என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    வாலிபர் மீது தாக்குதல் நடத்திய அரசு ஊழியரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

    வாலிபரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா, இவர் ரெட்டையாளம் பகுதி யில் தலையாரி வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும், கொடிக் குளத்தை சேர்ந்த ரஞ்சித் (வயது 21) என்பவருக்கும் முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    சம்பவத்தன்று கோட்டைப் பட்டினத்தில் தனது இரு சக்கர வாகனத்தில் பெட் ரோல் போட வந்த ரஞ்சித்தை பார்த்த இளையராஜா, அவரை வழிமறித்து தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தாக்கியுள்ளார்.  இதில் படுகாயமடைந்த ரஞ்சித்தை, அக்கம் பக்கத் தினர் மீட்டு மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இச்சம்பவம் குறித்து ரஞ்சித்தின் உறவினர்கள் கோட்டைப் பட்டினம் போலீசில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் நட வடிக்கை எடுக்காததை தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் கோட்டைப் பட்டினம் காவல் நிலை யத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் மனோக ரன் குற்றவாளியை விரை வில் கைது செய்வோம் என உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் கலைந்து சென்றனர்.
    Next Story
    ×