என் மலர்
உள்ளூர் செய்திகள்

கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
கர்நாடக அரசைக் கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மேகதாது அணைக்கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசைக் கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
கர்நாடக அரசின் 2022-&23ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், மேகதாதுவில் அணைக்கட்டுவதற்கு ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளதாக அம்மாநில முதலமைச்சரும், நிதியமைச் சருமான பசவராஜ் பொம்மை அறிவித்திருந்தார்.
இதனை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடியில் விவசாயிகள் சங்கத்தினர் கர்நாடக அரசைக் கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுப் பட்டனர்.
ஆர்பாட்டத்தில் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் நோக்கில் செயல்படும் கர்நாடக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. அப்போது தெரிவித்த விவசாயிகள், கர்நாடக அரசு, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தீர்ப்புகளை மதிப்பதில்லை,
மத்திய அரசின் பேச்சையும் கேட்பதில்லை, மாறாக தங்கள் மாநில இந்தியாவில் தனி மாநிலம் போல் செயல்பட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசும் துணை நிற்கிறது என குற்றம் சாட்டினர். தற்போது முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
கர்நாடக அரசு மேலும் இதை தொடர்ந்தால் மேகதாதுவிற்கே சென்று போராட்டம் நடத்தி தடுத்து நிறுத்துவோம் என்றும் தெரிவித்தனர்.
ஆர்பாட்டத்தில் கல்லணைக் கால்வாய் கடைமடை பகுதி பாசனதாரர் சங்கத் தலைவர் கொக்குமடை ரமேஷ், தேசிய குழு உறுப்பினர் மாதவன், மாவட்ட செயலாளர் சோமையா, மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், கல்லணைக் கால்வாய் கடைமடை பகுதி பாசனதாரர் சங்க முன்னாள் தலைவர் ராமசாமி, விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர் தண்டாயுதபாணி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story