என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சாமி வீதி உலா வந்த காட்சி
  X
  சாமி வீதி உலா வந்த காட்சி

  முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொள்ளையூர் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா நடைபெற்றது.
  புதுக்கோட்டை:

  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் பிரசித்து பெற்ற கோவில்களில் ஒன்றாகும். தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் இயங்கிவரும் இக்கோவிலில் பங்குனி பெருந்திருவிழா ஆண்டு தோறும்  வெகுவிமெர்சையாக நடைபெறும்.

  அதேபோல் இந்த ஆண்டு கடந்த மாதம் 20ந் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து கடந்த 27ம் தேதி காப்புக்கட்டப்பட்டு தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்பாள் திருவீதி உலா மற்றும் வழிபாடு நடைபெற்று வருகிறது.

  மண்டகப்படி நாள்களில் தினமும் இரவில் அம்பாள் திருவீதி உலாவின்போது ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும்  அம்பாள் முன்பாக வரிசையாக இருபுறமும் நின்று தீப்பந்தம் பிடிப்பார்கள். இந்த தீப்பந்தம் பிடிக்கும் வேண்டுதல் மூலம் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் ஆகின்றது,

  உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல்நலம் சீராகிறது,தீப்பந்த ஒளியில் பக்தர்கள் வாழ்வில் ஒளி பிறக்கிறது என்று ஐதீகமாக கடைபிடிக்கப்பட்டு பொதுக்கள் வழிபாடு செய்து வருகிறார்கள்.  

  பொன்னமராவதி ஊரார்கள் சார்பில் நடைபெற்ற மண்டகப்படி நிகழ்வில்  திரளான பக்தர்கள் தீப்பந்தம் பிடித்து வழிபாடு செய்தனர். அம்மனுக்கு சிறப்பு  ஆராதனைகள் நடைபெற்றது.

  இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். உலகத்தில் இது போன்ற வேண்டுதல் தீவெட்டி பிடித்தல் வழிபாடு எங்குமே கிடையாது. இது இக்கோயிலின் சிறப்பாகும்.

  Next Story
  ×