என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    வாகனம் மோதி ஓய்வு பெற்ற மின்சார ஊழியர் பலியானார்.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பாரதிதாசன் சாலையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 65). ஓய்வு பெற்ற மின்சார வாரிய ஊழியர். இவரது மனைவி செல்வராணி (வயது 55). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உறவினரை பார்த்து விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.

    வடவாளம் அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு பாலகிருஷ்ணனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

    செல்வராணி சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து சம்பட்டிவிடுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காதல் விவகாரத்தில் மகளை தாயே கட்டையால் அடித்து கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மாணவநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம்பிள்ளை- ஜெயலட்சுமி தம்பதியின் மகள் சத்தியா (வயது 27). இவர் பி.எஸ்சி. நர்சிங் படிப்பை முடித்து விட்டு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலைபார்த்து வந்துள்ளார்.

    அப்போது பெயர் விலாசம் தெரியாத நபர் ஒருவரோடு பழக்கம் ஏற்பட்டு அவரை காதலித்தார். மேலும் வெளியில் ஊர் சுற்றியதோடு, அவருடன் நெருங்கி பழகுவதை தெரிந்த நபர்கள் மூலம் சத்தியாவின் தாய் ஜெயலட்மி அறிந்தார்.

    உடனே மகளை அழைத்து கண்டித்த தாய் ஜெயலட்சுமி, வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறி வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி வீட்டிலேயே இருந்த சத்தியா, தாய்க்கு தெரியாமல் தனது காதலனோடு தொடர்ந்து போனில் பேசி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் காதலனோடு சேர்ந்து வாழ நினைத்த சத்தியா நேற்று சென்னைக்கு கிளம்புவதாகக் கூறி பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு தயாராகியுள்ளார்.

    இதனால் தாய் ஜெயலட்சுமிக்கும், மகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தாய், நீ உயிரோடு இருந்தால்தானே அவனோடு ஓடுவாய் என்று கூறி, உருட்டுக்கட்டையால் மகளை சரமாரியாக தாக்கியுள்ளார்.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த சத்தியா அங்கேயே மயங்கி விழுந்தார். அதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சம்பவம் குறித்து நாகுடி வட்ட கிராம நிர்வாக அலுவலர் தமிழரசன் கொடுத்த புகாரின் பேரில் நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மகளை தாக்கிய தாயிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கந்தர்வகோட்டை பகுதியில் அறிவிக்கப்படாத மின் வெட்டால் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் வியாபாரிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.  

    தினசரி குறைந்தது பத்து முறையாவது மின்வெட்டு ஏற்படுகிறது. அதிலும் இரவு நேரங்களில் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை மின்வெட்டு தொடர்கிறது. இரவு நேரங்களில் முதியவர்கள் குழந்தைகள் கோடைகாலத்தில் ஏற்படும் வெப்பத்தால் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

    மேலும் பகல் நேரங்களில் ஏற்படும் மின்வெட்டால் வியாபாரிகள் அரசு அலுவலகங்களில் பல்வேறு பணிக்காக வந்திருக்கும் பொதுமக்கள் செய்வதறியாது தவிக்கின்றனர்.  

    மேலும் 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள், மாணவிகள் இந்த மின்வெட்டால் தங்களது கல்வி பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர்.  

    கந்தர்வகோட்டையில் நிலவும் இந்த மின்வெட்டால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், அரசு மருத்துவமனை உள் நோயாளிகள், முதியோர்கள், சிறு குழந்தைகளின் பெற்றோர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.  

    எனவே மாவட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவும், மின்வெட்டு தொடராமல் சீராக  மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டுள்ளன
    திருவரங்குளம் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ராஷ்ட்ரிய கிரா ம் ஸ்வராஜ் அபியான் திட்டத்தின்கீழ் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு ஊராட்சி நடைமுறைகள் குறித்து எடுத்துரைக்கும் விதமாக கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் புத்தாக்க பயிற்சி நடைபெற்று வருகிறது.

    இந்த புத்தாக்க பயிற்சி முகாமில் திருவனங்குளம் ஊராட்சிக்குட்பட்ட 48 ஊராட்சிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ‌

    இதில் புதுக்கோட்டை ஊராட்சித்துறை பயிற்றுநர்கள் கலந்து கொண்டு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களின் அதிகாரங்கள், கிராம ஊராட்சியின் அதிகாரங்கள், கிராம ஊராட்சி துணைத் தலைவரின் கடமைகள், கிராம ஊராட்சி உறுப்பினரின் கடமைகள், தெரு விளக்குகள் பராமரித்தல், குடிநீர் வினியோகம் பொது சுகாதாரம்,

    சுற்றுச்சூழல் மேம் பாடு, கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரித்தல் மற்றும் கிராம ஊராட்சி சொத்துக்கள் பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு விதமான கடமைகள் ம ற்றும் அதிகாரங்கள் குறித்து ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு விளக்க மாக எடுத்துக்கூறினர்.

    அப்போது பள்ளத்திவிடுதி ஊராட்சி 4வது வார்டு பா.ஜ.க. உறுப்பினர் முருகேசன் ராஷ்ட்ரிய கிராம் ஸ்வராஜ் அபிபாயான் திட்டம் மத்திய அரசின் திட்டம் மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்த பிரதமர் மோடியின் படத்தை போடாமல் தமிழக இந்நாள் மற்றும் முன்னாள் முதலமைச்சரின் படங்களை வைத்துதிட்டத்தை செயல்படுத்துவது நியாயம் கிடையாது.ª

    சலவு கணக்கு காட் டுவதற்காக இந்த திட்டத்தை மாநில அரசின் திட்டமாக மாற்றி செயல்படு த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி புத்தாக்க பயிற்சி புறக்க ணித்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு
    புதுக்கோட்டை:
     

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி புதுப்பட்டி சிதம்பரம் செட்டியார் சந்து வீதியை சேர்ந்தவர் சண்முகநாதன் மனைவி கோமதி (வயது 63).

    இவர் தனது வீட்டில் உள்ள கிணற்றில் நீர் இறைக்கும் போது தவறி  கிணற்றுக்குள் விழுந்துள்ளார். சத்தம் கேட்ட அவரது மகன்கள் தீயணைப்புபடையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான தீயணைப்புபடையினர் கிணற்றுக்குள் இறங்கி மூதாட்டியை உயிருடன் மீட்டனர்.

    மூதாட்டியை மீட்ட தீயணைப்பு படையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
    மின்கம்பத்தில் அடிப்பட்ட மயிலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே மச்சுவாடி விஷ்வதாஸ் நகர் பகுதியில் குடிநீர் தேடி வந் த மயில் ஒன்று அங்குள்ள மின்கம்பத்தில் மோதி பலத்த காயம் ஏற்பட்டு, பறக்க முடியாமல் கிடந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள்வனத்துறையி னருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் வந்த வனச்சரக அலுவலர் சதாசிவம் அதனை மீட்டு, புதுக்கோட்டை அரசு தலைமை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    சிகிச்சைக்கு பிறகு கால்நடை மருத்துவர் மயிலை குணமடையும் வரை கண்காணிப்பில் வைத்து பாதுகாக்க வேண்டும் என வனச்சரக ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.
    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவையை வழங்கிடவேண்டும், 

    சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும்.சரண் விடுப்பு ஒப்புவிப்பு உட்பட நிலுவை கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்  துணை வட்டாட்சியர் செல்வராசு தலைமையில் ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில்  நடைபெற்றது. 

    யோகேஸ்வரன் மாவட்ட துணைத்தலைவர் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ரவிக்குமார் மாவட்ட இணைச்செயலாளர் சாலை  பணி யாளர் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் கருப்பையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் சாலை பணியாளர் சங்கத்தின் வட்டத்தலைவ ர் வரவேற்புரை ஆற்றினார்.

    ஆர்பாட்டத்தில் அதிகமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
    பள்ளி மாணவியை 8 மாத கர்ப்பிணியாக்கிய உறவினரை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே வாழமங் களம் வடுகபட்டி கிராமத்தை சேர்ந்தவர் 10&ம் வகுப்பு மாணவி. அதே பகுதியை சேர்ந்த உறவினரான அஜித் குமார் என்பவர் மாணவியிடம் நெருங்கி பழகி வந்துள்ளார்.

    மாணவியின் பெற்றோரும் உறவினர் என்பதால் அதனை பெரிதாக கண்டுகொள்ளவிலலை. ஆனால் அஜித்குமாரின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் எல்லை மீறி சென்றுள்ளது. இதனை ஒரு கட்டத்தில் மாணவி தடுத்துள்ளார்.

    அப்போது நாம் திருமணம் செய்து கொள்வோம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும் பல பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். கடந்த 5 வரு டங்களாக தனிமையில் அவர்கள் வெளியிடங்களில் சுற்றித்திரிந்து பல நேரங் களில் தனிமையில் இருந்துள்ளனர். 

    இந்நிலையில் மாணவியின் உடல் நலனில் ஏற்பட்ட மாற்றங்கள் அவரது பெற்றோரை சந்தேகம் அடைய செய்தது. இதையடுத்து அவரிடம் கேட்டபோது, நடந்த விபரங்களை கூறினார். மேலும் மாணவி தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருப்பதும் தெரிந்தது. இதைக்கேட்ட பெற்றோர் தலையில் இடி விழுந்ததாக உணர்ந்தனர்.


    பின்னர் இதுபற்றி அவர்கள் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரியிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான  அஜித்குமாரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
    இளையராஜா மீதான வரம்பு மீறிய தாக்கு ஏற்புடையதல்ல என்று அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் தெரிவித்துள்ளார்.

    புதுக்கோட்டை:

    அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது:&
    டெல்லியில் உள்ள புளூகிராப் டிஜிட்டல் பவுண்டேசன் என்ற நிறுவனம்,  மோடியும் அம்பேத்கரும், சீர்திருத்தவாதியின் சிந்தனையும் செயல்வீரரின் நடவடிக்கையும் என்ற  பெயரில் புத்தகம் ஒன்றை வெளியிட்டது.

    இந்தப் புத்தகத்துக்கு  இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில் பிரதமர் மோடி ஆட்சியின் பல  திட்டங்கள், அம்பேத்கரின்  சிந்தனையை அடிப்படையாகக்  கொண்டவை. பெண்கள்,  விளிம்பு நிலை மக்களுக்கான பல  திட்டங்களை மோடி அரசு  வகுத்துள்ளது. முத்தலாக் தடை சட்டம் உள்பட சட்டங்கள் மூலமாக  நிகழ்ந்த சமூக மாற்றங்களை  நினைத்து அம்பேத்கர் பெருமைப்பட்டிருப்பார் என  குறிப்பிட்டிருந்தார்.

    இது அவருடைய தனிப்பட்ட கருத்து. ஜனநாயக நாட்டில் கருத்து சுதந்திரம்  அனைவருக்கும் பொதுவானது. அவருடைய கருத்து உங்களுடைய கருத்தோடு ஒத்திருக்க வேண்டும் என்று நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது. அதே  நேரம் அதை விமர்ச்சிக்கும் உரிமை  அனைவருக்கும் உண்டு.

    அனால்  விமர்சனம் என்ற பெயரில் கடந்த  இரண்டு நாட்களாக இளையராஜா மீது  தொடுக்கப்பட்டிருக்கும் சாதீய  வன்மம் கண்டனத்துக்குரியது. இதை  அம்பேத்கர் மக்கள் இயக்கம்  வன்மையாக கண்டிக்கிறது. அரசியல்  ரீதியாக அவர் வைத்த கருத்து  என்பது அவரது உரிமை. இங்கு  எப்படி பெரியாரை, அண்ணாவை,  காமராஜரை, கருணாநிதியை புகழ  ஒருவருக்கு என்ன உரிமை இருக்கிறதோ, அதேபோல் மோடியையும் புகழ  ஒருவருக்கு உரிமை உண்டு. அது  அவரது தனிப்பட்ட பார்வை.  

    அதற்காக கடந்த வாரம்வரை  கொண்டாடப்பட்ட இளையராஜாவை  இந்த வாரம் வரம்பு மீறி  விமர்சிப்பது எந்தவிதத்திலும் அறமாகாது. முக்கியமாக இளையராஜா  பதவிக்கு ஆசைப்பட்டுதான் மோடியை புகழ்ந்திருக்கிறார் என்று கூறுவதெல்லாம் அறிவிலித்தனம்.  கிட்டத்தட்ட அரை  நூற்றாண்டுகளாக அவர்  தமிழ்நாட்டின் முக்கிய முகங்களில் ஒருவராக இருக்கிறார். ஆனால்  இதுவரை அவர் எந்தப் பதவிக்கும்  ஆசைப்பட்டதாக ஒரு தகவல்கூட கிடையாது.

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியேகூட மோடியை புகழ்ந்திருக்கிறார்.  பா.ஜ.க.வுடன் கூட்டணியும்  வைத்திருக்கிறார். கமல்ஹாசன் எத்தனையோ முறை நடுநிலை  என்ற பெயரில் தமிழ்நாட்டுக்கு  ஒவ்வாத பல கருத்துக்களை  கூறியிருக்கிறார். ஆனால்  அப்போதெல்லாம் ஏன் இவ்வளவு  பூதாகரமாக மாறவில்லை.  இளையராஜா ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்.

    அவர்  மோடியை புகழவேக்கூடாது  என்பதெல்லாம் எந்தவிதத்தில் நியாயம்.  இளையராஜா மீது  தாக்குதல் நடத்துபவர்களில்  திராவிட சித்தாந்தத்தை பின்பற்றும்  சிலரின் தாக்குதல் வரம்பு மீறி சென்றுவிட்டது. திராவிடமும், பெரியாரும் இல்லையென்றால் இளையராஜா இசையமைக்கவே  வந்திருக்க முடியாது.

    சாவு வீட்டில்  மோளம் அடித்துக்கொண்டிருக்க வேண்டும் என்றெல்லாம் பதிவுகள்  உலாவுகின்றன. சமூக  வலைதளங்களில் பலர்  அடிப்படைவாதிகளாகவே  இருக்கின்றனர். கருத்தை கருத்தால்  எதிர்கொள்ளுங்கள்.  வன்மத்திற்கும், வன்முறைக்கும்  இடம் தராதீர்கள். இவ்வாறு  அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    ரூ.10 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் சாந்தநாதபுரத்தில் தனியார் பைனான்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு புதுக்கோட்டை திருவள்ளுவர் நகர் 2ம் வீதியை சேர்ந்த செல்வராஜ் மகன் அருண்குமார் (வயது 23) ஊழியராக பணியாற்றி வருகிறார். 


    அப்போது நிறுவனத்தை சேர்ந்த மதுரையை கந்தசாமி, சதீஷ் தேனியை பால், சிவகங்கையை சங்கர் ஆகியோர் உறுப்பினர்களை சேர்த்து விட்டால் அவர்களுக்கு கடன் பெற்று தருவோம் என்றும், உறுப்பினராக சேர ரூ.1000 மற்றும் இன்சுரன்ஸ் பணம் ரூ.9000 என வசூலித்துள்ளனர். 

    ஆனால் கடன் எதுவும் பெற்று தராத காரணத்தினால் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் பணத்தை இழந்தவர்கள் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் மோசடியில் ஈடுபட்ட நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
    மங்கனூர் புனித செபஸ்தியார் ஆலயத்தில் தேர்பவனி விழா நடைபெற்றது.

    புதுக்கோட்டை:


    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் மங்கனூர் புனித செபஸ்தியார் ஆலய தேர்பவனி விழா நடைபெற்றது.  திங்கட்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மலர்களாலும், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த புனித செபஸ்தியாரின் தேர் பவனி விழா நடைபெற்றது.  

    இந்த தேர்பவனி விழாவில் தஞ்சாவூர், திருச்சி, தேவகோட்டை, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான கிறிஸ்தவ பெருமக்கள் கலந்து கொண்டனர்.  

    திருவிழாவை முன்னிட்டு கந்தர்வக் கோட்டையில் இருந்து சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை கந்தர்வகோட்டை காவல்துறை ஆய்வாளர் செந்தில் மாறன் செய்திருந்தார்.  

    விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
    காப்பீட்டு திட்ட குளறுபடிகளை களைய கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அனைத்துத் துறை ஓய்வூதிய சங்கத்தினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட தலைவர்  ராஜசேகர் தலைமையில், துணைத் தலைவர் முத்தையா முன்னிலையில் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.


    ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர்களின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஓய்வூதியர்களால் செலவு செய்யப்பட்டநிலுவையில் உள்ள செலவின தொகையினை உடனே வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக் கான கூடுதல் ஓய்வூதியம் வழங்குவதற்கான வயது வரம்பை 80 வயதிலிருந்து 70 வயதாக குறைக்க வேண்டும். 

    சத்துணவு அங்கன்வாடி பணியாளர் உள்ளிட்ட பல்வேறு ஓய்வூதியர்களுக் கான குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.7 ஆயிரத்து 850 ஆக வழங்க வேண்டும். 

    1.4.2003 தேதிக்கு பிறகு பணியில் அமர்த்தப்பட்ட அனைத்துத்துறை அரசு ஊழியர்களும் பணியிலிருந்து ஓய்வு பெறும்போது பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
    ஆர்ப்பாட்டத்தில் கண்ணன், முண்டன், அருளாந்து, காமாட்டசி, ரங்கசாமி, ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×