என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
நூதன முறையில் தலைமையாசிரியரிடம் ரூ.1 லட்சத்து 74 ஆயிரம் பணம் கொள்ளை
கந்தர்வகோட்டையில் தலைமையாசிரிடம் நூதன முறையில் ரூ.1லட்சத்து 74 ஆயிரம் ரூபாயை மர்த நபர் கொள்ளையடித்து சென்றார்.
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை அடுத்த புனர்குளம் கிராமத்தை சேர்ந்தவர் துரையரசன் வயது 56 . இவர் கந்தர்வகோட்டை ஒன்றியம் மருங்கூர்ணி அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள வங்கியில் தனது கணக்கில் இருந்து ரூபாய் 1,74,000 பெற்றுக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளின் டேங்க் கவரில் வைத்தார்.
அப்போது அருகில் இருந்த மர்ம நபர் ஒருவர் ஆசிரியரிடம் ரூபாய் 100 கீழே கிடப்பதாக கூறினார். நூறு ரூபாயை எடுக்க ஆசிரியர் முயன்ற போது அருகில் இருந்த மர்ம நபர் பணப்பையை எடுத்துக் கொண்டு தப்பயோடி விட்டார்.
இது தொடர்பாக ஆசிரியர் துரையரசன் கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதே வங்கியில் ரூபாய் 1 லட்சத்தை விவசாயி ஒருவர் இதே முறையில் பறி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கியின் வெளிப்புறம் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாதது இதுபோன்ற திருடர்களுக்கு நல்வாய்ப்பாக உள்ளதாக வங்கி வாடிக்கையாளர்கள் கூறினர். இனிமேலாவது வங்கி நிர்வாகம் வெளிப்புறம் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story