என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
மணல் கடத்தல் வழக்கில் 2 பேர் கைது
ஆலங்குடியில் மணல் கடத்தல் வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகேயுள்ள வாராப்பூர் சமுதாயக்கூடம் பகுதியில் சிலர் கிராவல் மண்ணை லாரியில் கடத்துவதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது.
அதன்பேரில் சம்பட்டிவிடுதி சப்-இன்ஸ் பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் அப்பகுதி யில் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது, மணவிடுதியைச் சேர்ந்த பிரபாகரன் வயது 30, வாராப்பூரைச் சேர்ந்த மாரிமுத்து, கீழ புலவன்காட்டைச் சேர்ந்த நாகராஜ் ஆகியோர் அப்பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மணல் லாரியை பறிமுதல் செய்த போலீசார், 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து பிரபாகரன் மற்றும் நாகராஜை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய மாரி முத்துவை தேடி வருகின்றனர்.
Next Story






