என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
அரசு தொழில் மையத்தில் குறுகிய கால பயிற்சி வகுப்புகள்
அரசு தொழில் மையத்தில் குறுகிய கால பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வெல்டிங் ஆப்பரேட்டார் மற்றும் இரு சக்கர வாகன பழுதுபார்த்தல் தொழிற் நுட்பவல்லுநர் ஆகிய தொழிற்பிரிவுகளில் குறுகிய கால பயிற்சி வழங்கப்பட உள்ளது.
கல்வித் தகுதியாக 8&ம் வகுப்பு தேர்ச்சியடைந்தவராகவும் குறைந்த பட்சமாக 14 முதல் 45 வயது உள்ளவராக இருக்க வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி கல்லூரி முடித்த அல்லது இடைநின்ற பயிற்சியாளர்கள் இந்த பயிற்சியில் சேரலாம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாயப்பு கிடைக்கும் என்பதால் வேலை இல்லாத மேற்காணும் தகுதி உள்ளவர்கள் இதில் சேர்ந்து பயன்பெறலாம்.
இதில் சேர விரும்புவோர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், திருக்கோகர்ணம், திருச்சி மெயின் ரோடு, புதுக்கோட்டை நிலைய முதல்வர் அல்லது 04322&221584 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என புதுக்கோட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் தெரிவித்துள்ளார்.
Next Story






