என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்துமாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடை பெற்ற போது எடுத்த படம்.
    X
    முத்துமாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடை பெற்ற போது எடுத்த படம்.

    அம்மன் கோவில்களில் சித்ரா பவுர்ணமி விழா

    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஆலங்குடி பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் பொங்கல் விழா நடை பெற்றது.

    புதுக்கோட்டை:

    சித்திரைப் பௌர்ணமி விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள இம்னாம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் ஏராளமான பெண்கள்  பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்தனர்.

    இதைத் தொடர்ந்து அம்பாளுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 9 வகையான அபிஷேகம் நடைபெற்றது இரவு கோயில் முன்பாக நடன நாட்டிய நிகழ்ச்சி நடை பெற்றது.

    இதேபோல் பொற்பனைக்கோட்டை காளிகோவில் திருவரங்குளம் தெற்கு வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ பிடாரி அம்மன் கோவில்,  பாரதியார் நகர் மகாசக்தி மாரியம்மன் கோவில், அழகர் கோவில் திருவரங்குளம் பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில்  சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
    Next Story
    ×