என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    அரசு வகுத்துள்ள நெறிமுறைகள்படி ஜல்லிக்கட்டு போட்டிகள்

    அரசு வகுத்துள்ள நெறிமுறைகள்படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுக்கோட்டை:
     
    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை அரசு வகுத்துள்ள நெறிமுறைகள் அடிப்படையில் நடத்துவது தொடர்பாக, இந்திய கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழு உறுப்பினர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் எஸ்.கே.மிட்டல், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழு உறுப்பினர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் தெரிவித்ததாவது, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டியான ஜல்லிக் கட்டினை மீட்டெடுத்து, தொடர்ந்து நடைபெறும் வகையில் அரசு ஜல்லிக் கட்டிற்கான வழிகாட்டு நெறி முறைகளை வகுத்துள்ளது. அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவதை மாவட்ட நிர்வாகம் மற்றும் விழா குழுவினர் உறுதி செய்ய வேண்டும். 

    இதன்மூலம் கால் நடைகளுக்கும், மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் போட்டிகள் நடத்த தகுந்த ஏற்பாடுகளை விழா குழுவினர் ஏற்பாடு செய்ய வேண்டும்.  அதனடிப்படையில் போட்டிகளில் முழு உடல் தகுதி பெற்றுள்ள காளைகள் மட்டும் பங்கேற்க வேண்டும்.  மேலும்  வீரர்கள் அனைவரும் அரசு தெரிவித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றனர்.
    Next Story
    ×