என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
ஊரணியில் கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில் முதியவர்
ஊரணியில் கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த முதியவரால் பரபரப்பு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பொன்-புதுப்பட்டி தேர்முட்டி வீதி வீரன்செட்டியில் உள்ள ஊரணியில் இரவு 10 மணியளவில் பிணம் போல் ஒருவர் அசைவற்ற கிடந்துள்ளார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் பொன்னமராவதி போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரில் கிடந்த நபரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
அப்போது தான் அவருக்கு உயிர் இருப்பதும், அவர் 70 வயதுடைய முதியவர் என்பதும் தெரியவந்தது. அவர் கைகள், கால்களும் கட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து அவரை பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதியவர் கை, கால்களை கட்டி கொலை செய்ய ஊரணியில் தூக்கி வீசி சென்றனரா? யார் அவர், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து பொன்னமராவதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






