என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILE PHOTO
அனுமதியின்றி மாட்டு வண்டி பந்தயம் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்கு
அனுமதியின்றி மாட்டு வண்டி பந்தயம் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாசி மற்றும் பங்குனி திருவிழாக்களை முன்னிட்டு மாட்டு வண்டி , குதிரை பந்தயம் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இப்பந்தயங்களை நடத்த போலீசார் அனுமதி அளிக்கப்படுவதில்லை.
இருப்பினும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பந்தயங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பந்தயங்கள் நடைபெற்றபின்பு பந்தயம் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்வது தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் கே.புதுப்பட்டி காவல் சரகத்திற்கு உட்பட்ட நெடுங்குடியில் சிவன் கோவில் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து போலீசாரிடம் அனுமதி பெறவில்லை என கூறி சுப்பையா மகன் அருணாச்சலம், கணேசன் மகன் ராஜேஸ், கருப்பையா மகன் முருகேசன், அசோக், அமுதன் காந்தி மகன் அருண்குமார் ஆகியோர் பந்தயத்திற்கு ஏற்பாடு செய்ததாக அவர்கள் மீது சப்இன்ஸ்பெக்டர் தமிழ்வாசகன் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
பந்தயங்கள் நடத்தும் முன்னரே தடுத்து நிறுத்தாமல் அவர்களை நடத்த விட்டுவிட்டு பின்னர் வழக்கு பதிவு செய்வது என்பது வாடிக்கையாகி விட்டது. நேற்று முன்தினம் திருமயம் அருகே மெய்யூரணி பகுதியில் மாட்டு வண்டி பந்தயம் நடத்தியதாக 5 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story