search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி"

    • 10ம் மற்றும் 12ம் பொதுத்தேர்வு எழுத கூடிய மாணவர்கள் தன்னம்பிக்கையுடன், தைரியத்துடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.
    • உங்களுக்காக தான் இந்த அரசாங்கம் உள்ளது. அவரவர் எடுக்கும் மதிப்பெண்களுக்கு ஏற்ப திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அடுத்த வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக உள் விளையாட்டரங்கில் இந்திய பாராலிம்பிக் வாலிபால் சங்கம், தமிழ்நாடு பாரா வாலி சங்கம், தஞ்சாவூர் மாவட்ட பாரா வாலி சங்கம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், ஐ.ஓ.பி., தஞ்சாவூர் மாநகராட்சி ஆகியவை இணைந்து அகில இந்திய அளவிலான 800 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் 11-வது அகில இந்திய பாரா வாலிபால் போட்டிகள் இன்று முதல் வரும் 5ம் தேதி வரை நடத்துகிறது.

    இந்த போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட 15 மாநிலங்களிலிருந்து விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இப்போட்டியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தேசிய பாரா வாலிபால் போட்டி தஞ்சையில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் வெற்றி பெறும் அணியை சேர்ந்தவர்கள் தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான துறையை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் தங்கள் வசமே வைத்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கும் உத்வேகம் அளித்து சம வாய்ப்பை வழங்க வேண்டும் என்பதே அதன் நோக்கமாகும். தற்போது விளையாட்டு துறைக்கான துடிப்பான அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.

    மேலும் 10ம் மற்றும் 12ம் பொதுத்தேர்வு எழுத கூடிய மாணவர்கள் தன்னம்பிக்கையுடன், தைரியத்துடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். உங்களுக்காக தான் இந்த அரசாங்கம் உள்ளது. அவரவர் எடுக்கும் மதிப்பெண்களுக்கு ஏற்ப திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கான நாற்காலி காத்து கொண்டு இருக்கிறது. தற்போது டெல்டாவில் அறுவடை நேரத்தில் கனமழை பெய்துள்ளது. பாதிப்புகான கணக்கெடுக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் விபரம் வந்த பின்னர் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    பின்னர் விளையாட்டு அரங்கில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டி நடைபெறும் களத்திற்குள் சென்று மாற்றுத்திறனாளி போட்டியாளர்களுக்கு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இதனையடுத்து மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுடன் தரையில் அமர்ந்தவாறு பாரா வாலிபால் போட்டியை துவக்கி வைத்து விளையாடினார்.

    நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். முன்னாள் தமிழ்நாடு பாரா வாலி சங்க மாநில தலைவர் டாக்டர் மக்கள் ஜி.ராஜன் வரவேற்றார்.

    இந்தப் போட்டியிலிருந்து வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உலக அளவில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில இளைஞரணி துணைச் செயலாளருமான, அன்பில் பொய்யாமொழி அவர்களின் 23-ம் ஆண்டு நினைவு தினம் வருகிற 28-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது.
    • இந்நிகழ்வில் மாவட்ட, மாநில நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

    திருச்சி,

    திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், திராவிட இயக்க முன்னணித் தலைவர்களில் ஒருவரான அன்பில் தர்மலிங்கத்தின் புதல்வரும், தி.மு.க. இளைஞர் அணி தொடங்கப்பட்ட நாளில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்தவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில இளைஞரணி துணைச் செயலாளருமான, அன்பில் பொய்யாமொழி அவர்களின் 23-ம் ஆண்டு நினைவு தினம் வருகிற 28-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது.

    இதனை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில், அவரது திருவுருவப்படத்திற்கு வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணி அளவில் கழக நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தப்படுகிறது.

    இந்நிகழ்வில் மாவட்ட, மாநில நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • மாணவர்கள் வெளியில் கூட விளையாட செல்லுங்கள், ஆனால் வீட்டில் இருந்து கொண்டு டி.வி. பார்ப்பது, செல்போன் பார்ப்பது ஆகியவற்றை முற்றிலுமாக கைவிட வேண்டும்
    • ஆசிரியர்கள் என்பது பாதி பெற்றோர்களாக இருக்க வேண்டும்

    திருச்சி :

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தொப்பநாயக்கன்பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் சடையம்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி புதிய கட்டிடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பின்னர் குத்துவிளக்கேற்றினர். இதையடுத்து மாணவர்களுக்கு மத்தியில் பேசியதாவது:-

    மாணவ, மாணவிகள் அனைவரின் கவனமும் படிப்பு, படிப்பு, படிப்பு என்பதில் தான் இருக்க வேண்டும், வெளியில் கூட விளையாட செல்லுங்கள், ஆனால் வீட்டில் இருந்து கொண்டு டி.வி. பார்ப்பது, செல்போன் பார்ப்பது ஆகியவற்றை முற்றிலுமாக கைவிட வேண்டும், புத்தக வாசிப்பை அதிகப்படுத்தி கொள்ள வேண்டும், பள்ளியில் சிறியவர்கள், பெரியவர்கள் என்பதெல்லாம் கிடையாது. அனைவரும் குழந்தைகள் தான்.

    மாணவச் செல்வங்கள் அறிவாளிகளாக இருக்கீறிர்கள் என்பதை விட நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும் என்பதைத் தான் எண்ணுகிறோம். அதை கண்டிப்பாக செய்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஆசிரியர்கள் என்பது பாதி பெற்றோர்களாக இருக்க வேண்டும், பெற்றோர்கள் என்பது பாதி ஆசிரியர்களாக இருக்க வேண்டும்.

    ஆசிரியர்கள் உங்களை கண்டிப்பது நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான். நீங்கள் வாழ்வின் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் தன்னலம் இல்லாத ஒரு இனம் உண்டு என்றால் அது ஆசிரிய இனம் தான் என்பதை உணர வேண்டும். செப்டம்பர் 16-ந்தேதி முதல் திருச்சியில் 10 நாட்கள் நடைபெறும் புத்தக திருவிழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் மட்டுமின்றி பெற்றோர்களும் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    இந்த விழாக்களில் கலெக்டர் மா.பிரதீப் குமார், மாவட்ட கல்வி அலுவலர் செல்வி, ஒன்றியக்குழு தலைவர் குணசீலன், துணை தலைவர் ஸ்ரீவித்யா ரமேஷ் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், திமுக மாவட்ட பொருளாளர் பண்ணப்பட்டி கோவிந்தராஜன், ஒன்றிய செயலாளர்கள் ஸ்ரீரங்கன், ராஜேந்திரன், ராமசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்

    ×