என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    கலைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

    கலைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    புதுக்கோட்டை:

    தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை, புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட 17 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட மற்றும் மாநில அளவிலான கலைப்போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் நடத்திட அரசு ஆணையிடப்பட்டுள்ளது.

    அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் பரத நாட்டியம், குரலிசை, கருவியிசை, கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் இக்கலைப் போட்டிகள் நடத்தப்பட்டு, இதில் வெற்றிபெற்ற 15 மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு காசோலைகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் மு.க.சுந்தர், மாவட்ட அரசு இசைப் பள்ளி தலைமையாசிரியர் கோ.மா.சிவஞானவதி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 
    Next Story
    ×