என் மலர்
புதுக்கோட்டை
வடகாடு முத்துமாரியம்மன் கோவில் தீர்த்த உற்சவம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு முத்துமாரியம்மன் கோவில் தீர்த்த உற்சவம் நடைபெற்றது.
பல்வேறு சிறப்புடைய இக்கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 17 ந் தேதி தொடங்கியது. இதை தொடர்ந்து மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அம்மன் வீதியுலா ஆகியன நடைபெற்றுவந்தன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. தொடர்ந்து தீர்த உற்சவம் நேற்று நடைபெற்றது. இதனையொட்டி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலை முதல் உறவின் முறைகாரர்கள் மீது மஞ்சள் நீர் ஊற்றி விளையாடினர். தொடர்ந்து,
கோவிலில் அம்மனுக்கு மஞ்சள் நீரால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், அம்மனை வாகனத்தில் எழுந்தருளச் செய்து, தேரோடும் 4 வீதிகள் வழியே பக்தர்கள் வாகனத்தை இழுத்து வந்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மீது மஞ்சள் தீர்த்தம் தெளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வடகாடு போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.
பட்டமரத்தான் கோவிலின் முன்பு அமைக்கப்பட்ட கல்லிலான வசந்த மண்டபம் குடமுழுக்குவிழா தொடங்கியது.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி நகரின் காவல் தெய்வமாக விளங்கும் பட்டமரத்தான் கோவிலின் முன்பு அமைக்கப்பட்ட கல்லிலான வசந்த மண்டபம் குடமுழுக்குவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
விக்னேஸ்வரபூஜை மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்று நேற்று பட்டமரத்தானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூர்ணாகுதி நடைபெற்றது. அதையடுத்து காலை 10.35 மணியளவில் வைரவன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரினை ஊற்று குடமுழுக்கு செய்வித்தனர்.
சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர். குடமுழுக்கு விழா வர்ணனைகளை தமிழாசிரியர் முருகேசன் தொகுத்து வழங்கினார். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி காவல் துறையினரும், விழாவிற்கான ஏற்பாடுகளை பட்டமரத்தான் விழாக்குழுவினரும் செய்திருந்தனர்.
தொடர்ந்து நாளை (27-ந்தேதி) வட்சார்ச்சனை விழா நடைபெற உள்ளது. 29ந்தேதி பூச்சொரிதல் விழா தொடங்கி 1ந்தேதி வரை நடைபெற உள்ளது.

விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டாரம் துவார் கிராமத்தில் விவசாயிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் அண்ணா அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள
துவார் ஊராட்சியில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் மண் வளப்பாதுகாப்பு மற்றும் மண்வள மேம்பாடு குறித்த விவசாயிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பலதா தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் திருப்பதி முன்னிலை வகித்தார். பயிற்சி முகாமில் வேளாண்மை உதவி இயக்குனர் மதியழகன் கலந்துகொண்டு மண் வளத்தின் முக்கியத்துவம், மண் வளம் பாதுகாப்பதன் அவசியம் மண் பரிசோதனையின் அவசியம் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.
கந்தர்வகோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அன்பரசன் பேசும்பொழுது, மண் பரிசோதனை செய்து மண்வள அட்டை பரிந்துரைப்படி உரமிடுவதால் உர செலவினை குறைத்து விவசாயிகள் கூடுதல் லாபம் பெறலாம் என எடுத்துரைத்தார்.
பயிற்சி முகாமில் வம்பன் வேளாண் அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் நெல்சன் நவமணி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். முன்னதாக அனைவரையும் துணை வேளாண்மை அலுவலர் சுப்பிரமணியன் வரவேற்று பேசினார்.உதவி வேளாண்மை அலுவலர் நாகேந்திரன் நன்றி கூறினார்.

வடகாடு முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் ஒன்றாக வடகாடு முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 17ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து, மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
பின்னர் அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. மேலும் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் தேரில் எழுந்தருளினார். பின்னர் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு வீதிகளிலும் அசைந்தாடி வந்தது.
அப்போது பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதில் வடகாடு சுற்றுவட்டாரத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை 4 மணிக்கு மஞ்சள் விளையாட்டு நடைபெறும்.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா முள்ளங்குறிச்சியில் கடந்த 17ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
போட்டி நடைபெற்ற போது பார்வையாளர்கள், மாடுபிடி வீரர்கள் என 25 பேர் காயம் அ டைந்தனர். இதில் மழையூர் அருகே தீத்தானிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ரெங்கசாமி மகன் கணேசன் காளை முட்டியதில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக கணேசன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பாக இப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி புதுக்கோட்டை தனியார் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் பொறியாளர் பெர்லின் தாமஸ் தலைமை தாங்கி வரவேற்புரையாற்றினார்.
ரோட்டரி மாவட்டம் 3000த்தின் ஆளுநர் டாக்டர். ஜெயக்கண் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு இஸ்லாத்தின் பெருமைகளை கூறி அனைவரையும் வாழ்த்தி பேசினார். எம்.எல்.ஏ. முத்துராஜா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் கருப்பசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் தமிழ்ச்செம்மல் கவிஞர். தங்கம்மூர்த்தி, டிஇஎல்சி தேவாலயத்தின் கௌரவ சபைகுரு மறைதிரு. பால் ஜேக்கப் ஜெயக்குமார் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டு நோன்பு நோற்றுவரும் இஸ்லாமிய சகோதரர்களை வாழ்த்தி பேசினர்.
ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் அந்தோணிசாமி, ரோட்டரி துணை ஆளுநர் சிவாஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை திட்ட இயக்குனர்கள் பொறியாளர் பஷீர் முகமது, அக்பர் அலி, மருத்துவர். அகமது மர்சூக், பக்ருதீன் அலி, காஜா மைதீன், முகமது தாரிக் ஆகியோர் உள்ளிட்ட சங்கத்தின் உறுப்பினர்கள் செய்திருந்தனர். நிறைவில் சங்கத்தின் செயலாளர் பொறியாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

கந்தர்வக்கோட்டையில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை ஊராட்சி மன்றத்தின் சிறப்பு கிராம சபை கூட்டம் சிவன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி குறித்த கருத்துக்கள் விவாதிக்கப்பட்டது மேலும் ஊராட்சி மன்றத்தின் வரவு செலவுகள் வாசிக்கப்பட்டு பொதுமக்கள் சம்மதம் பெறப்பட்டது.
கூட்டத்தில் சிறப்பு பற்றாளராக கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய உதவி ஆணையர் பார்த்திபன் கலந்துகொண்டார். மேலும்ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், துணைத்தலைவர் வெங்கடேசன், ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பழைய கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற கூட்டம் தலைவர் ராணி முருகேசன் தலைமையிலும் கல்லாக்கோட்டை ஊராட்சி மன்ற கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பவுன்ராஜ் தலைமையிலும்,
அரவம் பட்டி கிராம சபை கூட்டம் சிவரஞ்சனி சசிகுமார் தலைமையிலும், கோமாபுரம் ஊராட்சி மன்ற கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பு தலைமையிலும் சங்கம் விடுதி ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சங்கம் விடுதி பெருமாள் தலைமையில் நடைபெற்றது.

சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் வாராப்பூர் சமுதாயக் கூடத்தில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தின விழாவை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஐ.மலர்விழிநாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஒன்றிய பற்றாளராக. ஒன்றிய மேற்பார்வையாளர் பெரியய்யா முன்னிலை வகித்தார். இக் கூட்டத்தில் வேளாண்மைத் துறை, கல்வித்துறை, வனத்துறை, சுகாதாரத்துதுறை, ஊரக உள்ளாட்சி துறை, அதிகாரிகள் அனைவரும் கலந்துகொண்டு மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காண்பதாக உறுதி கூறினார்கள்.
மேலும் வருங்காலத்தில் வாராப்பூர் ஊராட்சியில் எல்லோருக்கும் குடிநீர், மருத்துவ பாதுகாப்பு, சிறந்த கட்டமைப்பு வசதிகள் அடைந்தே தீர்வது என்று கிராம சபை மூலமாக தீர்மானம் ஏற்றப்பட்டது.
இதில் ஊராட்சியின் துணைத் தலைவர் எஸ்.சித்ரா, வார்டு உறுப்பினர்கள் பொன்னையா, பழனியாயி, மகாலட்சுமி, பழனிச்சாமி, அறுவுகம் ஆகியோர் கலந்து கொண்டார்கள். மேலும் இக்கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் வெள்ளைச்சாமி நன்றி உறையாற்றினார்.

சமூக நல்லிணக்க திருவிழாவாக இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சியி ன் சார்பில் அன்பால் இணைவோம் என்ற தலைப்பில் தனியார் திருமண மண்டபத்தில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்வு ம.ஜ.க. மாவட்ட செயலாளர் முஹம்மது ஜான் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, ம.ஜ.க. மாநில செயலாளர்கள் துரை முஹம்மது, பேரை அப்துல் சலாம், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சம்பத், மாரிக்கண்னு, உதவி தொடக்க கல்வி அலுவலர் திருமேணிநாதன் ( ஓய்வு ) ரோட்டரி சங்கம் ஜேம்ஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிலாவிடுதி மோகன், ஜமாஅத் கமிட்டி தலைவர் கலிபுல்லா, தமிழரசன், வர்த்தக சங்க, வியாபாரிகள் சங்கம், ரோட்டரி சங்கம், நிர்வாகிகள், அனைத்து கட்சி பிரமுகர்கள், சமூக நல ஆர்வலர்கள், ஜமாத்தார்கள், மஜக மாவட்ட , ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
முன்னதாக கலீல் ரஹ்மான் உலவி ஹஜ்ரத் கிராத் ஓதி நிகழ்வை தொடங்கி வைத்தார் இறுதியில் மஜக மாவட்ட இளைஞரணி செயலாளர் அப்துல் காதர் நன்றி கூறினார்.

குளத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பனங்குளத்தைச் சேர்ந்த மணி மகன் கோபு ( வயது 32).இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைக ள் உள்ளனர். இந்நிலையில் கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார்.
அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற கோபு நீரில் மூழ்கியுள்ளார். இதை பார்த்த அங்கிருந்த சிலர் அளித்த தகவலைத் தொடர்ந்து, அங்கு சென்ற தீயணைப்பு நிலையத்தினர் நீண்ட நேரம் தேடி கோபுவை சடலமாக மீட்ட னர். இதுகுறித்து கீரமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மேல் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்வியில் மட்டுமல்லாமல் குழந்தைகளின் உடல் நலத்திலும் பெற்றோர்கள்கவனம் செலுத்த வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கவிநாடு கிழக்கு ஊராட்சியில் தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா முன்னிலை வகித்தார். ஊராட்சிமன்றத் தலைவர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது, கிராமங்கள் வளர்ச்சியையும், அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றும் வகையில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகிறது. பெற்றோர்கள், பள்ளிக் குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்தை கவனிப்பதோடு அவர்களின் உடல்நலனையும் பேணிகாக்கும் வகையில், சத்தான உணவுகளை அளிக்க வேண்டும். கல்வியில் சிறந்தோங்க தமிழக அரசின் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
உள்ளாட்சியில் பொறுப்புகளுக்கு பெண்களுக்கு ஒதுக்கீடு 50 சதவீதம் தமிழக அரசு அளித்துள்ளது. இந்த வாய்ப்பில் பதவிக்கு வந்துள்ள பெண்கள் அவர்கள் தனித்துவமுடன் செயல்பட தகுதிகளை வளர்த்துக் கொண்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார்.

பள்ளிவாசலுக்கு எதிரே ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வீட்டிலிருந்த ஒருவரை கொலை செய்து விட்டு 175 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி :
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா ஆவுடையார்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் முகமது நிஜாம் (வயது 52). அதே பகுதியின் முன்னாள் ஜமாத் தலைவரான இவர் கறம்பக்குடியில் ஆப்டிக்கல்ஸ் கடை வைத்துள்ளார்.
மேலும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் செய்து வந்தார். இவரது மனைவி ஆயிஷா பீவி (48). இந்த தம்பதிக்கு ராஜாமுகமது, சேக் அப்துல்காதர் என்ற இரண்டு மகன்களும், பர்கானா என்ற ஒரு மகளும் உள்ளனர்.
மகள் பர்கானாவிற்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். மகன்கள் இருவரும் வெளியூரில் உள்ள ஆப்டிக்கல் கடையை நிர்வகித்து வருகின்றனர். அவர்கள் அங்கேயே தங்கிக்கொள்வார்கள். அவ்வப்போது ஆவுடையார்பட்டினம் வந்து செல்வது வழக்கம்.
எனவே முகமது நிஜாமும், அவரது மனைவி ஆயிஷா பீவியும் ஆவுடையார்பட்டினத்தில் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். தற்போது ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முகமது நிஜாம் நோன்பு கடைபிடித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் வீட்டின் எதிர்புறம் உள்ள பள்ளிவாசலில் முகமது நிஜாம் தொழுகையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் வீட்டின் முன்பக்க வராண்டாவில் உட்கார்ந்து செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது வீட்டின் சுற்றுச்சுவரில் ஏறிக்குதித்து 3 மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். இதனை சற்றும் எதிர்பாராத முகமது நிஜாம் அவர்களை பார்த்து யார் நீங்கள், உங்களுக்கு என்ன வேண்டும், ஏன் சுவர் ஏறிக்குதித்தீர்கள்? என்று கேட்டார்.
அவரது கேள்விக்கு எந்தவித பதிலும் அளிக்காத மர்ம நபர்கள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முகமது நிஜாமின் கழுத்தை ஆட்டை அறுப்பது போல் கரகரவென அறுத்துள்ளனர். அவர்களின் பிடியில் இருந்து விடுபட முகமது நிஜாம் போராடியும் பலன் அளிக்கவில்லை. இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே துடிதுடித்து இறந்தார்.
இதனை வீட்டிற்குள் இருந்த முகமது நிஜாமின் மனைவி ஆயிஷா பீவி அறிந்திருக்கவில்லை. இதனைத்தொடர்ந்து வீட்டின் உள்ளே மர்ம நபர்கள் சென்றனர். கையில் ரத்தம் சொட்ட சொட்ட கத்தியுடன் திடீரென்று வந்த அவர்களை பார்த்ததும் ஆயிஷா பீவி அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அந்த கும்பல் ஆயிஷா பீவியின் கை, கால்களை கட்டி போட்டுவிட்டு, பீரோ சாவியை தரும்படி கேட்டுள்ளனர். அவர் தர மறுக்கவே ரத்தக்கறையுடன் உள்ள கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இதில் உயிருக்கு பயந்த ஆயிஷாபீவி பீரோ சாவியை அவர்களிடம் கொடுத்துள்ளார்.
உடனே சாவியை வாங்கிய மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 175 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். அதனை தொடர்ந்து கை, கால்கள் கட்டப்பட்டிருந்த ஆயிஷா பீவி மெல்ல மெல்ல நகர்ந்து சென்று செல்போனை எடுத்து தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலையடுத்து விரைந்து வந்து பார்த்த உறவினர்கள் முகமதுநிஜாம் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சம்பவம் குறித்து மணமேல்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் வீட்டினுள்ளே கட்டப்பட்டு கிடந்த ஆயிஷா பீவியை காப்பாற்றினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷாபார்த்தீபன் சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் வழக்குப்பதிவு செய்த மணமேல்குடி போலீசார் முதல் கட்ட விசாரணையை தொடங்கினர்.
அதேபோல் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணனும் வந்து கொலை, கொள்ளை நடந்த இடத்தை அங்குலம், அங்குலமாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவரது உத்தரவுப்படி கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தொழில் அதிபர் நகை, பணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது தொழில் போட்டியில் அவரை கொலை செய்துவிட்டு நகைக்காக கொலை நடந்தது போன்று செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் முன்விரோத காரணங்கள் உள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் நடந்த இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வந்து கொள்ளையர்கள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இதையும் படிக்கலாம்...சீனர்களுக்கு வழங்கிய சுற்றுலா விசாவை ரத்து செய்தது இந்தியா