என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி மாணவர்களின் படைப்பாற்றல் குறித்த மாபெரும் கண்காட்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் திறன் வெளிப்படுத்தும் படைப்பாற்றல் கண்காட்சி நடைபெற்றது. பொதுவாக நடத்தப்படுகிற கண்காட்சிகளில் அறிவியல் செய்முறைகள் மட்டுமே காட்சிப்படுத்தப்படும்.
அனால் இந்த கண்காட்சியில் அறிவியல் மட்டுமல்லாது தமிழ், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல், கணிணியியல் என அனைத்துப் பாடத்திற்குமான அறிவினை செய்முறையினை மாணவர்கள் வெளிப்படுத்திட வேண்டும் என்று பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி அறிவுறுத்தி இருந்தார்.
அதன்படி ஏற்பாடு செய்திருந்த மாணவர்களின் இந்த கண்காட்சியினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், மாணவர்களின் திறமைகள் நம்மை வியக்க வைக்கின்றன. மாணவர்கள் தங்கள் படைப் பாற்றலை விளக்கும் விதமும், மொழி ஆளுமையாகவும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.
படைப்பா£ற்றல் திறமைகளைப் பாராட்டுவதோடு மாணவர்கள் கட்டிக் காக்கும் ஒழுக்கத்தையும் மனதாரப் பாராட்டுகிறேன். பள்ளி நிர்வாகத்துக்கும் ஆசிரியர்களுக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் சாமி சத்தியமூர்த்தி பாரட்டினார். பாடவாரியாக வகுப்பறைகள் ஒதுக்கபட்டு மாணவர்கள் செய்முறைகளை காட்சிப்படுத்தி விளக்கமளித்தனர்.
கண்காட்சியில் உலகின் 7 அதிசயங்களில் சீனப்பெருஞ்சுவர், தாஜ்மகால் மற்றும் வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவர் சிலை மற்றும் ஏராளமான செய்முறைகள் இடம் பெற்றன. கண்காட்சியில் அனைவருடைய பார்வையையும் கவர்ந்த செங்கோட்டையை உருவாக்கிய மாணவன் ராகவுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
மழலையர் வகுப்புகளில் மாணவர்கள் சமூக கடமையாற்றுகின்ற மருத்துவர்கள் காவலர்கள் ராணுவ வீரர்கள் உடையணிந்து வந்திருந்த தங்கள் கடமைகளை மழலை மொழியில் விளக்கியது காண்போரைக் கவர்ந்தது.
கண்காட்சியில் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த புதுகை நகருக்கு பெருமை சேர்க்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் செல்பி பாயிண்டில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

மணமேல்குடி அருகே வெள்ளூரில் பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகேயுள்ள வெள்ளூர் நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சக்தி சேகர் தலைமை தாங்கினார்.
ஒன்றியக் குழு உறுப்பினர் கலைச்செல்வி, ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் கமலவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் முனைவர் ராஜாராமன், கல்வி மாவட்ட துணை ஆய்வாளர் இளையராஜா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சிவயோகம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மகளிர் திட்ட உறுப்பினர்கள், சுய உதவிக்குழுவினர், பெற்றோர்கள், முன்னாள் மாணவர் சங்கத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பள்ளித்தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியன் வரவேற்று பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வெற்றி சான்றிதழை வழங்கினார். வெள்ளூர் நடுநிலைப் பள்ளியின் புதிய பள்ளி மேலாண்மை குழு தலைவராக ரஞ்சிதா ஆறுமுகம், துணைத்தலைவராக நிரோஷா மாரிமுத்து மற்றும் 18 உறுப்பினர்களும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பள்ளியின் சார்பாக வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டன.
ஆசிரியர்கள் சீனிவாசன், ஜெய ஜோதிமணி, சுவாமிநாதன், மனோஜ் குமார் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியை சங்கீதா ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தையொட்டி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் பள்ளி மேலாண்மை குழு சார்பில் நடத்தப்பட்டது.

ஆலங்குடி நூலகத்தில் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா நடைபெற்றது. விழாவிற்கு உலக புத்தக தினம் வாசகர் வட்ட தலைவர் பாபுஜான் தலைமை வகித்தார்.
வாசகர் வட்ட பொருளாளர் கருணாகரன் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத்தலைவர் ரமாராமநாதன் மற்றும்
ஆலங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டு புத்தக கண்காட்சியை துவக்கி வைத்தனர்.
விழாவில் பள்ளி மாணவிகள் மற்றும் வாசகர்கள் கலந்து கொண்டனர்.

ஆலங்குடி புனிதஅற்புத மாதா பள்ளியில் ஆண்டு விழா நடை பெற்றது.
புதுக்கோட்டை:
ஆலங்குடி புனித அற்புதமாதா நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில்நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் ஆர்.கே.குழந்தைசாமி அடிகளார் தலைமை வகித்தார்.
பேரூராட்சி தலைவர் ராசிமுருகானந்தம் மற்றும் துணைத்தலைவர் ராஜேஸ்வரி பழனிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் அருள்அமுதாராணி அனைவரையும் வரவேற்றார்.
திருவரங்குளம் வட்டார கல்வி அலுவலர் கருணாகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். பள்ளி தலைமையாசிரியர் சூசைராஜ் ஆண்டறிக்கை வாசித்தார்.
உதவி பங்குத்தந்தை கித்தேரிமுத்து, பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் அருளானந்து மற்றும் அரசடிப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் மைக்கேல் ஆல்பர்ட் மற்றும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
முடிவில் பள்ளி பட்டதாரி ஆசிரியை மரியம்மாள் நன்றி கூறினர்.

கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் போதை இல்லா சமுதாயத்தை உருவாக்குவோம், போதை பழக்கத்தை அடியோடு ஒழிப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஆவுடையார்கோவில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பேரணி நடத்தினார்கள்.
பேரணியை அறந்தாங்கி கோட்டாட்சியர் சொர்ணராஜ் துவக்கி வைத்தார்.அறந்தாங்கி காவல்துணைத் கண்காணிப்பாளர் தினேஷ்குமார், வட்டாட்சியர் வெள்ளைச்சாமி,
கல்லூரி முதல்வர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணியானது ஆவுடையார்காவில் கடை வீதிவழியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அடைந்தது. நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், வருவாய் ஆய்வாளர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தனியார் பள்ளியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை :
ஆண்டுதோறும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு கடைபிடிக்கத் தொடங்குவர், ஒரு மாதம் நடைபெறுகின்ற நோன்பு நிகழ்வில் மாலையில் ஒரு வேளை மட்டும் பேரீட்சைப்பழம், கஞ்சி உள்ளிட்ட ஆகாரங்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இதில் ஏழை எளிய இஸ்லாமிய மக்களுக்கென இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அவர்களுக்கு தரமான உணவுகள் வழங்கப்படுகிறது. அந்தவகையில் செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுதோறும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் கண்ணையன் தலைமை வகிக்க பள்ளி முதல்வர் சுரேஷ்குமார் வரவேற்றார். இதில் இஸ்லாமியர்கள், பொதுமக்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு விருந்தோம்பினர்.
முன்னதாக அஜ்ரத் எனும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் சொர்ணராஜ், ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரிசண்முகநாதன், நகர்மன்றத் தலைவர் ஆனந்த், ஒன்றியக்-குழு துணை தலைவர் ஜெயசுதாபொன்கணேசன்,
நகர்மன்ற துணைத் தலைவர் முத்து, ஜமாத் தலைவர் ஷேக் அப்துல்லா, கல்லணைக்கால்வாய் கடைமடை பகுதி பாசனதாரர்கள் சங்கத் தலைவர் கொக்குமடை ரமேஷ், ஜமாத்தார்கள், ரோட்டரி சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்கள், வர்த்தக சங்க தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள், இருபால் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

காதல் விவகாரத்தில் உருட்டுகட்டையால் தாய் மகளை அடித்து கொன்ற சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மாணவநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம் பிள்ளை. இவரது மனைவி ஜெயலட்சுமி. இந்த தம்பதியரின் மகள் சத்யா(வயது 27). பி.எஸ்.சி. நர்சிங் படித்துள்ள இவர் கடந்த 2 ஆண்டுகளாக சென்னையில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தார்.
அப்போது அங்குள்ள ஒரு இளைஞருடன் காதல் வயப்பட்டார். இதையடுத்து காதலனுடன் நெருங்கி பழகி ஊர்சுற்றி வந்ததாக கூறப்பட்டது. இதனை அறிந்த அவரின் தாயார் மகளை ஊருக்கு அழைத்து கண்டித்தார். மேலும் சென்னைக்கு வேலைக்கு செல்லவும் தடைவிதித்தார்.
இருந்தபோதிலும் அவரால் காதலனை மறக்க இயலவில்லை. இதையடுத்து வீட்டில் இருந்த சத்யா, தாய் இல்லாத நேரங்களில் காதலனுடன் செல்போனில் பேசி வந்தார். பின்னர் ஒரு கட்டத்தில் காதலனோடு சேர்ந்து வாழ முடிவு செய்த அவர் நேற்று முன்தினம் பெட்டி படுக்கையுடன் சென்னைக்கு கிளம்ப தயாரானார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி சென்னை செல்ல எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து தாய்க்கும் மகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெயலட்சுமி, நீ உயிரோடு இருந்தால்தானே அவனோடு ஓடுவாய் என கூறியபடி அங்கு கிடந்த உருட்டுக்கட்டையால் மகளை சரமாரியாக தாக்கினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த சத்யா அங்கேயே மயங்கி சரிந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதுபற்றி நாகுடி போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சத்யா சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கனவே போலீஸ் கஸ்டடியில் இருந்த ஜெயலட்சுமியை இன்று கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
கந்தர்வகோட்டையில் ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
முகாமிற்கு ஒன்றிய ஆணையர் காமராஜ், திலகவதி ஆகியோர் தலைமை தாங்கினர்.பயிற்சி முகாமில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்
கடைபிடிக்க வேண்டி ய வழிமுறைகள் மற்றும் பயனாளிகள் தேர்வு, ஊராட்சியில் தங்களின் பங்கு குறித்து உதவி ஆணையர் பார்த்திபன் விளக்கமாக எடுத்துக் கூறினார்.
முகாமில் கலந்து கொண்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பணம் மோசடியில் ஈடுபட்ட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் உடையாளி-பட்டி கோவில்-தெருவை சேர்ந்த மருதையா மகன் ஜெயபால்(வயது37) கடந்த 2019 வருடம் புதுக்கோட்டை அரசு போக்கு-வரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரியும் கீரனூர் காந்தி நகரை சேர்ந்த லெட்சுமணன் மகன் கண்ணன்,
அன்னவாசல் இந்திரா நகரை சேர்ந்த மருதன் மகன் சங்கர்(43), அதே பகுதியை சேர்ந்த சிவகங்கை அரசு போக்கு-வரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரியும் மூக்கன் மகன் சுதாகர்பாண்டி ஆகியோர் சுகாதாரத்-துறையில் அரசு பணி வாங்-கி தருவதாக கூறி ரூ.2,52,000 பெற்றுள்ளனர்.
ஆனால் வேலையையும் வாங்கி தரவில்லை. பணத்-தையும் திருப்பி தரவில்லை. எனவே ஜெயபால் கொடுத்த புகாரின்-பேரில் கீரனூர் காவல் நிலைய சப்&இன்ஸ்-பெக்டர் மலையரசன் மூன்று பேர் மீது மோசடி உள்ளிட்ட இருப்-பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சங்கரை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றார்.

கத்தியை காட்டி பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் மணவிடுதி பி.மாத்தூர் பகுதியை சேர்ந்த வெங்-கடாசலம் மகன் சிவசங்கர்-(வயது29) இவர் பழனியப்பா கார்னர் பகுதியில் பெட்டி கடைக்கு சென்ற-போது திருவப்பூர் சௌராஷ்டரா கிழக்கு தெருவை சேர்ந்த பொன்னுச்-சாமி மகன் சாத்து என்கிற யோகேஸ்வரன்(23), லெட்சுமிபுரம் 1ம் வீதியை சேர்ந்த சுரேஷ் மகன் சக்திவேல் என்கிற அஞ்சான் சக்தி (19), திலகர் திடல் பகுதியை சேர்ந்த பாபு மகன் ஜெயராமன் என்கிற சோனி(19) ஆகியோர் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர்.
அதற்கு சிவசங்கர் கொடுக்க மறுக்கவே அவரது பையில் இருந்த ரூ.2000 ஆயிரத்தை கத்திகளை காட்டி மிரட்டி பறித்துள்ளனர்.
இதுகுறித்து சிவசங்கர் கொடுத்த புகாரின்-பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்-சந்திரன் மூன்று பேரை கைது செய்தனர். ஏற்கனவே இவர்கள் மீதுகொலை, கொலை முயற்சி, ராப்பரி என பல வழக்குகள் உள்ளன.

நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
புதுக்கோட்டை:
ஆலங்குடி வடகாடு முக்கத்தில் நாம் தமிழர் கட்சியினர் மத்திய, மாநில அரசுகளின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் துரை பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் த
னசேகரன், ஹூமாயூன் கபீ , சாயல்ராம், சரவணன் , அணீஸ் பாத்திமா உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பெண் குழந்தை மர்மச்சாவு நடவடிக்கை கோரி தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வெள்ளையாண்டிபட்டியை சேர்ந்தவர் கந்தசாமி, இவருக்கு கவிதா என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தை உள்ளிட்ட 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த தம்பதியினர் கருத்துவேறுபாடினால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கந்தசாமியிடம் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தையும், கவிதாவிடம் ஒரு பெண் குழந்தையும் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கந்தசாமியிடம் இருந்த பிரதிஷா என்ற 8 வயது பெண் குழந்தை, தலைவலியினால் பொன்னமராவதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வலையபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு காதில் ரத்தம் வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதனை அறிந்த கவிதா, மகள் பிரதிஷா சாவில் மர்மம் உள்ளது, அதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அளித்த புகாரின் பேரில், பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாரதி, சிறுமி பிரதிஷாவின் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உயிரிழந்த பிரதிஷாடனர்.