என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலையரங்கத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்த போது எடுத்தப்படம்.
    X
    கலையரங்கத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்த போது எடுத்தப்படம்.

    பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை - அமைச்சர் பேச்சு

    பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் புதிய மின்மாற்றிகள் மற்றும் கலையரங்கங்களை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது,

    முதலமைச்சர் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

    பொதுமக்களின் கோரிக்கைகளை தீர்க்கும் வகையில் அலுவலர்கள் வரவழைத்து தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறிப்பாக இப்பகுதியில் பட்டா வழங்குதல்,  முதியோர் உதவித் தொகை, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குதல் போன்ற பணிகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். 

    மேலும் இப்பகுதி பொதுமக்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். பொற்பனைக்கோட்டை கோயிலிற்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் உணவுக் கூடம் மற்றும் மேம்பாட்டுப்பணிகளுடன், திருப்பணிகள் நடத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

    பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
    Next Story
    ×