என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    மது பாட்டிலால் வாலிபர்களை தாக்கிய 2 பேர் கைது

    வாலிபர்களை மது பாட்டில்களால் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மாஞ்சன் விடுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் சத்யராஜ், இவரும் புதுக்கோட்டை காந்தி நகர் 7-ம் தெருவை சேர்ந்த ஹரிதாஸ் மகன் மேகனாதனும் ஒரு இரு சக்கர வாகனத்தில்  மாஞ்சன் விடுதிக்கு வந்து கொண்டிருந்தனர்.

    வாகனம் சந்தை பேட்டை அருகே வந்த போது, எதிரே பள்ளத்திவிடுதி வடக்கு பட்டியை சேர்ந்த காசி மகன் சுப்பிரமணியன் (வயது 19), சூரன்விடுதி தொண்டமான் குடியிருப்பு துரைசாமி மகன் வெங்கடேஷ் இவர்கள் வந்த இருசக்கர வாகனமும் மோதியது.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர்களுக்குள் வாக்குவாதம் நடைபெற்றது. இதனை பார்த்த அப்பகுதியினர் சமாதானப்படுதி அவர்களை அனுப்பிவைத்தனர்.

    இதில் ஆத்திரம் அடங்காத சுப்பிரமணியனும், வெங்கடேசும் விரட்டி சென்று, ஆயிப்பட்டி விலக்கு  பகுதி அருகே அவர்களை நிறுத்தி, மது பாட்டிலால் சரமரியாக தாக்கியுள்ளனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த சத்யராஜ் மற்றும் மேகனாதனை அப்பகுதியினர் மீட்டு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.

    இச்சம்பவத்தை அறிந்த ஆலங்குடி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதோடு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சத்யராஜ் மற்றும் மேகனாதனிடம் விசாரணை நடத்தினர். பின்னர் இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியன் மற்றும் வெங்கடேஷை கைது செய்தனர். வாலிபர்களுக்குள்  ஏற்பட்ட மோதலால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.
    Next Story
    ×