என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜல்லிகட்டு போட்டி நடைபெற்ற போது எடுத்தப்படம்.
சேவுகம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி
சேவுகம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 22 பேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சேவுகம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 22 பேர் காயமடைந்தனர்.
ஆலங்குடி அருகேயுள்ள சேவுகம்பட்டி காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டை கோட்டாட்சியர் அபிநயா தொடங்கி வைத்தார்.
இதில், புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 795 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்குவதற்கு 280 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர்.
அப்போது, காளைகள் முட்டியதில் 22 பேர் காயமடைந்தனர். அவர்களில் பலத்த காயமடைந்த 2 பேர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி நாணயம், சைக்கிள்,
பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. பாதுகாப்பு பணிகளை செம்பட்டிவிடுதி போலீசார் மேற்கொண்டனர்.

Next Story