என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    சமூக விரோத கும்பலுடன் சேர்ந்து கஞ்சா விற்ற போலீஸ்காரர் கைது

    புதுக்கோட்டை அருகே சமூக விரோத கும்பலுடன் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்த கோவையை சேர்ந்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அறந்தாங்கி தனிப்படை காவல்துறையினர், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற பேருந்து நிலையம் போன்ற இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    சோதனையின்போது திருநாளூரில் காரில் வைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருநாளூரை சேர்ந்த விஜய் (23), கோயம்பதூரை சேர்ந்த பிரகாஷ் (24), தினேஷ்பாபு (28) உள்ளிட்ட  3 பேரை  போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து 21 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும்  சான்ட்ரோ கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சில திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

    அதில் கோயம்புத்தூரிலிருந்து கஞ்சா வரவழைத்து அதை இப்பகுதியில் விற்பனை செய்து வருவதாகவும், இதற்கு முழு உதவியாக கோவை மாவட்ட ஆயுதப்படையில்    காவலராக பணிபுரிந்த  கணேஷ் குமார் என்பவர் செயல்பட்டுள்ளார். அவர் தருகின்ற தகவலின் அடிப்படையிலே செயல்பட்டு வருவதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    அதன் அடிப்படையில் அறந்தாங்கி போலீசார், காவலர் கணேஷ்குமாரிடம் விசாரணை   நடத்தியதில் கஞ்சா வழக்கில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    அதனை தொடர்ந்து கணேஷ்குமார் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு பின்பு சிறையிலடைத்தனர்.

    கஞ்சா வழக்கில் காவலரே உடந்தையாக செயல்பட்டிருப்பது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×