என் மலர்
உள்ளூர் செய்திகள்

கருப்புடையான்பட்டி ஊராட்சியில் செயல் படுத்தப்பட்டு வரும் வளர்ச் சித் திட்டப் பணிகளை கலெக்டர் கவிதா ராமு நேரில்
கருப்புடையான்பட்டியில் நடைபெறும் வளர்ச் சித் திட்டப் பணிகள்- கலெக்டர் ஆய்வு
கருப்புடையான்பட்டி ஊராட்சியில் செயல் படுத்தப்பட்டு வரும் வளர்ச் சித் திட்டப் பணிகளை கலெக்டர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கருப்புடையான் பட்டி ஊராட்சியில் செயல் படுத்தப்பட்டு வரும் வளர்ச் சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ரூ.5.50 லட்சத்தில் நடை பெறும் சாலை பணி, ரூ.17.87 லட்சத்தில் நடைபெறும் குடிநீர் திட்டப் பணி மற்றும் தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டப் பணிகள், கூடுதல் வகுப்பறை கட்டும் பணிகள் உள்ளிட்டவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து கருப்புடையான்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவி யர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு வகைகள் குறித்தும், மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் கல்வி முறை கள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர், கிராமங்கள் மேம்பாடு அடையும் வகையில் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் முறையாக பயன்படுத் திக்கொண்டு தங்கள் வாழ் வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஸ்ரீராம், ஒன்றியக்குழுத் தலைவர் பி.சின்னையா, வட்டார வளர்ச்சி அலுவலர் கள் குமாரவேலு, சங்கர், வாட்டாட்சியர் , உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவல ர்கள் கலந்துகொண்டனர்.
Next Story






