என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலை அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது 25). பட்டதாரியான இவர் தகுந்த வேலை தேடிக்கொண்டு இருந்தார். பல்வேறு நிறுவனங்களுக்கும் வேலை வேண்டி விண்ணப்பித்து இருந்தார்.
இந்தநிலையில் முத்துக்குமரனை நெய்வேலியை சேர்ந்த, தற்போது விராச்சிலையில் வசித்து வரும் ஸ்ரீகாந்த் (46), சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த முகமதுல்லாபீர் (38) மற்றும் அதே பகுதியை சேர்ந்த மன்சூர் உல்லாகான் (41) ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.
அப்போது அவரிடம் மத்திய அரசு அதிகாரிகளுடன் தங்களுக்கு நெருங்கிய நட்பு இருக்கிறது. அவர்கள் மூலம் விமான நிலையம் மற்றும் அதனை சார்ந்த அலுவலகங்களில் வேலை வாய்ப்பை பெற்றுத்தர முடியும் என்று தெரிவித்துள்ளனர். அதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் என்று கூறி நம்பிக்கை அளித்துள்ளனர்.
அதன்பேரில் முத்துக்குமரன் உள்ளிட்ட அதே பகுதியை சேர்ந்த வேலை தேடுவோர் 15 பேரிடம் ரூ.18 லட்சத்து 40 ஆயிரம் பணத்தை வசூல் செய்துள்ளனர். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வேலையில் சேர்வதற்கான அழைப்பாணை வீடு தேடி வரும், அதுவரை காத்திருங்கள் என்றும் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் மாதங்கள் பல கடந்தும் வேலைவாய்ப்பு தொடர்பான எந்தவொரு கடிதமும் முத்துக்குமரன் உள்ளிட்ட யாருக்கும் வரவில்லை. சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்கள் முறையான பதிலை அளிக்கவில்லை. மேலும் கொடுத்த பணத்தையும் திருப்பித்தர மறுத்துவிட்டனர்.
அதன் பின்னர் தான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த 15 பேரும் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் மோசடி வழக்குப்பதிவு செய்து போலீசார் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல் வசதி படைத்தவர்கள் பலரை குறிவைத்து விமான நிலையம், மத்திய அரசு பணி என்று ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சேவுகம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 22 பேர் காயமடைந்தனர்.
ஆலங்குடி அருகேயுள்ள சேவுகம்பட்டி காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டை கோட்டாட்சியர் அபிநயா தொடங்கி வைத்தார்.
இதில், புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 795 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்குவதற்கு 280 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர்.
அப்போது, காளைகள் முட்டியதில் 22 பேர் காயமடைந்தனர். அவர்களில் பலத்த காயமடைந்த 2 பேர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி நாணயம், சைக்கிள்,
பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. பாதுகாப்பு பணிகளை செம்பட்டிவிடுதி போலீசார் மேற்கொண்டனர்.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை, புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட 17 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட மற்றும் மாநில அளவிலான கலைப்போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் நடத்திட அரசு ஆணையிடப்பட்டுள்ளது.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் பரத நாட்டியம், குரலிசை, கருவியிசை, கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் இக்கலைப் போட்டிகள் நடத்தப்பட்டு, இதில் வெற்றிபெற்ற 15 மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு காசோலைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் மு.க.சுந்தர், மாவட்ட அரசு இசைப் பள்ளி தலைமையாசிரியர் கோ.மா.சிவஞானவதி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் புரட்சி கவிதாசன் சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட செல்வம் அழகப்பன் ஆகியோர் கூட்டாக நற்சாந்துபட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்தப்போது கூறியதாவது:-
புதுக்கோட்டை பாராளு மன்ற தொகுதியை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை. திருமயத்தில் கேந்திரிய வித்யாலாயா பள்ளி . நமண சமுத்திரம் ரெயில்நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். அறந்தாங்கி பொதுகூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசியது கண்டிக்கத் தக்கது.
மத்திய அமைச்ச ரையும், கவர்னரையும் ஒரு மையில் பேசியது கண்ட னத்துக்குரியது. விடுதலை சிறுத்தைகளை வைத்துக்கொண்டு பா.ஜ.க.வை மிரட்டி வருகிறது தி.மு.க. சமீபத்தில் அம்பேத்கர் பிறந்த நாளில் மாநிலம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் வேண்டு மென்றே தகராறு செய்துள்ளனர்.
புதுக் கோட்டையில் விடு தலை சிறுத்தை கட்சியினர் தாக்கியதில் சந்தானலட்சுமி என்ற தொண்டர் காயமடைந்தார். அம்பேத்கர் அனைவருக்கும் பொதுவானவர். ஒரு கட்சி மட்டும் சொந்தம் கொண்டாடகூடாது. டாஸ்மாக் கடைகளை குறைப் போம் என கூறி விட்டு அதிகப்படுத்தி கொண்டே வருகின்றனர் தி.மு.க.வினர்.
நற்சாந்துப்பட்டியில் முன்னோடியாக டாஸ்மாக் இல்லாத பகுதியாக மாற்றியுள்ளோம். நெல் கொள்முதலில் மூட்டை ஒன்றுக்கு ரூ.50 கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் 100 கோடி வரை ஊழல் நடைப்பெறுகிறது.
மாநிலம் முழுவதும் தினந்தோறும் சேவாதினம் கொண்டாடப் படவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1.65 லட்சம் ஏக்கர் தைலமர காடு களுக்கு பதிலாக மரகாடு களை உருவாக்க வேண்டும்.என்றனர்.
பேட்டியின் போது ஜுவானந்தம், முரளி, திரைப்பட நடிகர் முருகானந் தம், இயக்குநர் எம்எஸ்எஸ், ஊடகப்பிரிவு சந்திரசேகரன், செல்லத்துரைகனகராஜ் உட்பட பலர் இருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 இடங்களில் ஓராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் 2575 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2003 முதல் 2013ம் ஆண்டு வரை மின் இணைப்புக்காக பதிவு செய்து காத்திருந்த விவசாயிகளுக்கு ஒரு லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார்.
அதன்படி தமிழகம் முழுவதும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. மின் இணைப்பு பெற்ற விவசாயிகளிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்த காணொலி மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், இலுப்பூர், விராலிமலை, புனல்குளம், மாத்தூர், அறந்தாங்கி, ஆலங்குடி, அம்மாசத்திரம், திருமயம் ஆகிய 9 இடங்களில் காணொலிக் காட்சி மூலம் இலவச மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருமயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கலெக்டர் கவிதா ராமு, மின்வாரிய மேற்பார்வையாளர் (பொ) அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது மாவட்டத்தில் 2575 இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம், முள்ளங்குறிச்சி அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
புதுக்கோட்டை, சிவகங்கை மதுரை, மணப்பாறை, திருச்சி கந்தர்வகோட்டை கோமாபுரம் ஆகிய ஊர்களிலிருந்து 900 காளைளுடன் 200 காளையர்கள் கலந்து கொண்டனர். காளைக்கும் காளையை அடக்கும் வீரர்களுக்கும் பரிசு பொருட்கள் தங்ககாசு, வெள்ளிகாசு பீரோ கட்டில் பேன், மிக்சி, சைக்கிள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பு ரவி, கறம்பக்குடி வட்டாட்சியர் விஸ்வநாதன்காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் பிலாவிடுதி ஊராட்சி மன்றத் தலைவர் நாட்டு அம்பலகாரருமான விஜயரவி பல்லவராயர்,
கறம்பக்குடி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தவ.பாஞ்சாலன், கறம்பக்குடி பேருராட்சி தலைவரும், நகர தி.மு.க.செயலாளர் உ.முருகேசன், முள்ளங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர் காந்திமதி, முருகானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
ஜல்லிக்கடடில் கலந்து கொண்ட 50 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது, விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் முள்ளங்குறிச்சி பொது மக்கள் செய்தார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கல்லணைக்கால்வாய் கடைமடை பகுதியில் சுமார் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.
நெற்ப்பயிர் அறுவடைக்கு பிறகு கோடை காலப் பயிரான எள் சாகுபடி செய்வது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டு சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் எள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.
எள் கோடைகால பயிர் என்பதால் இதற்கு அதிகபடியான தண்ணீர் தேவைபடாது, நெல் அறுவடைக்கு பிறகு நிலத்தில் உள்ள ஈர பதத்திலேயே உழவு செய்து எள் விதைக்கப்படுகிறது. அதன் பின் பனிப் பதத்திலேயே அது வளர்ச்சியடைகிறது.
ஏக்கர் ஒன்றிற்கு 6 மூட்டைகள் வரை விளையக்கூடிய எள் பயிரானது, ரூ50 முதல் 60 ஆயிரம் வரை லாபம் ஈட்டி தரக்கூடியது.
இந்நிலையில் சமீபத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக கண்டிச்சாங்காடு, ஏகப்பெருமாளூர், வெள்ளாட்டுமங்கலம், கம்பர்கோவில், தினையாகுடி, சிங்கவனம் உள்ளிட்ட 40க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் எள் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானது.
இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கையில், நெல் அறுவடைக்கு பிறகு கோடை காலப் பயிரான எள் விதைப்பு செய்வோம், இதற்கு ஒரு முறை மட்டுமே உரம் தெளிக்கப்பட்டு, மூன்றிலிருந்து நான்குமுறை பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்படுகிறது.
மேலும் எள் அறுவடைக்கு பிறகு, செடியிலிருந்து எள்ளை பிரித்து எடுப்பதற்காக, அறுவடை செய்த எள் செடிகளை போர் போட்டு அடைந்து வைக்கப்படுகிறது. அப்போது பூச்சி பிடிக்காமல் இருக்க ஒரு முறை பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்படுகிறது.
இவ்வாறு ஆள் கூலி என மொத்தம் ஏக்கருக்கு 20 ஆயிரம் வரை செலவாகிறது. இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக எள் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதமாகியுள்ளது.
ஏற்கனவே நெற்ப்பயிர் சாகுபடியில் போதிய வருமானம் இல்லாமல் நஷ்டத்தை சந்தித்த விவசாயிகள் தற்போது எள் பயிர் சாகுபடியிலும் இயற்கை சீற்றத்தால் மீண்டும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம்.
எனவே தமிழக அரசு உடனடியாக மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அதிகாரிகளை கொண்டு நேரில் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் கறம்பக்குடி நகர அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் முஹம்மதுஜான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முகமது மன்சூர் வரவேற்றார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டனர்.
கூட்டத்தில் வருகிற 24&ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற விருக்கும் மதநல்லிணக்கம் போற்றும் இஃப்தார் விருந்து நிகழ்ச்-சியை சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்-பட்டது.
முடிவில் ஒன்றிய செயலாளர் சாகுல் ஹமீது நன்றி கூறினார்.இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை:
சித்திரைப் பௌர்ணமி விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள இம்னாம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து அம்பாளுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 9 வகையான அபிஷேகம் நடைபெற்றது இரவு கோயில் முன்பாக நடன நாட்டிய நிகழ்ச்சி நடை பெற்றது.
இதேபோல் பொற்பனைக்கோட்டை காளிகோவில் திருவரங்குளம் தெற்கு வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ பிடாரி அம்மன் கோவில், பாரதியார் நகர் மகாசக்தி மாரியம்மன் கோவில், அழகர் கோவில் திருவரங்குளம் பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்றது.






