என் மலர்
உள்ளூர் செய்திகள்

கந்தர்வகோட்டையில் கிராம சபை கூட்டம் நடை பெற்ற போது எடுத்த படம்.
கந்தர்வகோட்டையில் சிறப்பு கிராமசபை கூட்டம்
கந்தர்வக்கோட்டையில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை ஊராட்சி மன்றத்தின் சிறப்பு கிராம சபை கூட்டம் சிவன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி குறித்த கருத்துக்கள் விவாதிக்கப்பட்டது மேலும் ஊராட்சி மன்றத்தின் வரவு செலவுகள் வாசிக்கப்பட்டு பொதுமக்கள் சம்மதம் பெறப்பட்டது.
கூட்டத்தில் சிறப்பு பற்றாளராக கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய உதவி ஆணையர் பார்த்திபன் கலந்துகொண்டார். மேலும்ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், துணைத்தலைவர் வெங்கடேசன், ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பழைய கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற கூட்டம் தலைவர் ராணி முருகேசன் தலைமையிலும் கல்லாக்கோட்டை ஊராட்சி மன்ற கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பவுன்ராஜ் தலைமையிலும்,
அரவம் பட்டி கிராம சபை கூட்டம் சிவரஞ்சனி சசிகுமார் தலைமையிலும், கோமாபுரம் ஊராட்சி மன்ற கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பு தலைமையிலும் சங்கம் விடுதி ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சங்கம் விடுதி பெருமாள் தலைமையில் நடைபெற்றது.

Next Story