search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Mahesh Poiyamozhi"

    • முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில இளைஞரணி துணைச் செயலாளருமான, அன்பில் பொய்யாமொழி அவர்களின் 23-ம் ஆண்டு நினைவு தினம் வருகிற 28-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது.
    • இந்நிகழ்வில் மாவட்ட, மாநில நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

    திருச்சி,

    திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், திராவிட இயக்க முன்னணித் தலைவர்களில் ஒருவரான அன்பில் தர்மலிங்கத்தின் புதல்வரும், தி.மு.க. இளைஞர் அணி தொடங்கப்பட்ட நாளில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்தவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில இளைஞரணி துணைச் செயலாளருமான, அன்பில் பொய்யாமொழி அவர்களின் 23-ம் ஆண்டு நினைவு தினம் வருகிற 28-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது.

    இதனை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில், அவரது திருவுருவப்படத்திற்கு வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணி அளவில் கழக நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தப்படுகிறது.

    இந்நிகழ்வில் மாவட்ட, மாநில நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • மாணவர்கள் வெளியில் கூட விளையாட செல்லுங்கள், ஆனால் வீட்டில் இருந்து கொண்டு டி.வி. பார்ப்பது, செல்போன் பார்ப்பது ஆகியவற்றை முற்றிலுமாக கைவிட வேண்டும்
    • ஆசிரியர்கள் என்பது பாதி பெற்றோர்களாக இருக்க வேண்டும்

    திருச்சி :

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தொப்பநாயக்கன்பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் சடையம்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி புதிய கட்டிடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பின்னர் குத்துவிளக்கேற்றினர். இதையடுத்து மாணவர்களுக்கு மத்தியில் பேசியதாவது:-

    மாணவ, மாணவிகள் அனைவரின் கவனமும் படிப்பு, படிப்பு, படிப்பு என்பதில் தான் இருக்க வேண்டும், வெளியில் கூட விளையாட செல்லுங்கள், ஆனால் வீட்டில் இருந்து கொண்டு டி.வி. பார்ப்பது, செல்போன் பார்ப்பது ஆகியவற்றை முற்றிலுமாக கைவிட வேண்டும், புத்தக வாசிப்பை அதிகப்படுத்தி கொள்ள வேண்டும், பள்ளியில் சிறியவர்கள், பெரியவர்கள் என்பதெல்லாம் கிடையாது. அனைவரும் குழந்தைகள் தான்.

    மாணவச் செல்வங்கள் அறிவாளிகளாக இருக்கீறிர்கள் என்பதை விட நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும் என்பதைத் தான் எண்ணுகிறோம். அதை கண்டிப்பாக செய்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஆசிரியர்கள் என்பது பாதி பெற்றோர்களாக இருக்க வேண்டும், பெற்றோர்கள் என்பது பாதி ஆசிரியர்களாக இருக்க வேண்டும்.

    ஆசிரியர்கள் உங்களை கண்டிப்பது நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான். நீங்கள் வாழ்வின் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் தன்னலம் இல்லாத ஒரு இனம் உண்டு என்றால் அது ஆசிரிய இனம் தான் என்பதை உணர வேண்டும். செப்டம்பர் 16-ந்தேதி முதல் திருச்சியில் 10 நாட்கள் நடைபெறும் புத்தக திருவிழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் மட்டுமின்றி பெற்றோர்களும் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    இந்த விழாக்களில் கலெக்டர் மா.பிரதீப் குமார், மாவட்ட கல்வி அலுவலர் செல்வி, ஒன்றியக்குழு தலைவர் குணசீலன், துணை தலைவர் ஸ்ரீவித்யா ரமேஷ் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், திமுக மாவட்ட பொருளாளர் பண்ணப்பட்டி கோவிந்தராஜன், ஒன்றிய செயலாளர்கள் ஸ்ரீரங்கன், ராஜேந்திரன், ராமசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்

    • முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா மற்றும் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கொட்டப்பட்டு இந்திராநகரில் நடந்தது.
    • நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், ஓய்வெடுங்கள் என்று நாங்கள் கூறினாலும் அதனை ஏற்காமல் மக்களைப் பற்றியே சிந்தித்து ஓய்விலும் மக்கள் பணியாற்றும் மக்களின் முதல்வரைப் பெற்றுள்ளோம்.

    திருச்சி:

    திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. ஆவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா மற்றும் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கொட்டப்பட்டு இந்திராநகரில் நடந்தது.

    மாவட்ட கவுன்சில் செயலாளர் ஜோசப் நெல்சன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு பேசியதாவது:-

    கழக தலைவர் அறிவிக்கும் எந்தவொரு அறிவிப்பையுமே முனைப்புடன் நிறைவேற்றிக் காட்டுகிறது திருச்சி தெற்கு மாவட்ட கழகம். தமிழக முதல்வர் தற்போது சிறு ஓய்விலிருக்கும் நிலையிலும்கூட போனில் ஒவ்வொரு அமைச்சரிடமும், அதிகாரிகளிடமும் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டபணிகள் குறித்து விசாரித்தபடியே உள்ளார்.

    நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், ஓய்வெடுங்கள் என்று நாங்கள் கூறினாலும் அதனை ஏற்காமல் மக்களைப் பற்றியே சிந்தித்து ஓய்விலும் மக்கள் பணியாற்றும் மக்களின் முதல்வரைப் பெற்றுள்ளோம். அவர் இரண்டொரு நாட்களில் வந்துவிடுவார் என்றாலும்கூட மக்களைப் பற்றியே சிந்தித்தபடி விசாரித்தபடியே உள்ளார். எங்கள் மீது முழுநம்பிக்கை வைத்து வெற்றி பெற செய்த உங்களுக்காக நன்றி மறவாமல் உழைப்போம்.

    கடந்த 10 வருடங்கள் அப்படி இல்லாத ஆட்சி நடந்ததை தற்போது இந்த மேடையில் பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அதனை மக்களே அறிவார்கள். ஆனால் கழக தலைவரும், தமிழக முதல்வருமான தளபதி உத்தரவின்படி மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஓடிக் கொண்டிருக்கிறோம். பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இல்லம் தேடிக்கல்வித் திட்டமானாலும், மருத்துவதுறையின்கீழ் மக்களைத் தேடி மருத்துவ திட்டமானாலும் ஒவ்வொரு திட்டத்தையுமே பார்த்துப் பார்த்து செயல்படுத்தி வருகிறார் முதல்வர்.

    இன்றைக்கு இருந்த இடத்திலிருந்தே திட்டங்களை நிறைவேற்ற நவீன டிஜிட்டல் முறை இருப்பினும்கூட மக்களைத் தேடியே ஒவ்வொரு திட்டத்தையுமே செயல்படுத்தும் அவரது கடும் உழைப்பால்தான் நெம்பர் 1 முதலமைச்சராக தளபதி சரித்திரம் படைத்து வருகிறார். திருவண்ணாமலையில் 2 லட்சமாவது முகாமைத் துவக்கி வைக்க சென்றபோது அவர் தங்கும் விடுதிவரை வழிநெடுகிலும் இரண்டு பக்கங்களிலும் மனுக்களுடன் நின்ற மக்களின் அருகிலேயே சென்று மனுக்களைப் பெற்றார் முதல்வர்.

    நமது கோரிக்கைகளை உங்களில் ஒருவராக திகழும் முதல்வர் நிறைவேற்றிடுவார் என்ற நம்பிக்கையையே மக்களிடம் காண முடிந்தது. இப்படி மக்களின் நலன் சார்ந்த திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தும் கழக அரசின் ஓராண்டு சாதனைகளை இத்தெருமுனைப் பிரசார கூட்டங்கள் வாயிலாக திருச்சி தெற்கு மாவட்ட கழகம் மக்களிடையே கொண்டு சேர்க்கிறது. பொதுக்கூட்டங்கள், மற்றும் திராவிட மாடல் பயிற்சி பாசறையின் மிக பெரிய பாசறை கூட்டங்களையும் நடத்தி காட்டியுள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ, இருதயராஜ் மண்டல தலைவர் மதிவாணன், ஆவின் தொ.மு.ச. செயலாளர் பாண்டியன், கலைஞர் நகர் பகுதி செயலாளர் மணிவேல், வட்டச்செயலாளர் மாரிமுத்து, மனோகரன், தலைமைக் கழக பேச்சாளர் சேலம் சுஜாதா, ரம்யா பேகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்ட முடிவில் குணசேகரன் நன்றி கூறினார்.

    ×