என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
மசாஜ் சென்டர் பெயரில் விபசாரம்
மசாஜ் சென்டர் பெயரில் விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:
புதுச்சேரியை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 27). இவர் திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் ஆன் லைனில் தனக்கு மசாஜ் செய்ய வேண்டும் என்று ஒரு செயலி மூலம் சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் மசாஜ் சென்டருக்கு முன் பதிவு செய்துள்ளார்.
அதன்படி மசாஜ் செய்வதற்காக ராஜதுரை சத்திரம் பகுதியில் உள்ள அந்த மசாஜ் சென்டருக்கு சென்றுள்ளார். அப்போது இரண்டு பெண்கள் அரைகுறை ஆடையுடன் இவரிடம் விபசாரத்திற்காக அணுகியுள்ளனர்.
இதை பிடிக்காத ராஜதுரை உடனடியாக அங்கிருந்து தப்பித்து வெளியே வந்து திருச்சிகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு சம்பவ இடத்திற்கு சென்று செய்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ராஜா (37), திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த வில்பிரட் மார்ட்டின் (40), திருச்சி முசிறி பகுதியைச் சேர்ந்த ரவி (48), மசாஜ் சென்டரின் மேலாளர் மற்றும் 37 வயதுடைய பெண் ஒருவரும் 27 வயதுடைய பெண் ஒருவரும் சேர்ந்து ஆன்லைனில் செயலி ஒன்றை உருவாக்கி தொடர்ந்து மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் செய்து வந்தது போலீசார் விசாரணையில் தெரிந்தது.
பின்னர் கோட்டை போலீசார் 5 பேரையும் கைது செய்தனர். அதில் 2 பெண் களை காப்பகத்தில் ஒப்படைத்தனர். ஆன்லைனில் செயலியை உருவாக்கி விபசாரத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் சத்திரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






