என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர்கள்எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர்
    X
    அமைச்சர்கள்எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர்

    அரசு மருத்துவக் கல்லூரியில் விளையாட்டு மைதானம்

    அரசு மருத்துவக் கல்லூரியில் விளையாட்டு மைதானத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவ மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டுத் திடலினை அமைச்சர்கள்எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடை பெற்றது. 

    நிகழ்ச்சியில்  அமைச்சர் ரகுபதி பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சரால் 2010-ம் ஆண்டு காலத்திலேயே புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுவதற்காக அனைத்து ஏற்பாடுகள் நிறைவுற்றிருந்தது. 

    மேலும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மருத்துவ மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டுத் திடல் துவக்கி வைக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் இந்த விளையாட்டுத் திடலில் நாள்தோறும் விளையாட்டு பயிற்சிகள் மேற்கொள்ளலாம் என பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்  மெய்யநாதன்  பேசியதாவது, இந்த விளையாட்டு மைதானத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து  தமிழ்நாடு முதலமைச்சர்  கவனத்திற்கு கொண்டு சென்று, கோரிக்கைகள் நிறைவேற்று வதற்கான உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும். நாள்தோறும் பயிலும் கல்வியை போன்று,  தினமும் இந்த விளையாட்டு மைதானத்தை மருத்துவ மாணவ, மாணவியர்கள் பயன்படுத்த வேண்டும். 

    தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியாவிலேயே முதல்முறையாக 2022 - உலக சதுரங்கப் போட்டிக்கான அனுமதியினை பெற்று தந்துள்ளார்கள் என்றார்.

    Next Story
    ×