என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    கஞ்சா விற்ற 3 பேர் கைது

    கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் கஞ்சா விற்பனை நடை பெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் அறந்தாங்கி காவல்த்துறையினர்,

    கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கூடுகின்ற பேருந்து நிலையம் போன்ற இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திருநாளூரில் காரில் வைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவது தெரிய வந்துள்ளது.

    அதனைத் தொடர்ந்து சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருநாளூரை சேர்ந்த விஜய் (வயது23), கோயம்பதூரை சேர்ந்த பிரகாஷ் (24), தினேஷ்பாபு (28) ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து 21 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் சான்ட்ரோ கார் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    மேலும் சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×