என் மலர்
புதுக்கோட்டை
கருப்புடையான்பட்டி ஊராட்சியில் செயல் படுத்தப்பட்டு வரும் வளர்ச் சித் திட்டப் பணிகளை கலெக்டர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கருப்புடையான் பட்டி ஊராட்சியில் செயல் படுத்தப்பட்டு வரும் வளர்ச் சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ரூ.5.50 லட்சத்தில் நடை பெறும் சாலை பணி, ரூ.17.87 லட்சத்தில் நடைபெறும் குடிநீர் திட்டப் பணி மற்றும் தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டப் பணிகள், கூடுதல் வகுப்பறை கட்டும் பணிகள் உள்ளிட்டவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து கருப்புடையான்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவி யர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு வகைகள் குறித்தும், மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் கல்வி முறை கள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர், கிராமங்கள் மேம்பாடு அடையும் வகையில் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் முறையாக பயன்படுத் திக்கொண்டு தங்கள் வாழ் வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஸ்ரீராம், ஒன்றியக்குழுத் தலைவர் பி.சின்னையா, வட்டார வளர்ச்சி அலுவலர் கள் குமாரவேலு, சங்கர், வாட்டாட்சியர் , உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவல ர்கள் கலந்துகொண்டனர்.
சத்துணவுத்துறையில் காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டுமென தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
புதுக்கோட்டை:
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்ட தலைவர் அன்பு தலைமையில் புதுக் கோட்டையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சீத்தாலெட்சுமி, பொருளா ளர் பிச்சைமுத்து ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்து பேசினர்.
அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜபரு ல்லா, துணைத் தலைவர் குமரேசன் ஆகியோர் வாழ்த் திப் பேசினர். சத்து ணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் சத்தி நிறைவுரை யாற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் பாண்டி நன்றி கூறினார்.
சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதிய த்தை மாற்றி வரையறுக் கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்பப்பாதுகாப்புடன் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.9,000 ஆயிரம் வழங்க வேண்டும்.
ஒட்டுமொத்த பணிக்கொ டையாக அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும்.
எரிவாயு சிலிண்டர் தேவைக்கு ஏற்ப அரசே வழங்க வேண்டும். தகுதி உள்ள சத்துணவு ஊழியர் களுக்கு கல்வித்தகுதி அடிப்ப டையில் அரசுத் துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல பெண் ஊழியர்களுக்கு 12 மாதம் ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
அரசு பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வெட்டன்விடுதி அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
ஆலங்குடி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் நடைபெற்ற முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் எழிலரசி தலைமை வகித்தார்.
முகாமில் பங்கேற்ற ஆலங்குடி நீதிபதி நல்லக்கண்ணன், போக்சோ சட்டம், பாலியல் பிரச்னை, புகையிலை பழக்கம், குழந்தை திருமணச் சட்டம், குழந்தை தொழிலாளர், சிறுவயதில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள், தொலை தொடர்பு சாதனங்களால் ஏற்படும் நன்மை, தீமைகள், மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுயஒழுக்கம் உள்ளிட்டவைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.
முகாமில் மூத்த வழக்குரைஞர் ராஜா, தன்னார்வலர் செந்தில்ராஜா, நிர்வாக உதவியாளர் அருண்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நார்த்தாமலை கோவில் திருவிழாவினை முன்னிட்டு வரும் 11-ந் தேதி உள்ளூர் விடுமுறை என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையிலுள்ள முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி வரும் 11-ந் தேதி (திங்கட்கிழமை) உள்ளூர் விடுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
அன்றைய நாளில் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் விடுமுறை என்ற போதும், அத்தியாவசியத் தேவை கருதி, மாவட்டக் கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் மட்டும் குறைந்த பணியாளர்களுடன் செயல்படும்.
இந்த விடுமுறைக்கான மாற்றுப் பணி நாளாக வரும் 23-ந் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாகவும், வழக்கமாக சனிக்கிழமையை வேலை நாளாகக் கொண்டுள்ள அரசு அலுவலகங்களுக்கு அடுத்த நாள் 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வேலை நாளாகும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
உயிர்களை காவு வாங்க காத்திருக்கும் பாழடைந்த சாலையோர கிணற்றை அகற்ற பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவ ரங்-குளம் ஊராட்சி ஒன்றி-யத்-துக்-குட்பட்ட பள்ளத்தி-விடுதி ஊராட்சி 4&வது வார்டு ஆகும் ஆலங்குடி கொத்த-மங்கலம் செல்லும் சாலை-யோரத்தில் கிணற்றின் அரு-கில் சுமார் 100 மீட்டர் தொலைவில் அரசு உயர்-நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில் கிராமத்துக்கு கீழ்ப்-புறத்தில் சமுதாய கிணறு அமைந்துள்ளது.
சமுதாய கிணற்றை உடன-டியாக அப்புறப்படுத்த வேண்டும், அல்லது சல்லடை அமைத்து-தர வேண்டுமென அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வா-கத்-திற்கு கோரிக்கை வைத்-துள்-ளனர். மேலும் ஆலங்குடியிலிருந்து கொத்-தமங்-கலத்-திற்கு பிரதான சாலை-யாக இந்த பகுதி அமைந்துள்ளது.
இச்சமுதாய கிணறு கிரா-மத்-துக்கு பல ஆண்டு-க-ளுக்கு முன்பு சுமார் 60 அடி ஆழ-முள்ள குடி-தண்ணீர் கிண-ராக அப்பகுதி மக்கள் பயன்-படுத்தி வந்துள்ளனர். இந்-நிலையில் தற்போது உள்ள நிலையில் தண்ணீர் வற்றி வெற்று சமுதாய கிணறாக காணப்படுகிறது.
மேலும் சாலையோரத்தில் அமைந்துள்ள கிணற்றினால் எந்த பயனும் கிடையாது. சாலையோரத்தில் தினசரி நூற்றுக்கும் அதிகமான வாகனங்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் நடந்-தும், சைக்கிளிலும் சென்றும் வருகின்றனர்
மேலும் இக்கிணற்றில் அப்பகுதி மக்கள் குப்-பை--களை கொட்டி வரு-வ-தால் சுகாதாரக்கேடு மற்றும் துர்-நாற்றம் நோய்த்-தொற்று ஏற்-பட வாய்ப்பு உள்ளதாக அப்-பகுதி மக்கள் கூறி வருகின்-றனர்.
கிணறு தரைமட்டத்தில் இ-ருந்து அதிகம் இருப்ப--தால் குழந்தைகள் மற்றும் ஆடு, மாடு, கோழி தவறி விழுந்து இறந்து விடுகின்றன. இத-னால் அப்பகுதியில் இரவு நேரத்தில் யாரும் செல்ல முடி-யாத நிலையும் ஏற்பட்-டுள்ளது.
அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு ஆலங்குடி முன்னாள் தாசில்-தார்கள் பல்வேறு கூட்டங்-களில் கிராமமாக இருந்தா-லும், நகர்ப்புறமாக இருந்தாலும் இதுபோன்ற விபத்தை ஏற்படுத்தும் வகை-யில் கிணறுகள் இருக்க கூடாது என்று பொதுமக்கள் வலியு-றுத்தி உள்ளனர் என்-பது குறிப்பிடத்தக்கது.

ஆலங்குடி காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு நடை பெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காவல் சரகத்திற்குட்பட்ட காவல் நிலையத்தில் திருச்சி காவல்துறை துணைத்தலைவர் சரவண சுந்தர் வருடாந்திர ஆண்டு ஆய்வு கொண்டார்.
ஆய்வு பயணத்தின்போது ஆலங்குடி காவல் நிலையத்தில் மா, பலா, தென்னை, வேம்பு, மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சியில் காவல் சரக டி.எஸ்.பி. வடிவேல், இன்ஸ் பெக்டர், அழகம்மை மற்றும் ஆலங்குடி, சம்பட்டிவிடுதி சப்இன்ஸ்பெக்டர்கள், குணசேகரன், சரவணன் மாவட்ட எஸ்.பி. தனிப்பிரிவு போலீசார் வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
கறம்பக்குடியில் பணியில் இருந்த மின்வாரிய ஊழியர் திடீரென இறந்தார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள விளாரிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ரெங்க-சாமி (வயது 55).இவர் கறம்பக்குடி மின்வாரிய அலு-வலகத்தில் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று -மாலை அவர் கறம்பக்குடி செட்டி--தெரு முக்கத்தில் மின் பாதையை சீரமைக்கும் பணியை கண்காணித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். இதை கண்ட சக ஊழியர்கள் ரெங்கசாமியை மீட்டு புதுக்-கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ-மனை---க்கு கொண்டு சென்-ற-னர்.
அங்கு அவரை பரி-சோதித்த டாக்டர்கள் ரெங்க-சாமி வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா-ரணை நடத்தி வரு-கின்றனர்.

பெட்ரோல், டீசல், கியாஸ் விலைஉயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
புதுக்கோட்டை:
மத்திய அரசின் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலங்குடி வட்டங்கச்சேரி திடலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திருமயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்டத்தலைவருமான சுப்புராமன் தலைமை தாங்கினார்.
காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணை தலைவர் ஆசிரியர் தமிழ்ச்செல்வன், மற்றும் தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சரண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மத்திய அரசின் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் வடகாடு ஊராட்சி மன்றத்தலைவர் மணிகண்டன் மற்றும் மாநில துணைத்தலைவர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் லெனின் நகரில் விநாயகர் கண்மாய் உள்ளது. இந்தக் கண்மாயை சில ரியல் எஸ்டேட் கும்பல் கபளிகரம் செய்து கட்டிடம் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், காரைக்குடி சாலையில் உள்ள குப்பைக் கிடங்கையும், அதனைத் சுற்றியுள்ள இடங்களையும், வேங்கக் கண்மாய்க்கு தண்ணீர் வரும் வரத்து வாரியையும் அதிகாரிகளின் துணையோடு சிலர் போலியாகப்பட்டா போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேற்படி ஆக்கிரமிப்பளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை உடனடியாக மீட்க வலியுறுத்தியும் திருமயம் பேருந்து நிலையம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் எஸ்.வீரமணி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் சி.சுப்பிரமணியன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னிணியின் மாவட்டச் செயலாளர் சி.ஜீவானந்தம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் திருமயம் ஊராட்சியில் காலம் காலமாக குடியிருந்துவரும் ஏழைகளுக்கு அந்த இடத்தை வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும்.
நூறுநாள் வேலைத் திட்டத்தில் அதிகாலையிலேயே வர வேண்டும் என்று நிர்பந்தம் செய்வதைத் தடுத்து காலை 9 மணிக்கு வேலை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் 50&க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

மயங்கி விழுந்த விவசாயிக்கு அவ்வழியாக சென்ற மருத்துவர் முதலுதவி செய்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கும்மங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோனி சாமி (வயது 55) விவசாயியான இவர்,
செட்டியாபப்பட்டி வனப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, மயங்கி கீழே விழுந்துள்ளார். பேச்சு மூச்சின்றி கிடந்த அவருக்கு, அவ்வழியாகச் சென்ற ஆலங்குடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மு.பெரியசாமி,
உரிய முதலுதவி சிகிச்சை அளித்தார். தொடர்ந்து, கண்விழித்த அந்தோனிசாமியை 108 அவரச ஊர்தி மூலம் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

விதிகளை மீறி மாடுகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜல்லிகட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு தொடர்பாக எருதுகளை வாகனத்தில் ஏற்றி செல்வது தொடர்பாக, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் உத்தரவின்பேரில் கீழ்கண்ட நடைமுறைகளை பின்பற்ற வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 237&ன் கீழ் வாகனங்களில் ஜல்லிக்கட்டு எருதுகளை ஏற்றிச் செல்லும் போது ஒரு எருதிற்கு வாகனத்தில் இருக்க வேண்டிய குறைந்த பட்ச இடவசதி இருக்க வேண்டும். எருதுகள் நிற்கும் தள பரப்பு பகுதிகள் வலுவான மர பலகைகள் கொண்டு தயாரிக்கப் பட்டதாக இருக்க வேண்டும். அல்லது இரும்பு தகடுகள் கொண்டு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
எருதுகளை கவனித்துக் கொள்ள ஒரு நபரை நியமிக்க வேண்டும். பயண நேரத்தில் கால்நடைகளுக்கு தேவையான போதுமான அளவு தண்ணீர் மற்றும் உணவுகளை வழங்க வேண்டும். கால்நடைகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் அதிகபட்சம் 30 கிமீ வேகத்தில் மட்டுமே இயங்க வேண்டும்.
மேற்கண்டவாறு மோட்டார் வாகன விதி படி எருதுகளை கவனமாக ஏற்றி செல்ல அறிவுறுத்தப்படுகிறது. தவறும்பட்சத்தில் தமிழ்நாடு மோட்டார் வாகன விதிப்படி வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
வாலிபரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா, இவர் ரெட்டையாளம் பகுதி யில் தலையாரி வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும், கொடிக் குளத்தை சேர்ந்த ரஞ்சித் (வயது 21) என்பவருக்கும் முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சம்பவத்தன்று கோட்டைப் பட்டினத்தில் தனது இரு சக்கர வாகனத்தில் பெட் ரோல் போட வந்த ரஞ்சித்தை பார்த்த இளையராஜா, அவரை வழிமறித்து தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ரஞ்சித்தை, அக்கம் பக்கத் தினர் மீட்டு மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இச்சம்பவம் குறித்து ரஞ்சித்தின் உறவினர்கள் கோட்டைப் பட்டினம் போலீசில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் நட வடிக்கை எடுக்காததை தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் கோட்டைப் பட்டினம் காவல் நிலை யத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் மனோக ரன் குற்றவாளியை விரை வில் கைது செய்வோம் என உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் கலைந்து சென்றனர்.