என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்ற போது எடுத்தப்படம்.
அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றி அமுத பெருவிழாவினை சிறப்பிக்க வேண்டும்
அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றி அமுத பெருவிழாவினை சிறப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், வருகின்ற ஏப்ரல் 2வது வாரத்தில் 7 நாட்கள் 75வது சுதந்திர தினவிழா சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்படவுள்ளது.
அதனை முன்னிட்டு அனைத்துத் துறைகளின் சார்பில், செயல்படுத்தப் பட்டுவரும் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த, பல்துறை பணிவிளக்கக் கண்காட்சி புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.
அதன்படி நடை பெறவுள்ள பல்துறை பணிவிளக்கக் கண்காட்சியை சிறப்பாக நடத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு அலுவலர் களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் வருகின்ற ஏப்ரல் 2வது வாரத்தில் 7 நாட்கள் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் இந்திய விடுதலைக்காக பாடுபட்ட தேசத் தலைவர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத் திலிருந்து விடுதலைப்போரில் பங்கேற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை போற்றும் வகையில் அவர்களது புகைப்படங்கள் மற்றும் அவர்கள் பற்றிய சிறு குறிப்புகள் இடம் பெறும் புகைப்படக் கண்காட்சியினை செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் காட்சிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
மேலும், இக்கண்காட்சி அரங்கினை அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் கிராமங்கள்தோறும் விழா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவினை சிறப்பாக கொண்டாடிட அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்.

Next Story