒரு கிலோ ரூ.11 என்ற விலைக்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவாகிறது. ஆனால் ரூ.70 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கும். கரும்பு விவசாயிகளுக்கு அரசு உதவி செய்வதுபோல் வங்கி கடனுதவி இடுபொருட்கள் வழங்கி அரசே கொள்முதல் செய்தால் நல்ல விலை கிடைக்கும். அதன் மூலம் நாங்கள் தொடர்ந்து சாகுபடி செய்வோம் என்றார்.

கந்தர்வகோட்டை பகுதியில் வருகிற 5ந்தேதி மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை துணை மின் நிலையத்தில் வருகிற 5ந்தேதி செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்
இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெரும் பகுதிகளான ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மணவிடுதி, சோத்துப்பாலை,
சொக்கநாதபட்டி, மாந்தாங்குடி, காட்டு நாவல், மட்டயன்பட்டி, மங்களத்துபட்டி, கந்தர்வகோட்டை, அக்கச்சிபட்டி, வளவம்பட்டி
ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என, கந்தர்வகோட்டை உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.